search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எரிபொருள் நிரப்புதல் - கோப்புப்படம்
    X
    எரிபொருள் நிரப்புதல் - கோப்புப்படம்

    வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப சரியான நேரம்

    வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப சரியான நேரம் எது என்பதையும், இந்த நேரத்தில் எரிபொருள் நிரப்புவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பார்ப்போம்.



    நாம் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப சரியான நேரம் அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரம் ஆகும். பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தேக்கி வைக்.கப்பட்டிருக்கும் கொள்கலன் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும்.

    இது எளிதில் வெப்படையும் தன்மை கொண்டது. சூரியனின் வெப்பத்தால் பூமியும் வெப்பமடையும். அப்போது பூமிக்குள் இருக்கும் கொள்கலனும் சூடாகும். இதனால் அதனுள் இருக்கும் எரிபொருளும் சூடாகும். எரிபொருள் வெப்பமடையும்போது அதன் அடர்த்தி குறையும்.

    கோப்புப்படம்

    அடர்த்தி குறைந்த எரிபொருள் வாகனத்தின் என்ஜினுள் செல்லும்போது அது சரியாக எரியாமல் போகலாம். ஏனென்றால் என்ஜினும் சூடாக இருக்கும். என்ஜினுள் செலுத்தப்படும் எரிபொருளும் வெப்பநிலையில் செல்லும். எனவே என்ஜினின் உள்ளே கம்ப்ர‌‌ஷன் சேம்பரில் ஸ்பார்க் ஆகும் எரிபொருளானது சரியாக எரியாமல் போகலாம்.

    எனவே வாகனத்தின் மைலேஜ் குறைய இதுவும் ஒரு காரணமாக அமையும். இதனால் பூமி குளிர்ந்த நிலையில் இருக்கும்போது நாம் எரிபொருளை நிரப்பினால் அது அடர்த்தி மிகுந்து காணப்படும். அடர்த்தியான எரிபொருளை என்ஜினுள் செலுத்தும்போது அது முழுமையாக எரியும். என்ஜினின் செயல்திறனும் சிறப்பாக இருக்கும்.

    இதுதவிர பகலில் வாகனத்தின் பெட்ரோல் டேங்கினை திறக்கும் போது, அதன் உள்ளே ஏற்கனவே இருக்கும் எரிபொருளானது வெப்பத்தால் ஆவியாக இருக்கும். அந்த நேரத்தில் டேங்கினை திறந்தால் அந்த ஆவி எரிபொருள் வெளியேறவும் வாய்ப்பு உண்டு. அதனால் காலை அல்லது மாலை, இரவு நேரத்தில் எரிபொருள் நிரப்பலாம்.
    Next Story
    ×