search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹூண்டாய் எலான்ட்ரா
    X
    ஹூண்டாய் எலான்ட்ரா

    இந்தியாவில் எலான்ட்ரா பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்

    ஹூண்டாய் நிறுவனத்தின் எலான்ட்ரா எஸ் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் எலான்ட்ரா செடான் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் எலான்ட்ரா எஸ் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 15.89 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதால், எலான்ட்ரா மாடலின் துவக்க விலை அதிகமாகி உள்ளது. அதன்படி எலான்ட்ரா எஸ் மாடலுக்கு மாற்றாக எலான்ட்ரா எஸ்எக்ஸ் என்ட்ரி லெவல் மாடலாக மாறியுள்ளது. புதிய பேஸ் வேரியண்ட் முந்தைய எஸ் வேரியண்ட்டை விட ரூ. 3 லட்சம் விலை அதிகம் ஆகும். 

    ஹூண்டாய் எலான்ட்ரா

    ஹூண்டாய் எலான்ட்ரா எஸ்எக்ஸ் விலை ரூ. 18.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெர்னா எஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதற்கான காரணத்தை ஹூண்டாய் அறிவிக்கவில்லை. எனினும், ஹூண்டாய் இந்தியா வலைதளத்தில் மாற்றப்பட்டுவிட்டது.

    சமீபத்தில் ஹூண்டாய் எலான்ட்ரா மாடல் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டது. புதிய பிஎஸ்6 எலான்ட்ரா மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 150 பிஹெச்பி பவர், 192 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    ஹூண்டாய் எலான்ட்ரா 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 115 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×