என் மலர்
ஆட்டோமொபைல்

2019 இஐசிஎம்ஏ
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆட்டோ விழா
உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் பிரபல ஆட்டோ விழாவும் ரத்து செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு உலகின் மிகமுக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் 2020 இஐசிஎம்ஏ விழா இணைந்துள்ளது.
முந்தைய திட்டங்களின் படி 2020 இஐசிஎம்ஏ விழா நவம்பர் 3 ஆம் தேதி துவங்கி நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்த விழா இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடைபெற இருந்தது. எனினும், தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு கோரத்தாண்டம் அதிகரித்துள்ளதால், இவ்விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரும் இருசக்கர வாகன விழாவாக இஐசிஎம்ஏ இருக்கிறது. தற்சமயம் இவ்விழாவின் 2020 பதிப்பு ரத்து செய்யப்பட்டு, இவ்விழா அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு விட்டது.
Next Story






