search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா ஹெச்பிஎக்ஸ்
    X
    டாடா ஹெச்பிஎக்ஸ்

    இணையத்தில் லீக் ஆன டாடா ஹெச்பிஎக்ஸ் ப்ரோடக்ஷன் மாடல் ஸ்பை படங்கள்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெச்பிஎக்ஸ் ப்ரோடக்ஷன் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெச்பிஎக்ஸ் மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளியீட்டிற்கு முன் இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வரிசையில் புதிய டாடா கார் ஸ்பை வீடியோ தற்சமயம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் புதிய கார் சோதனை செய்யப்படுகிறது.
     டாடா ஹெச்பிஎக்ஸ்
    ஸ்பை வீடியோவில் வை வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள், புதிய அலாய் வீல்கள், ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை தெளிவாக காட்சியளிக்கின்றன. புதிய டாடா கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ALFA பிளாட்ஃபார்மில், இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாக்கப்படுகிறது. 

    முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த எஸ்யுவி மாடலினை 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்தது. அப்போதே இந்த காரின் 90 சதவீத பணிகள் நிறைவுற்றதாக தெரிவிக்கப்பட்டது. 

    புதிய காரில் தற்போதைய டாடா அல்ட்ராஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். 
    Next Story
    ×