search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3
    X
    பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3

    460 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்ட பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

    460 கிலோமீட்டர் செல்லும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஐஎக்ஸ்3 மாடல் அறிமுகம் செய்தது. புதிய கார் முதற்கட்டமாக சீன சந்தையில் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. ஐந்தாம் தலைமுறை இடிரைவ் பவர்டிரெயின் கொண்டிருக்கும் புதிய ஐஎக்ஸ்3 மாடல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருக்கிறது.

    தோற்றத்தால் இந்த கார் பார்க்க மூன்றாம் தலைமுறை எக்ஸ்3 போன்றே காட்சியளிக்கிறது. பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் மாடலில் புதியி கிரில், பானரோமிக் சன்ரூஃப், ஆட்டோ டெயில்கேட் மற்றும் 510 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது.  

     பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3

    இத்துடன் 19 இன்ச் ஏரோ வீல்கள், ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே, ஸ்போர்ட்ஸ் சீட், 3 சோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஹார்மன் கார்டன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பிஎம்டபிள்யூ கார் 282 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.8 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு அதிகபட்சமாக 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள 80கிலோவாட் பேட்டரி பேக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 460 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனுடன் வரும் 150 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு பேட்டரி 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 34 நிமிடங்களே ஆகும். இத்துடன் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும்.   
    Next Story
    ×