என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய மே மாதம் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கையை தெரிவித்துள்ளது.



    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் மே மாதத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் வாகனங்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென உற்பத்தி செய்துள்ளதாக தெரிவித்து இருக்கிறது. மே 8 ஆம் தேதி ஹூண்டாய் நிறுவனம் சென்னை அருகில் உள்ள ஆலையில் உற்பத்தி பணிகளை துவங்கியது.

    ஹூண்டாய் நிறுவனம் 1999 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அன்று முதல் இன்று வரை உலகின் சுமார் 88 நாடுகளுக்கு கிட்டத்தட்ட 30 லட்சம் வாகனங்களை ஹூண்டாய் ஏற்றுமதி செய்து இருக்கிறது.

    கார் உற்பத்தி

    ஜனவரி முதல் டிசம்பர் 2019 வரை ஹூண்டாய் மோட்டார் இந்தியா 1,81,200 யூனிட்களை சென்னை ஆலையில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களில் 26 சதவீதம் வாகனங்களை ஹூண்டாய் உற்பத்தி செய்திருக்கிறது.

    இவற்றில் ஒவ்வொரு நாடுகளுக்கான தட்டுப்பாடு மற்றும் வரவேற்புக்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட வாகனங்கள் எண்ணிக்கை 792 ஆகும். நாட்டில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கும் முன் ஹூண்டாய் நிறுவனம் புத்தம் புதிய கிரெட்டா மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதுவரை புதிய கிரெட்டா காரை வாங்க சுமார் 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
    ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட்டின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஸ்கோடா நிறுவனம் தனது ரேபிட் டிஎஸ்ஐ மாடலில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியை இந்திய சந்தையில் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் ரேபிட் டிஎஸ்ஐ டாப் ண்ட் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய ரேபிட் டிஎஸ்ஐ மாடலில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே யூனிட் ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு பிராண்டுகளும் உபகரணங்களை மாற்றி பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.

    ஸ்கோடா ரேபிட்

    2020 ரேபிட் மாடலில் ஒற்றை 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 999சிசி, மூன்று சிலிண்டர் யூனிட் அதிகபட்சமாக 108பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய செடான் மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லைட்கள், 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளை கொண்டிருக்கிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி கார் விநியோகம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கியுள்ளது.



    கொரோனா வைரஸ் ஊரடங்கில் நாடு முழுக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து டாடா நெக்சான் இவி மாடல் விநியோகம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கியுள்ளது. அதன்படி புதிய காம்பேக்ட் எஸ்யுவி விநியோகம் தற்சமயம் பெங்களூரு, சென்னை மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்களில் துவங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் நெக்சான் எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. நாடு தழுவிய ஊரடங்கு துவங்கும் முன் இந்த காரின் முதற்கட்ட விநியோகம் துவங்கியது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விநியோக பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

    டாடா நெக்சான் இவி விநியோகம்

    இந்தியாவில் நெக்சான் இவி இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 13.99 லட்சம் என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அறிமுகமான போது இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி என்ற பெருமையை டாடா நெக்சான் இவி பெற்றது. நெக்சான் இவி மாடலில் 95கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 30.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இது 129 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டாடா நெக்சான் இவி காரினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.
    சுசுகி நிறுவனம் ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் எஸ்எஃப் 250 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.



    சுசுகி நிறுவனம் ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் எஸ்எஃப் 250 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள்களின் விலை முறையே ரூ. 1.63 லட்சம் மற்றும் ரூ. 1.74 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இரு மோட்டார்சைக்கிள்களுடன் ஜிக்சர் எஸ்எஃப்250 மோட்டோ ஜிபி பிஎஸ்6 எடிஷனையும் சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 1,74,900, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சுசுகி ஜிக்சர் 250

    ஜிக்சர் 250 மாடல் டூயல் டோன்- மெட்டாலிக் மேட் சில்வர் / பிளாக் மற்றும் சிங்கிள் டோன் மெட்டாலிக் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ஜிக்சர் எஸ்எஃப் 250 மாடல் மெட்டாலிக் மேட் பிளாட்டினம் சில்வர் மற்றும் மெட்டாலிக் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    சுசுகி ஜிக்சர் 250 பிஎஸ்6 மாடல்களில் மூன்று சிலிண்டர் ஏர்/ஆயில் கூல்டு 249சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26 பிஹெச்பி பவர், 22.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேம்பட்ட என்ஜின் தவிர இந்த மோட்டார்சைக்கிள் மாடல்களில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் புதிய மாடல்களில் பிஎஸ்4 வெர்ஷனில் வழங்கப்பட்ட அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் ஸ்பை படங்கள் முதல் முறையாக இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன.



    ஹூண்டாய் நிறுவனம் மாருதி சுசுகி எர்டிகா மாடலுக்கு போட்டியாக புதிய எம்பிவி மாடல் காரை உருவாக்கி வருவதாக ஏற்கனவ பல முறை தகவல்கள் வெளியானது.

    தற்சமயம் இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக புதிய ஹூண்டாய் எம்பிவி காரின் ஸ்பை படங்கள் முதல் முறையாக இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. புதிய ஸ்பை படங்கள் தென் கொரியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஹூண்டாய் கார் ஸ்பை படம்

    ஸ்பை படங்களின் படி புதிய காரில் ஆங்குலர் வடிவமைப்பு காணப்படுகிறது. எனினும், இதில் ஸ்போர்ட் மாடலுக்கு ஏற்ற ஸ்டைலிங் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரின் முன்புறம் கேஸ்கேடிங் கிரில், இரண்டடுக்கு கம்போசிட் மின்விளக்குகள் வழங்கப்படும் என தெரிகிறது.

    இதன் விங் மிரர்கள் விரைவில் அறிமுகமாக இருக்கும் எலைட் ஐ20 ஹேட்ச்பேக் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. இத்துடன் எல்இடி டெயில்லைட்கள், காரின் பின்புறம் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் வழங்கப்படுகிறது. காரின் மேற்கூரையில் ஷார்க்-ஃபின் போன்ற ஆன்டெனாவும் காணப்படுகிறது.
    ஒலா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.



    ஒலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் நெதர்லாந்தை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான எடெர்கோ பிவி-யை கையகப்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் 2021 ஆண்டு வாக்கில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.

    2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எடெர்கோ நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாக ஆப்ஸ்கூட்டரை உருவாக்கி இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் உலகம் முழுக்க பல்வேறு விருதுகளை வென்று இருக்கிறது. 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் இந்த ஸ்கூட்டர் அதன் வடிவமைப்பு மற்றும் பொறியியல் திறனுக்காக புகழ்பெற்றது.

    ஆப்ஸ்கூட்டர்

    2018 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்ஸ்கூட்டர், அதிக திறன் கொண்ட பேட்டரிகளை பயன்படுத்துகிறது. இவை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 240 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 7.5 கிலோ எடை கொண்ட கழற்றக்கூடிய பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

    இவற்றை முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். ஆப்ஸ்கூட்டரில் மொத்தம் மூன்று பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 80 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 
    ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் ஜீப் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதி சலுகைகளை அறிவித்துள்ளது.



    ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (எஃப்சிஏ) நிறுவனம் ஜீப் ஃபார் ஆல் எனும் பெயரில் நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு மிக எளிய மாத தவணை முறை வசதியை குறைந்த வட்டியில் வழங்குகிறது. இந்த சலுகையின் கீழ் பெண்களுக்கு 100 சதவீதம் ஆன்-ரோட் விலைக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது.

    இத்துடன் திடீரென வேலையின்மை, விபத்து அல்லது உடல் நலம் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும் பட்சத்தில் காருக்கான கடன் தொகையில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைந்த மாத தவணை வசதி முதல் 24 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஜீப் காம்பஸ்
     
    புதிய திட்டத்தின் மூலம் ஜீப் எஸ்யுவியை மேலும் அதிகளவு வாடிக்கையாளர்கள் வாங்குவர் என எஃப்சிஏ நம்புகிறது. குறைந்த வட்டி தொகை தேர்வு செய்யப்பட்ட வங்கிகளில் வழங்கப்படுகிறது. இதற்கென ஜீப் மற்றும் தனியார் துறை வங்கிகளிடையே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்கள் கடன் தொகையை ஏழு ஆண்டுகளுக்கு மாத தவணை முறையில் செலுத்தலாம். புதிய சலுகையை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் அல்லது எஃப்சிஏ-வின் புக் மை ஜீப் முன்பதிவு முனையத்திற்கு சென்று பயன்பெறலாம்.
    பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய வெளியீடு திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    பஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை இந்திய சந்தையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது. எனினும், முதற்கட்டமாக இதன் விற்பனை பூனே மற்றும் பெங்களூரு என இரு நகரங்களில் மட்டுமே துவங்கப்பட்டது. மற்ற நகரங்களில் இதன் விற்பனை படிப்படியாக துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் டெல்லி மற்றும் சென்னை என மற்ற நகரங்களில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

    பஜாஜ் செட்டாக்

    மற்ற நிறுவனங்களை போன்று பஜாஜ் நிறுவனமும் தனது பணிகளை முழுமையாக நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ தனது பணிகளை சமீபத்தில் துவங்கியது. இதனால் இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

    நாடுமுழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பூனே மற்றும் பெங்களூரு நகரங்களில் விநியோகம் செய்யப்பட்டன.

    இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அபாச்சி மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை திடீரென மாற்றியுள்ளது.



    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இரு அபாச்சி மாடல்களும் இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    தற்சமயம் பிஎஸ்6 ஆர்டிஆர் 160 மாடல் விலை ரூ. 2 ஆயிரமும், ஆர்டிஆர் 200 சீரிஸ் விலை ரூ. 2500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட இழப்புகளை எதிர்கொள்ளவே விலை உயர்வு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி

    2020 டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடில் 197.75 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 வால்வு, ஆயில் கூல்டு என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20.2 பிஹெச்பி பவர், 16.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    2020 டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலில் 159.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 வால்வு, ஆயில் கூல்டு என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 15.8 பிஹெச்பி பவர், 14.12 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    மெர்சிடிஸ் நிறுவனத்தின் 2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் துவக்க விலை ரூ. 2.48 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலில் புதிய ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட பம்ப்பர் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய 2020 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் முந்தைய மாடலை விட எடை குறைவாக இருக்கிறது. 

    சிறு மாற்றங்கள் தவிர 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் காரில் முந்தைய மாடலில் உள்ள அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய காரில் பேன்-அமெரிக்கா கிரில், 20 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 

    2020 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர்

    புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் கேபினில் விர்ச்சுவல் காக்பிட், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்ட்டெட் தொழில்நுட்பம் மற்றும் இதர அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலில் 4.0 லிட்டர் பை-டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 577 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு அதிகபட்சமாக 317 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
    டேட்சன் நிறுவனம் இந்தியாவில் 2020 டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.



    இந்தியாவில் டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்துள்ளது. புதிய 2020 ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 2.83 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4.77 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடலில் இரண்டு 800 சிசி பெட்ரோல் என்ஜின்கள், மூன்று சிலிண்டர் யூனிட் மற்றும் 999 சிசி மூன்று சிலிண்டர் யூனிட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன் டாப் எண்ட் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

    2020 டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட்

    புதிய கார் ஹெட்லேம்ப் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல முன்புற கிரில் மிகவும் பெரிதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபாக் விளக்குகள் இதில் புதிதாக இடம் பெற்றுள்ளன. இரட்டை வண்ணங்களில் சக்கர கவர்கள் அழகிய தோற்றப்பொலிவை அளிக்கின்றன. 

    டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் ஆறு நிறங்களில் இது உருவாக்கப்பட்டுள்ளது. உள்புறம் 8 அங்குல தொடு திரைகொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்டது. இரட்டை வண்ணத்திலான இருக்கைகள் சவுகரியமான பயணத்தை அளிக்கிறது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் புதிய மோட்டார்சைக்கிள் மாடலை ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் புதிய Meteor 350 மோட்டார்சைக்கிள் மாடலை ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய அர்பன் குரூயிசர் மோட்டார்சைக்கிள் வெளியீடு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாகி இருக்கிறது.

    ராயல் என்ஃபீல்டு நிறுவன தலைமை செயல் அதிகாரி வினோத் தசாரி புதிய ராயல் என்ஃபீல்டு Meteor 350 வெளியீட்டு விவரங்களை தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். ராயல் என்ஃபீல்டு Meteor 350 ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புத்தம் புதிய 350 சீரிஸ் மாடலாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

    ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ்

    முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி ராயல் என்ஃபீல்டு 350 மாடல் தண்டர்பேர்டு எக்ஸ் ரக மாடல்களுக்கு மாற்றாக வெளியிடப்படும் என கூறப்பட்டது.

    முந்தைய மாடலை விட ராயல் என்ஃபீல்டு Meteor 350 முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஜெ1டி எனும் குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் டபுள் கிரேடில் சேசிஸ் மற்றும் புதிய 350 சிசி என்ஜின் வழங்கப்படுகிறது.

    புதிய மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 ரக UCE 346சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ×