என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2020 நியூ யார்க் ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 2020 நியூ யார்க் ஆட்டோ விழா ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக நியூ யார்க் ஆட்டோ விழா அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.
உலக நாடுகளை கொரோனா வைரஸ் வாட்டி வதைத்து கொண்டிருப்பதால், இந்த ஆண்டு நடைபெற இருந்த நியூ யார்க் ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா நடைபெறும் ஜாவிட்ஸ் சென்ட்டரில் தற்சமயம் தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தேவை அதிகரிக்கும் சூழலுக்கு ஏற்ப இந்த மருத்துவமனை செயல்படும் என தெரிகிறது.
இந்த ஆண்டிற்கான விழா ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஏப்ரல் 2, 2021 முதல் ஏப்ரல் 11, 2021 வரை நியூ யார்க் ஆட்டோ விழா நடைபெற இருக்கிறது. முன்னதாக ஜெனீவா ஆட்டோ விழா கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதலில் ரத்து செய்யப்பட்டது. இதன் பின் டெட்ராயிட் மற்றும் பாரிஸ் மோட்டார் விழாக்களும் ரத்து செய்யப்பட்டன.
ரெனால்ட் நிறுவனத்தின் 2020 கேப்டூர் மாடல் ரஷ்ய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
2020 ரெனால்ட் கேப்டூர் கார் ரஷ்ய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் இந்த ஆண்டு வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 2020 கேப்டூர் மாடலின் வெளிப்புறம், உள்புறம் மற்றும் என்ஜின் அம்சங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 2020 கேப்டூர் மாடல் காரில் புதிய குரோம் கிரில், புதுவித அலாய் வீல்கள், டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் பார்க்க ஃபேஸ்லிப்ட் மாடலை போன்று காட்சியளிக்கிறது. காரின் உள்புறத்தில் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல் டிசைன், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் ரெனால்ட் நிறுவனத்தின் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. கிளாஸ் பிளாக் சென்ட்ரல் பேனல், பிரீமியம் போஸ் ஆடியோ சிஸ்டம், ஆம்பியன்ட் மூட் லைட்னிங் உள்ளிட்ட வசதிகளும் புதிய கேப்டூர் மாடலில் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கு புதிய கேப்டூர் மாடலில் 360 டிகிரி கேமரா, பிளைன்ட் ஸ்பாட் மாணிட்டரிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி, வேகமாக செல்லும் போது எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரஷ்யாவில் அறிமுகமாகி இருக்கும் கேப்டூர் மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் முறையே 113 பிஹெச்பி பவர் மற்றும் 154 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய பல்வேறு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களை சோதனை செய்து வருகிறது. அந்த வரிசையில் முதலில் அறிமுகமாக இருக்கும் மாடல் Meteor 350 என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடலின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ஸ்பை படங்கள் ராயல் என்ஃபீல்டு சென்னை உற்பத்தி ஆலையில் அருகில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்பை படங்களில் பார்க்க புதிய மாடல் ரோட்ஸ்டர் போன்று காட்சியளிக்கிறது.

மோட்டார்சைக்கிள் பாடி பேனல்கள் மறைக்கப்பட்டிருந்தாலும், இதில் ராயல் என்ஃபீல்டு பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையிலான ஃபியூயல் டேன்க், முக்கோண வடிவம் கொண்ட சீட் பேனல் காணப்படுகிறது. புதிய மாடலில் நீண்ட ஸ்வீப்பிங் ரியர் ஃபென்டர், ஒற்றை இருக்கை, டெயில் லேம்ப் மற்றும் இன்டிகேட்டர்கள் ஆர்இ வரிசையில் புதுமையானதாக இருக்கிறது.
இதுதவிர, இருக்கை உயரம் குறைவாகவும் ஒட்டுமொத்த மோட்டார்சைக்கிள் சற்று மெல்லியதாகவும் இருக்கிறது. என்ஜினை பொருத்தவரை புதிய மாடலில் ஜெ பிளாட்ஃபார்மில் உருவான யூனிட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் புதிய ஸ்விட்ச்கியர் உள்ளிட்ட அம்சங்களுடன் வெளியாகும் என தெரிகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ காரின் இந்த வேரியண்ட் இந்திய சந்தையில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மாடல் இந்திய சந்தையில் அதிக பிரபலமான மாடலாக இருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் நான்கில் மூன்று மாடல்கள் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட வேரியண்ட் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையில் தொடர்ந்து அதிகளவு டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு தலைவர் தருன் கார்க் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

கடந்த நிதியாண்டு நிலவரப்படி ஹூண்டாய் வென்யூ மாடல் மொத்தம் 93,624 யூனிட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்திருக்கிறது. இவற்றில் 58,764 யூனிட்கள் பெட்ரோல் மாடல்கள் ஆகும். இவற்றில் 44,073 மாடல்கள் டர்போ பெட்ரோல் வேரியண்ட்கள் ஆகும்.
இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ பெட்ரோல் வேரியண்ட்கள் விலை ரூ. 6.7 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 11.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
ஹூண்டாய் வென்யூ டர்போ பெட்ரோல் வேரியண்ட் மேனுவல் மற்றும் டிசிடி டிரான்ஸ்மிஷன் விலை முறையே ரூ. 8.46 லட்சம் மற்றும் ரூ. 9.6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேட்ரீ நிறுவனம் குறைந்த விலையில், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் பேட்ரீ நிறுவனம் இந்தியாவில் gps:ie என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய gps:ie இ ஸ்கூட்டர் விலை ரூ. 64,990, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கு முதல் வருடத்திற்கான சந்தாவும் அடங்கும்.
இரண்டாவது ஆண்டு முதல் வாடிக்கையாளர்கள் ரூ. 1200 வருடாந்திர சந்தாவை செலுத்த வேண்டும். கனெக்ட்டெட் ஸ்கூட்டர் அனுபவத்தை வழங்க பேட்ரீ நிறுவனம் ஏரிஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த ஸ்கூட்டர்ல சிம் கார்டு பயன்படுத்துகிறது. இதனை ஸ்மார்ட்போன் செயலி மூலம் இயக்க முடியும்.

பேட்ரீ நிறுவனத்தின் gps:ie மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஜிபிஎஸ் டிராக்கிங், ரிமோட் இம்மொபைலைசேஷன், டிரைவர் ரிப்போர்ட், ட்ரிப் ரிப்போர்ட், செக்யூர் பார்க், ஜியோஃபென்ஸ் மற்றும் டிவைஸ் மேனேஜ்மென்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்கூட்டர் 48 வோல்ட் 24AH லித்தியம் ஃபெரோ போஸ்பேட் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு அதிகபட்சமாக மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனை சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்கள் ஆகும். இந்த ஸ்கூட்டரின் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கரோக் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
ஸ்கோடா நிறுவனத்தின் கரோக் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் மே 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், இந்த காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. அதன்படி புதிய கார் விநியோகம் அறிமுகமான பின் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனம் புதிய கரோக் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்தது. புதிய கரோக் மாடலில் விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

இத்துடன் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், 17 இன்ச் அலாய் வீல்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஒன்பது ஏர்பேக், மின்சாதன முறையில் 12 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டுனர் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
ஸ்கோடா கரோக் மாடலில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 150 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 202 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
இந்திய சந்தையில் ஸ்கோடா கரோக் மாடலின் துவக்க விலை ரூ. 20 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மாருதி சுசுகி நிறுவனம் தனது உற்பத்தி ஆலை மற்றும் விற்பனை மைய பணிகளை துவங்கியுள்ளது. மெல்ல வியாபாரத்தை துவங்கியுள்ள மாருதி சுசுகி விரைவில் பிஎஸ்6 ரக எஸ் கிராஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

முன்னதாக புதிய எஸ் கிராஸ் மாடலின் டீசர்களை மாருதி சுசுகி வெளியிட்டிருந்தது. 2020 மாருதி எஸ் கிராஸ் மாடல் நெக்சா விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் இந்தியாவில் ஜூன் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்ய்படும் என தெரிகிறது.
இதற்கான முன்பதிவுகள் தேர்வு செய்யப்பட்ட சில விற்பனையகங்களில் துவங்கப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புகிய கார் அறிமுகம் செய்யப்பட்டதும் அதன் விநியோகம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார் விற்பனையை ஊக்குவிக்க மாருதி சுசுகி நிறுவனத்தின் மாஸ்டர் பிளான் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்க அதிரடி நிதி சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கென மாருதி சுசுகி நிறுவனம் சோலமண்டலம் நிதி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இத்துடன் வாகனத்தின் ஆன் ரோடு விலையில் 90 சதவீதம் நிதி சலுகையும், நீண்ட கால மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு கஸ்டமைஸ் செய்யக்கூடிய வகையில் நிதி சலுகைகளை வழங்கும் நோக்கில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.

பை நௌ பே லேட்டர் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் புதிய கார் வாங்கிய 60 நாட்கள் கழித்து மாத தவணையை செலுத்த முடியும். எனினும், இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட மாருதி சுசுகி மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும் இது ஜூன் 30 ஆம் தேதிக்குள் கடன் தொகை உறுதி செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற சலுகையை அறிவித்து இருக்கின்றன.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் எஃப் 900 ஆர் மற்றும் எஃப் 900 எக்ஸ்ஆர் என இரு மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
புதிய பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மாடல் நேக்கட் ரோட்ஸ்டர் ஆகும். மற்றொரு மாடலான பிஎம்டபிள்யூ எஃப் 900 எக்ஸ்ஆர் அட்வென்ச்சர் ஸ்போர்ட் டூரர் மாடல் ஆகும். இரு மாடல்களின் விலை முறையே ரூ. 9.90 லட்சம் மற்றும் ரூ. 10.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் பிஎம்டபிள்யூ எஃப் 900 எக்ஸ்ஆர் மாடல் ஸ்டான்டர்டு மற்றும் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மாடல் கேடிஎம் 790 டியூக் மற்றும் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்எஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. பிஎம்டபிள்யூ எஃப் 900 எக்ஸ்ஆர் மாடல் டுகாட்டி மல்டிஸ்டிராடா 950 மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் டிரையம்ப் டைகர் 900 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இரு மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகளை துவங்கியள்ளது. இரு மாடல்களும் இந்தியாவில் சிபியு முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது.
வால்வோ நிறுவனத்தின் புதிய கார் மாடல்கள் மணிக்கு இத்தனை கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வால்வோ நிறுவனம் இனி வெளியிட இருக்கும் புதிய கார் மாடல்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளது. புதிய வேகக் கட்டுப்பாடு சர்வதேச பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
கார்களை அதிவேகத்தில் இயக்கும் போது ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாடு அமலாக்கப்படுகிறது. இதுதவிர கேர் கீ எனும் அம்சத்தை வால்வோ அறிமுகம் செய்துள்ளது.

இதை கொண்டு வாகன உரிமையாளர்கள் கார்களை மற்றவரிடம் வழங்கும் போது, குறிப்பிட்ட வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் காரை லாக் செய்ய முடியும்.
புதிய வேகக்கட்டுப்பாடு மற்றும் கேர் கீ போன்ற அம்சங்கள் காரணமாக வாகன ஓட்டுனர்களுக்கு அதிவேகமாக பயணிக்கும் போது ஏற்படும் அபாயத்தை உணர்த்தும் என வால்வோ நம்புகிறது. புதிய வேகக்கட்டுபாடு அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகளை சந்தித்ததாக வால்வோ தெரிவித்துள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கொரோனா பாதிப்பிலும் முந்தைய திட்டப்படி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கியா சொனெட் மாடல் கார் இந்தியாவில் திட்டமிட்டப்படி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சந்தையில் கியா சொனெட் மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனினும், கியா சொனெட் மாடல் திட்டமிட்டப்படி அறிமுகம் செய்யப்படும் என கியா மோட்டார்ஸ் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு தலைவர் மனோகர் பட் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். எனினும், நாடு தழுவிய ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால், இதன் அறிமுகம் தள்ளிபோகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

புதிய மாடலை அறிமுகம் செய்வதன் மூலம் ஊரடங்கு நிறைவுற்றதும் கியா நிறுவனம் வாடிக்கையாளர்களை விற்பனை மையங்களுக்கு வரவழைக்க முயற்சிக்கிறது. மேலும் பண்டிகை காலத்தில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்வதன் மூலம் விற்பனையை ஊக்குவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வெளியீட்டிற்கு முன் கியா சொனெட் மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதுதவிர புதிய சொனெட் மாடல் இந்தியாவில் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய 2020 வெர்னா ஃபேஸ்லிப்ட் காரின் விற்பனை துவங்கியுள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய வெர்னா ஃபேஸ்லிப்ட் மாடல் விற்பனையை துவங்கியுள்ளது. ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும் 2020 வெர்னா ஃபேஸ்லிப்ட் மாடலின் துவக்க விலை ரூ. 9.30 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் டாப் எணஅட் மாடல் விலை ரூ. 13.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மார்ச் மாத வாக்கில் ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிப்ட் மாடல் விலை அறிவிக்கப்பட்டது. எனினும், ஊரடங்கு காரணமாக இதன் விற்பனை தாமதமாகி வந்தது. தற்சமயம் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்படுவதால், முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது பணிகளை மெல்ல துவங்கி வருகின்றன.
புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது. புதிய 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிப்ட் மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி புதிய காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய வெர்னா மாடலில் கேஸ்கேடிங் கிரில், எல்.இ.டி. ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், டி.ஆர்.எல். உள்ளிட்டவையும் மேம்பட்ட பம்ப்பர்கள், புதிய ORVMகள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், மேம்பட்ட பூட் லிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

காரின் உள்புறம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மல்டி ஃபங்ஷன் ஸ்டீரிங் வீல், எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், சென்ட்டர் கன்சோல் ஆம் ரெஸ்ட், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆம்கிஸ் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஹூண்டாய் செடான் மாடல்- 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 118 பிஹெச்பி மற்றும் 172 என்எம் டார்க் மற்ற இரு என்ஜின்களும் 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன.
இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐவிடி 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட்கள் வழங்கப்படுகின்றன.






