என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இணையத்தில் லீக் ஆன டாடா கார் ஸ்பை படங்கள்
Byமாலை மலர்2 July 2020 10:47 AM GMT (Updated: 2 July 2020 10:47 AM GMT)
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் டிசிடி மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. புதிய கார் ஸ்பை படங்கள் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வெளியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து புதிய ஸ்பை படங்கள் தற்சமயம் வெளியாகி உள்ளது.
டாடா நெக்சான் டிசிடி இம்முறை பூனே பகுதியில் சோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஸ்பை படங்களின் படி புதிய டாடா கார் டூயல் டோன் நிறங்களில் கிடைக்கும் என்றும் இதன் அலாய் வீல்கள் தற்போதைய ஃபேஸ்லிப்ட் மாடல்களில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தற்போதைய நெக்சான் மாடல்கள் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 118 பிஹெச்பி பவர், 179என்எம் டார்க் மற்றும் 108 பிஹெச்பி பவர், 260 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் விலை ரூ. 6.95 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.70 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய டிசிடி மாடல் விலை இதைவிட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்றே தெரிகிறது.
Next Story
×