என் மலர்
ஆட்டோமொபைல்

மாருதி சுசுகி எர்டிகா எஸ் சிஎன்ஜி
விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்த மாருதி சுசுகி எஸ் சிஎன்ஜி
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் சிஎன்ஜி மாடல் கார் விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் சிஎன்ஜி கார் இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை 1,06,443 எஸ் சிஎன்ஜி மாடல்களை விற்பனை செய்துள்ளது.
நிறுவனம் சார்பில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் கொண்ட வாகனங்களை அதிகம் விற்பனையான நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுசுகி பெற்று இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சிஎன்ஜி விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் 15.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ, வேகன்ஆர், எர்டிகா மற்றும் ஈகோ போன்ற மாடல்களில் சிஎன்ஜி வேரியண்ட்களை வழங்கி வருகிறது.
Next Story






