என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    யமஹா நிறுவனம் தனது இரு ஸ்கூட்டர் மாடல்களின் விலையை இந்தியாவில் மாற்றியமைத்துள்ளது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.



    யமஹா நிறுவனம் பிஎஸ்6 ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் பிஎஸ்6 யமஹா ரே இசட்ஆர் ஸ்டிரீட் ரேலி 125 எஃப்ஐ ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்தது. வெளியீட்டின் போது இரு மாடல்களின் விலை முறையே ரூ. 66,730 மற்றும் ரூ. 70,730 என நிர்ணயம் செய்யப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தற்சமயம் யமஹா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இரு ஸ்கூட்டர் மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்சமயம் ரே இசட்ஆர் 125 எஃப்ஐ டிரம் மாடல் விலை ரூ. 67,530 என்றும் ரே இசட்ஆர் 125 எஃப்ஐ டிஸ்க் மாடல் ரூ. 70,530 என்றும் ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மாடலின் விலை ரூ. 71,530 என மாற்றப்பட்டுள்ளது. 

    யமஹா இசட்ஆர் 125 எஃப்ஐ

    அதன்படி மூன்று மாடல்களின் விலையும் ரூ. 800 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக யமஹா ஆர்15 பிஎஸ்6 மாடல், யமஹா எஃப்இசட் எஃப்ஐ பிஎஸ்6, யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ பிஎஸ்6 மற்றும் யமஹா எம்டி 15 பிஎஸ்6 மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பிஎஸ்6 யமஹா ரே இசட்ஆர் 125 எஃப்ஐ டிரம் பிரேக் மாடல் மெட்டாலிக் பிளாக் மற்றும் சியான் புளூ என இரு நிறங்களிலும், டிஸ்க் பிரேக் மாடல் - டார்க் மேட் புளூ, ரெடிஷ் எல்லோ காக்டெயில், மேட் ரெட் மெட்டாலிக், மெட்டாலிக் பிளாக் மற்றும் சியான் புளூ என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. 

    யமஹா ரே இசட்ஆர் ஸ்டிரீட் ரேலி 125 எஃப்ஐ மாடல் ஸ்பார்க்கிள் கிரீன் மற்றும் பர்ப்ளிஷ் புளூ மெட்டாலிக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    மஹிந்திரா நிறுவனம் புதிய கார் மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
     


    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், ‘Own Now, Pay In 2021’ எனும் நிதி சலுகையை அறிவித்துள்ளது. இத்துடன் வாடிக்கையாளர்கள் விரும்பும் மஹிந்திரா வாகனத்தை வாங்க அந்நிறுவனம் கவர்ச்சிகர நிதி சலுகைகளை வழங்கி வருகிறது.

    கஸ்டமைஸ் செய்யக்கூடிய வகையில் சந்தையில் முதல் முறையாக இதுபோன்ற சலுகையை மஹிந்திரா அறிவித்து இருக்கிறது. இது வாடிக்கையாளர்கள் மன கவலையை போக்குவதோடு, புதிய மஹிந்திரா காரை வாங்குவதற்கான நிதி உதவியையும் வழங்குகிறது.

    மஹிந்திரா

    மஹிந்திராவின் ‘Own Now, Pay Later’ திட்டத்தின் கீழ் புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதற்கான கடன் தொகையை 90 நாட்கள் கழித்து செலுத்த முடியும். இத்துடன் பெண் ஓட்டுனர்களுக்கு சிறப்பு சலுகை, 100 சதவீத ஆன்-ரோட் நிதி வசதி மற்றும் 8 ஆண்டுகளுக்கு மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    மருத்துவர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் இதர அத்தியாவசிய தேவை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. புதிய கார் வாங்கும் மருத்துவர்களுக்கு ‘Own Now, Pay Later’ சலுகையுடன் பிராசஸிங் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    2020 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் மாடல் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    மாருதி சுசுகி நிறுவனம் 2020 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் மாடலை ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹேட்ச்பேக் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய ஸ்விப்ட் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் புதிய கிரில் ஹனிகொம்ப் மெஷ் பேட்டன், புதிய வடிவமைப்பில் ஹெட்லைட், அதிரடி தோற்றம் கொண்ட முன்புற பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய அலாய் வீல், டூயல் டோன் பெயின்ட், பிளாக்டு அவுட் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட்

    உள்புறம் புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு, புதிய சீட் ஃபேப்ரிக்குகள், ஹெட்லைனர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பேடில் ஷிஃப்டர்கள், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 90 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இத்துடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் மைல்டு ஹைப்ரிட் என்ஜினும் வழங்கப்படுகிறது. இதில் 1.2 லிட்டர் என்ஜினுடன் 3.0 பிஹெச்பி பவர் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
    ஹோண்டா நிறுவனத்தின் 2020 செடான் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடல் காரின் விற்பனை கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தாமதமாகி வருகிறது. நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக வணிக நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனமும் விற்பனையாகவில்லை. 

    இதுபோன்ற சூழ்நிலைகளால் தொடர்ந்து ஹோண்டா சிட்டி விற்பனை தாமதமாகி வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு நிறைவுற்றதும் ஹோண்டா சிட்டி விற்பனை துவங்கும் என தெரியவந்துள்ளது. 

    ஹோண்டா சிட்டி

    புதிய கார் வெளியீட்டை வேண்டுமென்றே தாமதப்படுத்தவில்லை. வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டதும், அதற்கான அறிவிப்பு வெளியாகிவிடும் என ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கோயல் தெரிவித்தார். 

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய சிட்டி மாடல் பெட்ரோல் என்ஜின் மட்டுமே கொண்டிருக்கும் என கூறப்பட்டது. எனினும், இவற்றை முற்றிலும் மறுக்கும் வகையில் 2020 ஹோண்டா சிட்டி மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். 
    கேடிஎம் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விலை இந்தியாவில் திடீரென மாற்றப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப ரூ. 4 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

    கேடிஎம் 200 டியூக் மற்றும் ஆர்சி மோட்டார்சைக்கிள்களின் விலை ரூ. 4096 உயர்த்தப்பட்டது. அதன்படி இவற்றின் புதிய விலை முறையே ரூ. 1.75 லட்சம் மற்றும் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. என்ட்ரி லெவல் கேடிஎம் டியூக் 125 மற்றும் ஆர்சி 125 மாடல்களின் விலை முறையே ரூ. 4223 மற்றும் ரூ. 4352 உயர்த்தப்பட்டுள்ளது.

    கேடிஎம் 250

    இரு மாடல்களின் புதிய விலை முறையே ரூ. 1.42 லட்சம் மற்றும் ரூ. 1.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேடிஎம் டியூக் 250 விலை ரூ. 2.05 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 4700 அதிகம் ஆகும். கேடிஎம் டியூக் 390 விலை ரூ. 4936 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 2.57 லட்சம் என மாற்றப்பட்டுள்ளது.

    கேடிஎம் ஆர்சி390 மற்றும் அட்வென்ச்சர் 390 மாடல்களின் விலை ரூ. 5109 உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றின் புதிய விலை முறையே ரூ. 2.53 லட்சம் மற்றும் ரூ. 3.04 லட்சம் என மாறியிருக்கிறது.
    வாடகை கார்களில் உட்காருபவர்கள் ஒருவரையொருவர் தொடாமல் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக புதிய வசதிகள் செய்யப்படுகின்றன.



    ஊரடங்கு உத்தரவால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக வாடகை கார்கள் ஓடவில்லை. இதனால் அதன் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வாடகை கார்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இன்னும் அனுமதிக்காததற்கு காரணம், அதில் உட்காருபவர்களுக்கிடையே சமூக இடைவெளி இருக்காது என்பதற்காகத்தான். இதையடுத்து காரில் உட்கார்பவர்கள் இடையே சமூக இடைவெளி ஏற்படுத்த புதிய வசதி செய்யப்பட்டு உள்ளது.

    வாடகை கார்களில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும், ஒருவரையொருவர் தொடாதவாறு உட்காரும் வகையிலும் காரின் உள்பகுதியை நான்கு பாகங்களாக டிரான்ஸ்பரன்ட் மைக்கா ஷீட் மூலம் பிரிக்கலாம். 

    கார் ஐசோலேஷன் கவர்

    அதன்படி காரின் முன் இருக்கைக்கும், பின் இருக்கைக்கும் இடையில் இந்த மைக்கா ஷீட் பொருத்தப்படும். அதன்பின்னர் காரின் டிரைவருக்கும், முன் இருக்கையில் உட்காருபவருக்கும் இடையிலும், பின் இருக்கையில் உட்காரும் 2 பேர் அல்லது 3 பேர் இடையிலும் மைக்கா ஷீட் பொருத்தப்படும்.

    இதன் மூலம் காரில் உட்கார்ந்திருப்பவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளலாமே தவிர தொட முடியாது. காரில் ஏறும் போதும், இறங்கும்போதும் கிருமி நாசினி கொண்டு கையை துடைத்துக்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காரின் ஜன்னலை திறந்து வைத்தால் நான்கு பேருக்கும் காற்று கிடைக்கும். 

    ஒருவரையொருவர் தொடாதவாறு செய்யப்பட்டுள்ள இத்தகைய மாற்றங்களின் மூலம் பயணிகள் எந்த பயமும் இல்லாமல் வாடகை கார்களில் பயணம் செய்யலாம்.
    நிசான் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய 2020 கிக்ஸ் பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
     


    நிசான் இந்தியா நிறுவனம் 2020 கிக்ஸ் எஸ்யுவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிசான் கிக்ஸ் 2020 எஸ்யுவி மாடலில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிசான் மிட்-சைஸ் எஸ்யுவி பிஎஸ்6 மாடல் துவக்க விலை ரூ. 9.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    2020 நிசான் கிக்ஸ் மாடல் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.15 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    என்ஜினை பொருத்தவரை புதிய கிக்ஸ் எஸ்யுவி என்ட்ரி லெவல் மற்றும் மிட்-ரேஞ்ச் மாடல்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்குகிறது. டர்போ பெட்ரோல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் பிரீமியம் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. 

    நிசான் கிக்ஸ்

    புதிய கிக்ஸ் பிஎஸ்6 மாடலில் கேஸ்கேடிங் கிரில், எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள், 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதில் டூயல் டோன் இன்டீரியர் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    இத்துடன் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரல் அங்கீகார வசதி மற்றும் நிசான் கனெக்ட் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டிரைபர் ஏஎம்டி கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் டிரைபர் எம்பிவி காரின் ஏஎம்டி வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய ரெனால்ட் டிரைபர் ஏஎம்டி மாடல் துவக்க விலை ரூ. 6.18 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ரெனால்ட் டிரைபர் ஏஎம்டி- ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடலான ரெனால்ட் டிரைபர் ஆர்எக்ஸ்இசட் ஏஎம்டி விலை ரூ. 7.22 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மேனுவல் வெர்ஷனை விட ரூ. 40 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.

    ரெனால்ட் டிரைபர்

    ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், ரெனால்ட் டிரைபர் விலை தற்சமயம் ரூ. 4.99 லட்சத்தில் துவங்கி ரூ.7.22 லட்சம் வரை கிடைக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    புதிய ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் யூனிட் தவிர ரெனால்ட் டிரைபர் மாடலில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய எம்பிவி மாடலில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் கொண்ட பிஎஸ்6 ரக பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 63 பிஹெச்பி பவர், 91 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    கவாசகி நிறுவனத்தின் புதிய வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    கவாசகி இந்தியா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய டூரிங் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 10.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய பிஎஸ்4 மாடலின் விலையை விட ரூ. 10 ஆயிரம் அதிகம் ஆகும்.

    புதிய பிஎஸ்6 என்ஜின் தவிர மோட்டார்சைக்கிள் தோற்றத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இத்துடன் புதிய அம்சங்களும் வழங்கப்படவில்லை. 2020 வெர்சிஸ் 1000 மாடலில் டூயல் டோன்- பியல் ஸ்டார்டஸ்ட் வைட் / மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக், கேண்டி லைம் கிரீன்  / மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    கவாசகி வெர்சிஸ் 1000

    கவாசகி வெர்சிஸ் 1000 மாடலில் பிஎஸ்6 ரக 1043 சிசி லிக்விட் கூல்டு, இன் லைன் நான்கு சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 118 பிஹெச்பி பவர், 102 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

    இதே என்ஜின் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிஞ்சா 1000 பிஎஸ்6 மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெர்சிஸ் மாடலில் இந்த என்ஜின் அதிக செயல்திறன் வழங்கும் வகையில் டியூன்  செய்யப்பட்டுள்ளது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் விற்பனை மையங்கள் நாடு முழுக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் படிப்படியாக திறக்கப்படுகின்றன.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நாடு முழுக்க இயங்கி வரும் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு காரணமாக ராயல் என்ஃபீல்டு நிறுவன விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் மூடப்பட்டு இருந்தன.

    இந்நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு இன்று (மே 18) துவங்கி மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்களில் பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு சில பணிகளை துவங்க முடியும்.

    ராயல் என்ஃபீல்டு பதிவு ஸ்கிரீன்ஷாட்

    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதை அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    எனினும், விற்பனை மற்றும் சர்வீஸ் மையம் செல்லும் முன் வாடிக்கையாளர்கள் அழைப்பு மூலம் முன்பதிவு பெற்று வரவேண்டும் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் இந்தியாவில் மே 27 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலில் புதிய ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட பம்ப்பர் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய 2020 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் முந்தைய மாடலை விட எடை குறைவாக இருக்கிறது. சிறு மாற்றங்கள் தவிர 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் காரில் முந்தைய மாடலில் உள்ள அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர்

    அதன்படி புதிய காரில் பேன்-அமெரிக்கா கிரில், 20 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.  கேபினில் விர்ச்சுவல் காக்பிட், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்ட்டெட் தொழில்நுட்பம் மற்றும் இதர அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலில் 4.0 லிட்டர் பை-டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 577 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு அதிகபட்சமாக 317 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது.



    மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா முன்பதிவுகள் 25 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் இந்த காரை வாங்க இத்தனை பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    விட்டாரா பிரெஸ்ஸா மாடல் மிக குறைந்த காலகட்டத்தில் இத்தகைய மைல்கல்லை எட்டியிருக்கிறது. மேலும் தற்போதைய கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது என மாருதி சுசுகி இந்தியா விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா

    முன்னதாக விட்டாரா பிரெஸ்ஸா மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் விட்டாரா பிரெஸ்ஸா விலை ரூ. 7.34 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

    புதிய 2020 விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் புதிய எல்இடி ஹெட்லேம்ப் டிசைன், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், ஆட்டோ டிம் ஆகும் ஐஆர்விஎம்கள், ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ×