search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி சி63 கூப்
    X
    மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி சி63 கூப்

    இந்தியாவில் புதிய பென்ஸ் சி63 கூப் அறிமுகம்

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஏஎம்ஜி சி63 கூப் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஒருவழியாக ஏஎம்ஜி சி63 கூப் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் கிடைக்கும் சி சீரிஸ் மாடல்களில் புதிய ஏஎம்ஜி சி63 டாப் எண்ட் மாடல் ஆகும். முன்னதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலை அறிமுகம் செய்தது. இரு மாடல்களும் டிஜிட்டல் முறையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன,

    மேலும் புதிய மாடல்கள் ஊரடங்கு காலகட்டத்தில் மெர்சிடிஸ் அறிமுகம் செய்துள்ள முதற்கட்ட வாகனங்கள் ஆகும். புதிய சி கிளாஸ் மாடலில் பேனமெரிக்கா கிரில், ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்கள், மஸ்குலர் பொனெட், புதிய முன்புற பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி சி63 கூப்

    காரின் உள்புறம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்போர்ட்டி பிளாக் மற்றும் ரெட் லெதர் ரேஸ்-ஸ்டைல் பக்கெட் சீட்கள், ஃபிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல், கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட சென்ட்ரல் கன்சோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய மெர்சிடிஸ் ஃபிளாக்ஷிப் மாடலில் மொத்தம் ஆறு வெவ்வேறு டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய காரில் பிஎஸ்6 ரக 4.0 லிட்டர் பை-டர்போ வி8 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 469 பிஹெச்பி பவர், 650 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஏஎம்ஜி ஸ்பீடுஷிஃப்ட் 9 ஜி டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×