search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எம்ஜி ஹெக்டார் பிளஸ்
    X
    எம்ஜி ஹெக்டார் பிளஸ்

    மூன்று வேரியண்ட்களில் உருவாகும் எம்ஜி ஹெக்டார் பிளஸ்

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மூன்று வேரியண்ட்களில் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் கார் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஹெக்டார் பிளஸ் ஆறு பேர் பயணிக்கக்கூடிய மாடல் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் உருவாகி இருப்பதாக தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. புதிய ஹெக்டார் சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என மூன்று வேரியண்ட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஹெக்டார் பிளஸ் ஸ்டைல் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.
    எம்ஜி ஹெக்டார் பிளஸ்
    புதிய ஹெக்டார் பிளஸ் மாடல்களின் உற்பத்தி பணிகள் குஜராத் மாநிலத்தின் ஹலோல் பகுதியில் இயங்கி வரும் எம்ஜி மோட்டார் ஆலையில் துவங்கி நடைபெற்று வருகிறது. 

    புதிய ஹெக்டார் பிளஸ் காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.

    ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.
    Next Story
    ×