search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டொயோட்டா கிளான்ஸா
    X
    டொயோட்டா கிளான்ஸா

    எரிபொருள் அமைப்பில் கோளாறு - கிளான்ஸா மாடலை திரும்ப பெறும் டொயோட்டா

    டொயோட்டா நிறுவனம் தனது கிளான்ஸா மாடல் கார்களில் சிறு கோளாறு இருப்பதால் அவற்றை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கிளான்ஸா பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலின் 6500 யூனிட்களை திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது. இந்த மாடல்களில் என்ஜினுக்கு எரிபொருள் செலுத்தும் அமைப்பில் கோளாறு கண்டறியப்பட்டதே திரும்ப பெறப்படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. 

    ஏப்ரல் 2 ஆம் தேதி துவங்கி அக்டோர் 6, 2019 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கிளான்ஸா யூனிட்களில் இந்த கோளாறு இருப்பதாக டொயோட்டா நிறுவனம் அறிவத்து உள்ளது. 

     டொயோட்டா கிளான்ஸா

    கோளாறு உள்ள வாகனங்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை டொயோட்டா விற்பனை மைய அதிகாரிகள் தொடர்பு கொண்டு வாகனத்தை கட்டணமின்றி சரி செய்து வழங்குவர். 

    டொயோட்டா கிளான்ஸா மாடல் மாருதி சுசுகி பலேனோ மாடலின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். தோற்றத்தில் இரு மாடல்களும் ஒரே மாதிரி காட்சியளிக்கும். எனினும், டொயோட்டா சார்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. 
    Next Story
    ×