என் மலர்
முகப்பு » Ford Mustang
நீங்கள் தேடியது "Ford Mustang"
2020 ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி GT500 சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
2020 ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி GT500 புதிய புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஃபோர்டு இதுவரை வெளியிட்டதில் GT500 மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும்.
புதிய 2020 ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி GT500 ஷெவர்லே கேம்ரோ ZL1 1LE மற்றும் டாட்ஜ் சேலெஞ்சர் ஹெல்கேட் மாடல்களுக்கு போட்டியாக அமையும். ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி GT500 சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட 5.2 லிட்டர் வி8 இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த இன்ஜின் 700பிஎஸ் செயல்திறன் கொண்டிருக்கும் என்றும் GT500 மோட்டார் வழக்கமான 90-டிகிரி கிரான்க்ஷிஃப்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. GT350 மாடலில் ஐரோப்பிய ஃபிளாட்-பிளேன் கிரான்க்ஷேஃப்ட் 5.2 லிட்டர் வி8 இன்ஜின் வழங்கப்பட்டு இருந்தது.
புகைப்படம்: நன்றி caranddriver
புதிய ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி GT500 மாடலில் ஃபோர்டு சமீபத்தில் அறிமுகம் செய்த 10-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுமா அல்லது 7-ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
சமீபத்தில் ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி GT500 சோதனை செய்யப்பட்டதில் புதிய கார் நீல நிறம் மற்றும் டூயல் வைட் ரேசிங் ஸ்டிரைப்களை கொண்டிருப்பது தெரியவந்தது. புதிய டீசர் மற்றும் ஸ்பை படங்களில் ஷெல்பி GT500 ஹூட் பெரிய வென்ட் மற்றும் ஃபென்டர்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் இம்போசிங் கிரில் மற்றும் முன்பக்கம் பெரிய ஸ்ப்லிட்டர் கொண்டிருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்கலில் மிகவும் கவர்ச்சிகர ஃபென்டர்கள் மற்றும் தலைசிறந்த வடிவமைப்பு காரின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.
×
X