என் மலர்
ஆட்டோமொபைல்

ஜீப் காம்பஸ் நைட் ஈகிள்
விரைவில் இந்தியா வரும் ஜீப் காம்பஸ் ஸ்பெஷல் எடிஷன்
ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஜீப் இந்தியா நிறுவனம் விரைவில் ஸ்பெஷல் எடிஷன் காம்பஸ் எஸ்யுவி மாடலை நைட் ஈகிள் பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய லிமிட்டெட் எடிஷன் லாங்கிடியூட் பிளஸ் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. புகிய காருக்கான டீசரும் வெளியாகி இருக்கிறது.
புதிய காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இதன் கிரில், விண்டோ லைன் உள்ளிட்டவற்றில் கிளாஸ் பிளாக் டீடெயிலிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஜீப் பேட்ஜ்களும் பிளாக் நிறத்தில் இருக்கிறது. இதன் 18 இன்ச் அலாய் வீல்களும் கிளாஸ் பிளாக் நிறம் கொண்டிருக்கின்றன.
காரின் உள்புறம் டெக்னோ பார்ட் லெதர் சீட், இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் ஏசி வென்ட்களை சுற்றி கிளாஸ் பிளாக் ட்ரிம் செயய்ப்பட்டு உள்ளது. புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் மாடலில் 8.4 இன்ச் யுகனெக்ட் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது.

இத்துடன் புஷ்-பட்டன் ஸ்டார்ட், கீலெஸ் என்ட்ரி, டூயல் சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், செனான் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பிரேக் அசிஸ்ட், இஎஸ்பி மற்றும் ஹில் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷனில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டர்போ டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. இவை முறையே 163 பிஹெச்பி, 250 என்எம் டார்க் மற்றும் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோ, டீசல் என்ஜினுடன் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவை ஆப்ஷன்களாக வழங்கப்படுகின்றன.
Next Story






