search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    நிசான் ஆரியா
    X
    நிசான் ஆரியா

    நிசான் ஆரியா எலெக்ட்ரிக் எஸ்யுவி அறிமுகம்

    நிசான் நிறுவனத்தின் ஆரியா எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    நிசான் நிறுவனத்தின் ஆரியா எலெக்ட்ரிக் எஸ்யுவி ப்ரோடக்ஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய எஸ்யுவி மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 

    புதிய நிசான் ஆரியா மாடல் ஒற்றை மோட்டார் ரியர்-வீல் டிரைவ் மற்றும் ட்வின் மோட்டார் 4-வீல் டிரைவ் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் முறையே 63 கிலோவாட் மற்றும் 87 கிலோவாட் பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. இதன் 63 கிலோவாட் பேட்டரி கொண்ட ஒற்றை மோட்டார் மாடல் 218 பிஹெச்பி பவர் மற்றும் 360 கிலோமீட்டர் வரை செல்லும்.

     நிசான் ஆரியா

    87 கிலோவாட் பேட்டரி கொண்ட மாடல் 242 பிஹெச்பி பவர் மற்றும் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இரண்டு மாடல்களும் 300 என்எம் டார்க் வழங்குகிறது. 

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.5 நொடிகளில் எட்டிவிடும். நிசான் ஆரியா மாடல் மணிக்கு அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 

    புதிய நிசான் ஆரியா மாடல் சர்வதேச சந்தையில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. இந்த மாடல் டெஸ்லா மாடல் வை மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஐடி4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

    Next Story
    ×