என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டேட்சன் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் ரெடி கோ ஃபேஸ்லிப்ட் மாடல் கார் விற்பனையகத்தில் நிறுத்தப்பட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
டேட்சன் நிறுவனத்தின் ரெடி கோ ஃபேஸ்லிப்ட் மாடல் கார் விற்பனையகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக ரெடி கோ ஃபேஸ்லிப்ட் மாடல் வெளியீட்டை உணர்த்தும் வகையில் அதிகாரப்பூர்வ டீசர்களை டேட்சன் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருந்தது.
புதிய கார் ஹெட்லேம்ப் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல முன்புற கிரில் மிகவும் பெரிதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபாக் விளக்குகள் இதில் புதிதாக இடம் பெற்றுள்ளன. இரட்டை வண்ணங்களில் சக்கர கவர்கள் அழகிய தோற்றப்பொலிவை அளிக்கின்றன.

டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் ஆறு நிறங்களில் இது உருவாக்கப்பட்டுள்ளது. உள்புறம் 8 அங்குல தொடு திரைகொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்டது. இரட்டை வண்ணத்திலான இருக்கைகள் சவுகரியமான பயணத்தை அளிக்கிறது.
பாதுகாப்பு அம்சமாக பயணிகள் பகுதியில் ஏர் பேக் கூடுதலாக உள்ளது. அதேபோல பின்புற பயணிகளுக்கும் சீட் பெல்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் கேமரா வசதி உள்ளது. இது 0.8 லிட்டர் மற்றும் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டதாகவும் 5 கியர்களை உடையதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஏஎம்ஜி சி63 கூப் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஒருவழியாக ஏஎம்ஜி சி63 கூப் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் கிடைக்கும் சி சீரிஸ் மாடல்களில் புதிய ஏஎம்ஜி சி63 டாப் எண்ட் மாடல் ஆகும். முன்னதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலை அறிமுகம் செய்தது. இரு மாடல்களும் டிஜிட்டல் முறையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன,
மேலும் புதிய மாடல்கள் ஊரடங்கு காலகட்டத்தில் மெர்சிடிஸ் அறிமுகம் செய்துள்ள முதற்கட்ட வாகனங்கள் ஆகும். புதிய சி கிளாஸ் மாடலில் பேனமெரிக்கா கிரில், ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்கள், மஸ்குலர் பொனெட், புதிய முன்புற பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

காரின் உள்புறம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்போர்ட்டி பிளாக் மற்றும் ரெட் லெதர் ரேஸ்-ஸ்டைல் பக்கெட் சீட்கள், ஃபிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல், கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட சென்ட்ரல் கன்சோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய மெர்சிடிஸ் ஃபிளாக்ஷிப் மாடலில் மொத்தம் ஆறு வெவ்வேறு டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய காரில் பிஎஸ்6 ரக 4.0 லிட்டர் பை-டர்போ வி8 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 469 பிஹெச்பி பவர், 650 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஏஎம்ஜி ஸ்பீடுஷிஃப்ட் 9 ஜி டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கரோக் எஸ்யுவி மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய கரோக் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்கோடா கரோக் மாடலின் விலை ரூ. 24.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐந்து பேர் பயணிக்கக்கூடிய புதிய ஸ்கோடா கரோக் மாடல் அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் கோடியக் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய ஸ்கோடா கரோக் எஸ்யுவி ஜீப் காம்பஸ், ஃபோக்ஸ்வேகன் டி ராக், கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி ஹெக்டார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

புதிய ஸ்கோடா கரோக் மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய கரோக் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 202 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் புதிய கரோக் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்தது. புதிய கரோக் மாடலில் விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.
இத்துடன் ஃபுல் எல்இடி லைட்டிங், 17 இன்ச் அலாய் வீல்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஒன்பது ஏர்பேக், மின்சாதன முறையில் 12 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டுனர் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் 2021 கவாசகி இசட்650 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
கவாசகி நிறுவனத்தின் 2021 இசட்650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2021 கவாசகி இசட்650 பிஎஸ்6 மாடலின் விலை ரூ. 5.94 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய பிஎஸ்4 மாடல் விலையை விட ரூ. 25 ஆயிரம் அதிகம் ஆகும்.
புதிய கவாசகி இசட்650 மாடலில் மேம்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், கூர்மை மற்றும் கம்பீர தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் 4.3 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ஜிபிஎஸ் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளில் டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 ரக டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.

2021 கவாசகி இசட்650 மாடலில் மேம்பட்ட 649சிசி பேரலெல் ட்வின் பிஎஸ்6 என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் நின்ஜா 650 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இது 68 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஸ்டான்டர்டு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மாற்றங்கள் தவிர 2021 கவாசகி இசட்650 மோட்டார்சைக்கிளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி முந்தைய பிஎஸ்4 மாடலில் இருந்தது போன்ற சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் வழங்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிராவிடாஸ் மாடலின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.
டாடா கிராவிடாஸ் மாடல் கார் சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நாடு முழுக்க ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து காரின் சோதனை துவங்கியுள்ளது.
ஸ்பை படங்களின் படி புதிய காரில் 6 ஸ்போக் ஸ்டீல் வீல்களை கொண்டிருக்கின்றன. இந்தியாவில் டாடா கிராவிடாஸ் மாடல் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலகட்டத்தில் அறிமுகமாக இருந்தது. எனினும், நாடுதழுவிய ஊரடங்கு காரணமாக மற்ற வாகனங்களை போன்று கிராவிடாஸ் மாடலின் வெளியீடும் தாமதமாகியுள்ளது.

தற்போதைய விவரங்களின் படி மூன்றடக்கு இருக்கை கொண்ட எஸ்யுவி மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலகட்டத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஹேரியர் எஸ்யுவி மாடலை தழுவி உருவாகியுளஅள கிராவிடாஸ் எஸ்யுவி மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய கிராவிடாஸ் எஸ்யுவி மாடலில் பிஎஸ்6 ரக 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடலின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் ஊரடங்கு நிறைவுற்றதும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் நிறுவன தலைவர் தருன் கார்க் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் இந்தியாவில் ஊரடங்கு நிறைவுற்றதும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும் புதிய எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.
புதிய ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் டக்சன் மாடலின் வெளிப்புறம் பம்ப்பர்கள் ட்வீக் செய்யப்பட்டு, பென்டா எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லைட் யூனிட்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், 18 இன்ச் டைமண்ட் கட் வீல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
2020 ஹூண்டாய் டக்சன் காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 182 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 150 பிஹெச்பி பவர், 192 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எந்த வேரியண்ட்டிலும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படவில்லை.
ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரெனால்ட் டஸ்டர் டர்போ பெட்ரோல் மாடல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய 1.3 லிட்டர் ஹெச்ஆர்13 என்ஜின் ஏற்கனவே 2020 நிசான் கிக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே என்ஜின் கொண்ட டஸ்டர் மாடல் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

முன்னதாக டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆட்டோ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட டஸ்டர் மாடலின் வெளிப்புறம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி காரின் முன்புற கிரில், ஃபாக் லேம்ப் ஹவுசிங், டெயில்கேட் உள்ளிட்டவற்றில் சிவப்பு நிற இன்சர்ட்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
இத்துடன் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. புதிய டஸ்டரில் வழங்கப்பட இருக்கும் ஹெச்ஆர்13 1.3 லிட்டர், நான்கு சிலிண்டர் என்ஜின் 156 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் டைம்லர் மற்றும் ரெனால்ட் நிசான் மிட்சுபிஷி இணைந்து உருவாக்கி இருக்கின்றன.
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜப்பான் நாட்டு சந்தையில் சுசுகி GSX R125 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
சுசுகி நிறுவனம் ஜப்பான் சந்தையில் GSX R125 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் GSX R150 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மெல்லிய ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், மஸ்குலர் டேன்க், அப்-ஸ்வெப்ட் செய்யப்பட்ட டெயில் பகுதி கொண்டிருக்கிறது.

சுசுகி GSX R125 மாடலில் 124சிசி சிங்கிள் சிலிண்டர், ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.8பஹெச்பி பவர், 11 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
அம்சங்களை பொருத்தவரை GSX R125 மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. புதிய GSX R125 கேடிஎம் ஆர்சி 125 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. புதிய சுசுகி GSX R125 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாகன ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் காலாவதியான வாகன ஆவணங்களுக்கான வேலிடிட்டி நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு மற்றும் சரிபார்ப்பு சான்று போன்றவை அடங்கும்.
அனைத்து விதமான வாகன ஆவணங்களுக்கான வேலிடிட்டி ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பின் காலாவதியான ஆவணங்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட நாடுதழுவிய ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஆவணங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களை புதுப்பிக்க வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் அரசு அறிக்கையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக ஏற்கனவே ஒருமுறை வாகன ஆவணங்களின் வேலிடிட்டி ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய 2020 டபிள்யூஆர் வி பிஎஸ்6 மாடல் கார் வெளியீட்டுக்கு முன் விற்னபனையகம் வந்திருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் விரைவில் மேம்பட்ட டபிள்யூஆர் வி ஃபேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் புதிய 2020 டபிள்யூஆர் வி ஃபேஸ்லிப்ட் மாடல் விற்பனையகம் ஒன்றில் நிறுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
புதிய ஹோண்டா டபிள்யூஆர் வி ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இதன் அறிமுகம் தாமதமானது. தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த கார் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

2020 ஹேண்டா டபிள்யூஆர் வி ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதன் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காரின் வெளிப்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி புதிய முன்புற கிரில், எல்இடி ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், மேம்பட்ட முன்புற பம்ப்பர், புதிய ஃபாக் லேம்ப், சில்வர் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், புதிய எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஆலையில் பணியாற்றும் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன ஆலை பணியாளர்களில் மூன்றுபேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பாதித்த மூன்று பேருடன் தொடர்பு கொண்டிருந்த 16-க்கும் அதிகமான ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் அடுத்த இரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ஊழியர்கள் ஆலையில் சென்ற பகுதிகள் முழுக்க சுத்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பகுதிகள் முழுமையாக சுத்தம் செய்யப்படும் முன் மற்ற ஊழியர்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டு இருந்த ஹூண்டாய் உற்பத்தி ஆலை, மே 8 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆலை துவங்கிய முதல் வாரத்திலேயே மூன்று ஊழியர்களுக்கு சளி மற்றும் இருமல் ஏற்பட்டது. பின் கொரோனா சோதனை மேற்கொண்டதில், நோய்தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மூன்று ஊழியர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களது உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக ஹூண்டாய் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
இந்திய சந்தையில் டிரையம்ப் நிறுவனத்தின் டைகர் 900 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது.
இந்தியாவில் டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிள் முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிள் செயல்திறன், அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் டைகர் 800 மாடலை விட சிறப்பானதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டைகர் 800 மோட்டார்சைக்கிள் அதிகம் விற்பனையாகும் அட்வென்ச்சர் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

டிரையம்ப் டைகர் 900 மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதன் தோற்றம் தற்சமயம் மிகவும் மெல்லியதாக இருக்கிறது. இதன் முகப்பு பகுதியில் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், சிறிய அட்வென்ச்சர் பீக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டிஎஃப்டி ஸ்கிரீன், மோட்டார்சைக்கிளுடன் ஸ்மார்ட்போனை ப்ளூடூத் மூலம் இணைத்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
வேரியண்ட்களுக்கு ஏற்ப டிரையம்ப் டைகர் 900 மாடலில் அதிகபட்சமாக- ரோட், ரெயின், ஸ்போர்ட், ஆஃப் ரோடு, ஆஃப் ரோடு ப்ரோ மற்றும் ரைடர் என 6 ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், சஸ்பென்ஷன் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.
டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிளில் 888சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 93.9 பிஹெச்பி பவர், 87 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.






