என் மலர்
செய்திகள்

சென்னை மாநகர பேருந்து
பேருந்து டிக்கெட்களுக்கு பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம்
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அத்தியாவசியமாக இயக்கப்படும் 2 பேருந்துகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டுக்கு பணம் செலுத்தும் முறைக்கான சோதனை துவங்கியுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவும் தடுப்பு நடவடிக்கையின் அங்கமாக மாநகர் போக்குவரத்து கழக பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நடத்துனரின் பாதுகாப்பு கருதி, டிக்கெட்டுக்கான பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேருந்தில் ஒட்டப்பட்டு இருக்கும் கியூஆர் கோடினை பயன்படுத்தி பேடிஎம் (Patym), கூகுள் பே (Google pay), போன் பே (Phone pe), அமேசான் பே (Amazon pay) போன்ற செயலிகள் மூலம் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்த முடியும். டிக்கெட் கட்டணம் மாநகர போக்குவரத்து கழகத்தின் வங்கி கணக்குக்கு நேரடியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Next Story






