search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    சங்யோங் இ100
    X
    சங்யோங் இ100

    சங்யோங் இ100 எலெக்ட்ரிக் எஸ்யுவி டீசர் வெளியீடு

    சங்யோங் நிறுவனத்தின் புதிய இ100 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

    தென்கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான சங்யோங் மோட்டார் இ100 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் டீசர் படங்களை வெளியிட்டு உள்ளது. இந்த கார் கொராண்டோ மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வருகிறது.

    சர்வதேச சந்தையில் சங்யோங் இ100 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் ம்றும் கியா இ நிரோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. வடிவமைப்பில் புதிய இ100 பார்க்க கொராண்டோ போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய காரில் ஸ்டிரீம்லைன் மற்றும் ஏரோடைனமிக் லைன்கள் வழங்கப்படுகின்றன.

    சங்யோங் இ100

    சங்யோங் இ100 மாடலில் 188 பிஹெச்பி திறன் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 153 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. 

    இந்த காரில் 61.5 கிலோவாட் பேட்டரி பேக் வழங்கப்படும் என்றும் இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 420 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் சங்யோங் இ100 அல்லது கொராண்டோ இவி மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    இந்தியாவில் இந்த கார் மஹிந்திரா இகேயுவி300 மாடலுக்கு போட்டியாக அமையும். இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 
    Next Story
    ×