search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி வேகன் ஆர்
    X
    மாருதி சுசுகி வேகன் ஆர்

    புதிய பொலிவுடன் உருவாகும் மாருதி வேகன் ஆர்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடல் முற்றிலும் புது பொலிவுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.



    கார் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் சுசுகி நிறுவனத்தின் பிரபல மாடலான வேகன் ஆர் இப்போது புதிய பொலிவுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் முகப்பு பகுதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேகன் ஆர் ஸ்மைல் என்ற கருத்து அடிப்படையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. 

    முகப்பு விளக்கு மற்றும் கிரில் அமைப்பு ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது மனிதர்கள் சிரிப்பதைப் போன்று (ஸ்மைல்) இது உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கருப்பு பின்னணியில் இதன் பேனல்கள், கிரில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    அதன் வெளிப்புறம் பகலில் எரியும் (டிஆர்எல்) எல்இடி விளக்குகள் உள்ளன. மேலும் ஆரஞ்சு நிறத்திலான இன்டிகேட்டர் விளக்கு, சுசுகி நிறுவன லோகோ ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தோற்றம் மனிதர்கள் சிரிப்பதைப் போன்று காட்சியளிக்கிறது. 

    சுசுகி வேகன் ஆர்

    இது 0.66 லிட்டர் என்ஜின் கொண்டது. 49 பிஎஸ் வேகத்தை 6,500 ஆர்பிஎம் சுழற்சியிலும், 58 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5 ஆயிரம் ஆர்பிஎம் சுழற்சியிலும் வெளிப்படுத்தும் வகையில் 3 சிலிண்டர் என்ஜினைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதில் சிறிய அளவிலான ஹைப்ரிட் மோட்டாரும் உள்ளது. இது 2.6 பிஎஸ் மற்றும் 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை வெளிப்படுத்தும். இதற்காக 3 ஏ.ஹெச். லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இந்தியாவில் இதன் விலை சுமார் ரூ.5.33 லட்சத்தில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×