search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட்
    X
    ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட்

    ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட் அறிமுக விவரம்

    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடலின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹூண்டாய் நிறுவனத்தின் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் ஊரடங்கு நிறைவுற்றதும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஹூண்டாய் நிறுவன தலைவர் தருன் கார்க் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் இந்தியாவில் ஊரடங்கு நிறைவுற்றதும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும் புதிய எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.

    புதிய ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட்

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் டக்சன் மாடலின் வெளிப்புறம் பம்ப்பர்கள் ட்வீக் செய்யப்பட்டு, பென்டா எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லைட் யூனிட்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், 18 இன்ச் டைமண்ட் கட் வீல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    2020 ஹூண்டாய் டக்சன் காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 182 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    இதுதவிர 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 150 பிஹெச்பி பவர், 192 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எந்த வேரியண்ட்டிலும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படவில்லை.
    Next Story
    ×