என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    கவாசகி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல் விலை இந்தியாவில் ரூ. 1 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.



    கவாசகி நிறுவனம் இந்தியாவில் டபிள்யூ800 ஸ்டிரீட் குரூயிசர் மோட்டார்சைக்கிள் விலையை குறைத்துள்ளது. புதிய 2020 கவாசகி ஸ்டிரீட் குரூயிசர் மோட்டார்சைக்கிள் விலை தற்சமயம் ரூ. 6.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என மாற்றப்பட்டுள்ளது. இது முந்தைய 2019  மாடலை விட ரூ. 1 லட்சம் குறைவு ஆகும்.

    இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கவாசகி டபிள்யூ800 மாடல் ரூ. 7.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டபிள்யூ800 ஸ்டிரீட் குரூயிசர் விலை குறைப்புக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், புதிய விலை கவாசகி வலைதளத்தில் மாற்றப்பட்டு விட்டது.

    கவாசகி டபிள்யூ800 மாடல் லிமிட்டெட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் இந்த மோட்டார்சைக்கிள் எஸ்கேடி (செமி-நாக்டு டவுன்) முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது. விலை குறைப்பு தவிர மோட்டார்சைக்கிளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

    2020 கவாசகி டபிள்யூ800

    2019 மாடலில் வழங்கப்பட்ட அம்சங்கள், ஸ்டைலிங் மற்றும் உபகரணங்கள் அப்படியே புதிய 2020 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் மட்டும் புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய 2020 கவாசகி டபிள்யூ800 மாடலில் 773சிசி ட்வின் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 63 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச், அசிஸ்ட் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்கள் வழங்கப்பட்டுள்ளன.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகியின் இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை வாங்க இதுவரை சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கும் முன் இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் விற்பனை துவங்கியது. புதிய இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் ஏற்கனவே 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் முன்பதிவுகளை கடந்துவிட்டது என மாருதி சுசுகி நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தனியார் நிறுவன பேட்டி ஒன்றில் தெரிவித்தார். 

    மாருதி சுசுகி இக்னிஸ்

    மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் முன்னதாக நடைபெற்று முடிந்த ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய காரின் முன்புறம் கிரில் அப்டேட் செய்யப்பட்டு, க்ரோம் அக்சென்ட் மற்றும் சரவுண்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முன்புற பம்ப்பர் மாற்றப்பட்டு சற்று பெரியதாக காட்சியளிக்கிறது. 

    இதன் டெல்டா வேரியண்ட்டில் கூடுதலாக ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ரூஃப் ரெயில்கள் மற்றும் கிளாடிங் செய்யப்பட்டு இருக்கிறது. உள்புறம் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வாய்ஸ் கமாண்ட் மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பி.எஸ்.6 ரக பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் வசதியும் வழங்கப்படுகிறது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் விலையை திடீரென மாற்றியுள்ளது.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கிளாசிக் 350 பேஸ் மற்றும் ஸ்டான்டர்டு (டூயல் சேனலே ஏபிஎஸ்) வேரியண்ட்களை வாங்க முன்பை விட ரூ. 2754 மற்றும் ரூ. 2575 கூடுதலாக செலுத்த வேண்டும். 

    அந்த வகையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1,59,851 என்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் விலை ரூ. 1,67,780 என்றும் மாற்றப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மட்டுமின்றி பிஎஸ்6 ஹிமாலயன் மற்றும் இதர மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

    விலை உயர்வு சுமையை சற்று தளர்த்தும் வகையில் ராயல் என்ஃபீல்டு நிறுவன விற்பனையாளர்கள் ஒவ்வொரு புதிய மோட்டார்சைக்கிள் வாங்குவோருக்கும் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்களை வழங்கி வருகின்றன. 

    முன்னதாக ஹோண்டா, பஜாஜ் மற்றும் யமஹா போன்ற நிறுவனங்களும் தங்களது வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தன.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் இந்திய சந்தையில் திட்டமிட்டப்படி அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.



    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் இந்தியாவில் திட்டமிட்டப்படி அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், இதன் வெளியீடு ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய தலைமுறை ஐ20 மாடல் சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐ20 மாடலில் மேமபட்ட என்ஜின் மற்றும் புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி காரின் முன்புறம் மாற்றப்பட்டு புதிய கேஸ்கேடிங் கிரில், மேம்பட்ட மற்றும் மெல்லிய ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.

    ஹூண்டாய் ஐ20

    காரின் பின்புறம் பூட்லிட் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்களுடன் இணையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டு வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இத்துடன் டூயல் டோன் அலாய் வீல் வடிவமைப்புடன் புதிய தலைமுறை ஐ20 அதிக பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கிறது.

    புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் ஆயில் பர்னல் யூனிட் என்ஜின்களில் வெளியாகும் என தெரிகிறது. இந்த என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல், ஆப்ஷனல் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேறுவழியின்றி மஹிந்திரா நிறுவனம் எடுத்த முடிவு பற்றி தொடர்ந்து பார்ப்போம்.



    மஹிந்திரா நிறுவனம் டியுவி300 பிஎஸ்6 ஃபேஸ்லிப்ட் மாடல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முன் டியுவி300 காம்பேக்ட் எஸ்யுவி மாடல் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. பின் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து பணிகளும் முடங்கின.

    2020 மஹிந்திரா டியுவி300 மாடல் மட்டுமின்றி டியுவி300 பிளஸ் மாடலின் வெளியீடும் தாமதமாகி உள்ளது. இரு மாடல்களிலும் பெரும்பாலான அம்சங்கள் ஒரேமாதிரி வழங்கப்பட்டுள்ளது. டியுவி300 பிளஸ் மாடலில் அதிக இருக்கைகளுக்கு தேவையான இடவசதி மட்டும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

    மஹிந்திரா டியுவி300 பிளஸ்

    இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் இரு மாடல்களும் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. இரு மாடல்களிலும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காரின் முன்புறம் மாற்றப்பட்டு புதிய கிரில் மெல்லிய ஸ்லாட்கள், மேம்பட்ட பம்ப்பர் டிசைன், ஸ்போர்ட் வடிவமைப்பில் ஏர் டேம், புதிய ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா டியுவி300 மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் வழங்கப்படுகிறது. இது 98 பிஹெச்பி பவர், 240 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    டியுவி300 பிளஸ் மாடலில் பிஎஸ்6 ரக 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 138 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் புதிய பிளாட்டினா 100 பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் பிளாட்டினா 100 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய பிஎஸ்6 மாடல் சிறு மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. இதன் விலை ரூ. 47,763 எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பிஎஸ்6 பிளாட்டினா 100 மாடல் கிக் ஸ்டார்ட் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ் (எலெக்ட்ரிக் ஸ்டார்ட்) மாடல் விலை ரூ. 55,546, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் முந்தைய மாடலை விட புதிய அம்சங்கள் மற்றும் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    பஜாஜ் பிளாட்டினா 100

    பிளாட்டினா 100 மாடலில் ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் 102சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 7.5 பிஹெச்பி பவர், 8.3 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேம்பட்ட என்ஜின் தவிர பஜாஜ் பிளாட்டினா 100 மாடல் முந்தைய மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதில் புதிய டின்ட்டெட் விண்ட்ஸ்கிரீன், எல்இடி டிஆர்எல் ஹெட்லேம்ப்பின் மேல் பொருத்தப்பட்டுள்ளது.
    ஊரடங்கு விதிமீறியவர்களிடம் இருந்து போக்குவரத்து காவல்துறை சார்பில் சுமார் ஒன்பது கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
     


    மும்பையில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ. 9 கோடி அபராதத்தை மும்பை போக்குவரத்து காவல் துறை வசூலித்துள்ளது. இதுதவிர விதிமீறியவர்களுக்கு அபராத ரசீதும் வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் படி அத்தியாவசிய தேவைகள், அவசர சேவை மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வரவேண்டும்.

    மார்ச் 23 ஆம் தேதி முதல் மே 13 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் விதிகளை மீறியவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. அதன்படி 32,248 இருசக்கர வாகனங்கள் அரசு விதிகளை மீறியதாகவும், 11,611 பேர் தேவையான ஆவணங்கள் இல்லாத குற்றத்திற்கும், 6354 பேர் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனத்தில் பயணித்ததாகவும், 73,735 பேர் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் சென்றதாக அபராதம் வசூலிக்கப்பட்டது.

    வாகன சோதனை

    மும்பை போக்குவரத்து காவல் துறை சார்பில் 2,03,188 செல்லான்கள் வழங்கப்பட்டன. போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 3,37,136 பேரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதே காலக்கட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப வழங்கும் போது அபராத தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் காவல் துறை சார்பில் இதுவரை 1.28 லட்சம் வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ. 5 கோடி வரையிலான அபராதம் வசூலிக்கப்பட்டது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை எஸ் கிளாஸ் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை எஸ் கிளாஸ் மாடலின் புகைப்படத்தை தனது சமீபத்திய வீடியோவில் இணைத்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஆலைகளில் உற்பத்தி பணிகள் மீண்டும் துவங்குவதை தெரிவிக்கும் வகையில் வீடியோ  வெளியிடப்பட்டது.   

    புதிய எஸ் கிளாஸ் மாடல் தலைசிறந்த வடிவமைப்பு, பல்வேறு மேம்பட்ட அம்சங்களுடன் உருவாகி வருகிறது. எஸ் கிளாஸ் சீரிஸ் கொண்டு அந்நிறுவனம் தனது புதிய தொழில்நுட்பங்களை வெளிப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. 

    மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்

    அதன்படி புதிய எஸ் கிளாஸ் மாடலின் உள்புறம் இரண்டு திரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மற்றொன்று வாட்டர்ஃபால் ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. காரின் முன்புறம் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், பெரிய கிரில் வழங்கப்பட்டுள்ளது. 

    பின்புறம் ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை முன்பை விட கூர்மையாகவும் பிரத்யேக டீடெயிலிங் கொண்டிருக்கிறது. இதில் ஸ்போர்ட் அம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் ட்வின் க்ரோம் எக்சாஸ்ட்கள் டெயில் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மாடல் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஜாகுவார் எக்ஸ்ஜெ, ஆடி ஏ8, போர்ஷ் பனமெரா மற்றும் மசரெட்டி குவாட்ரோபோர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் எலான்ட்ரா எஸ் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் எலான்ட்ரா செடான் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் எலான்ட்ரா எஸ் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 15.89 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதால், எலான்ட்ரா மாடலின் துவக்க விலை அதிகமாகி உள்ளது. அதன்படி எலான்ட்ரா எஸ் மாடலுக்கு மாற்றாக எலான்ட்ரா எஸ்எக்ஸ் என்ட்ரி லெவல் மாடலாக மாறியுள்ளது. புதிய பேஸ் வேரியண்ட் முந்தைய எஸ் வேரியண்ட்டை விட ரூ. 3 லட்சம் விலை அதிகம் ஆகும். 

    ஹூண்டாய் எலான்ட்ரா

    ஹூண்டாய் எலான்ட்ரா எஸ்எக்ஸ் விலை ரூ. 18.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெர்னா எஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதற்கான காரணத்தை ஹூண்டாய் அறிவிக்கவில்லை. எனினும், ஹூண்டாய் இந்தியா வலைதளத்தில் மாற்றப்பட்டுவிட்டது.

    சமீபத்தில் ஹூண்டாய் எலான்ட்ரா மாடல் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டது. புதிய பிஎஸ்6 எலான்ட்ரா மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 150 பிஹெச்பி பவர், 192 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    ஹூண்டாய் எலான்ட்ரா 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 115 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    யமஹா நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை மாற்றப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை சத்தமில்லாமல் உயர்த்தியுள்ளது. அதன்படி யமஹா ஆர்15, எம்டி 15, எஃப்இசட்15 மற்றும் எஃப்இசட்எஸ் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. 

    யமஹா எஃப்இசட் எஃப்ஐ மற்றும் எஃப்இசட்எஸ் எஃப்ஐ

    ஒவ்வொரு மாடலின் விலையும் ரூ. 1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. யமஹா ஆர்15 வெர்ஷன் 3 மூன்று நிறங்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் மாடலான ஆர்15 ரேசிங் புளூ மாடல் ரூ. 1000 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 1,46,900, எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    யமஹா எம்டி 15 மாடலின் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 1,39,900, எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. யமஹா எஃப்இசட் எஃப்ஐ மற்றும் எஃப்இசட்எஸ் எஃப்ஐ மால்களின் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி இவை முறையே ரூ. 99,700 மற்றும் ரூ. 1,01,200 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    2020 மஹிந்திரா தார் மாடல் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நிறைவுற்றதும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய  மஹிந்திரா தார் 2020 இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் மீண்டும் பணிகளை துவங்கியுள்ளது. தற்சமயம் நாடு முழுக்க சுமார் 300 விற்பனை மையங்களை மஹிந்திரா மீண்டும் திறந்து இருக்கிறது. 

    மஹிந்திரா தார் ஸ்பை படம்

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய தார் மாடல் தற்போதைய மாடலை விட நீளமாகவும், உயரமாகவும் இருக்கிறது. 2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய ஆஃப் ரோடு எஸ்யுவி நீண்ட செங்குத்தான கிரில், புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    2020 மஹிந்திரா தார் எல்.இ.டி. டி.ஆர்.எல்.களை கொண்டிருக்கிறது. இத்துடன் கன் மெட்டல் ஷேட் அலாய் வீல்கள் கொண்டிருக்கிறது. இதில் வழக்கமான வடிவமைப்பு அம்சங்கள், 7 ஸ்லாட் கிரில், வட்ட வடிவ ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. பின்புறம் புதிய எல்.இ.டி. டெயில் லேம்ப்களை கொண்டிருக்கிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடல் முற்றிலும் புது பொலிவுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.



    கார் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் சுசுகி நிறுவனத்தின் பிரபல மாடலான வேகன் ஆர் இப்போது புதிய பொலிவுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் முகப்பு பகுதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேகன் ஆர் ஸ்மைல் என்ற கருத்து அடிப்படையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. 

    முகப்பு விளக்கு மற்றும் கிரில் அமைப்பு ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது மனிதர்கள் சிரிப்பதைப் போன்று (ஸ்மைல்) இது உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கருப்பு பின்னணியில் இதன் பேனல்கள், கிரில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    அதன் வெளிப்புறம் பகலில் எரியும் (டிஆர்எல்) எல்இடி விளக்குகள் உள்ளன. மேலும் ஆரஞ்சு நிறத்திலான இன்டிகேட்டர் விளக்கு, சுசுகி நிறுவன லோகோ ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தோற்றம் மனிதர்கள் சிரிப்பதைப் போன்று காட்சியளிக்கிறது. 

    சுசுகி வேகன் ஆர்

    இது 0.66 லிட்டர் என்ஜின் கொண்டது. 49 பிஎஸ் வேகத்தை 6,500 ஆர்பிஎம் சுழற்சியிலும், 58 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5 ஆயிரம் ஆர்பிஎம் சுழற்சியிலும் வெளிப்படுத்தும் வகையில் 3 சிலிண்டர் என்ஜினைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதில் சிறிய அளவிலான ஹைப்ரிட் மோட்டாரும் உள்ளது. இது 2.6 பிஎஸ் மற்றும் 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை வெளிப்படுத்தும். இதற்காக 3 ஏ.ஹெச். லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இந்தியாவில் இதன் விலை சுமார் ரூ.5.33 லட்சத்தில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.
    ×