search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பிகாஸ் ஏ2
    X
    பிகாஸ் ஏ2

    பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

    ஆர்ஆர் குளோபல் நிறுவனத்தின் பிகாஸ் பிராண்டு இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    ஆர்ஆர் குளோபல் நிறுவனத்தின் பிகாஸ் பிராண்டு இந்தியாவில் இரண்டு புதிய ஸ்கூட்டர் மாடல்களை ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 1.4 லட்சம் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.  

    பி8 மற்றும் ஏ2 என அழைக்கப்படும் இரண்டு ஸ்கூட்டர்கள் முறையே மூன்று மற்றும் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பி8 மாடலில் 1900 வாட், ஹப்-மவுண்ட் செய்யப்பட்ட மோட்டார் மற்றும் 1.45 கிலோவாட் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. பி8 மாடலில் லீட் ஆசிட் பேட்டரி அல்லது கழற்றக்கூடிய லித்தியம் அயன் பேட்டரிகளை பயன்படுத்த முடியும்.
    பிகாஸ் பி8
    பி8 மாடல் லீட்-ஆசிட் மாடல், லித்தியம் அயன் மாடல் மற்றும் எல்1 தொழில்நுட்பம் கொண்ட மாடல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. மூன்று வேரியண்ட்களும் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் டாப் மாடலில் நேவிகேஷன் அசிஸ்ட், ரைட் மெட்ரிக்ஸ், ஜியோ ஃபென்சிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பிகாஸ் ஏ2 மாடலில் 250 வாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் லீட் ஆசிட் பேட்டரி அல்லது கழற்றக்கூடிய 1.29 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.  பிகாஸ் பி8 மற்றும் ஏ2 ஸ்கூட்டர்கள் மூன்றுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கின்றன. இவை புளூ, வைட் மற்றும் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    Next Story
    ×