search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி இக்னிஸ்
    X
    மாருதி சுசுகி இக்னிஸ்

    முன்பதிவில் அசத்தும் மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிப்ட்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகியின் இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை வாங்க இதுவரை சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கும் முன் இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் விற்பனை துவங்கியது. புதிய இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் ஏற்கனவே 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் முன்பதிவுகளை கடந்துவிட்டது என மாருதி சுசுகி நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தனியார் நிறுவன பேட்டி ஒன்றில் தெரிவித்தார். 

    மாருதி சுசுகி இக்னிஸ்

    மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் முன்னதாக நடைபெற்று முடிந்த ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய காரின் முன்புறம் கிரில் அப்டேட் செய்யப்பட்டு, க்ரோம் அக்சென்ட் மற்றும் சரவுண்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முன்புற பம்ப்பர் மாற்றப்பட்டு சற்று பெரியதாக காட்சியளிக்கிறது. 

    இதன் டெல்டா வேரியண்ட்டில் கூடுதலாக ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ரூஃப் ரெயில்கள் மற்றும் கிளாடிங் செய்யப்பட்டு இருக்கிறது. உள்புறம் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வாய்ஸ் கமாண்ட் மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பி.எஸ்.6 ரக பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் வசதியும் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×