search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எம்ஜி ஹெக்டார் பிளஸ்
    X
    எம்ஜி ஹெக்டார் பிளஸ்

    எம்ஜி ஹெக்டார் பிளஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எம்ஜி ஹெக்டார் பிளஸ் காரின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.



    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது மூன்றாவது வாகனத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் இந்நிறுவனத்தின் மூன்றாவது மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் ஆறு பேர் மற்றும் ஏழு பேர் என இருவித இருக்கை அமைப்புகளுடன் உருவாகி இருக்கிறது. 

    இந்தியாவுக்கான எம்ஜி ஹெக்டார் பிளஸ் உற்பத்தி ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய எம்ஜி ஹெக்டார் பிளஸ் இந்தியாவில் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவிலேயே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    எம்ஜி ஹெக்டார் பிளஸ்

    புதிய ஹெக்டார் பிளஸ் காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.

    ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.
    Next Story
    ×