என் மலர்
ஆட்டோமொபைல்

2020 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர்
2020 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் இந்திய சந்தையில் அறிமுகம்
மெர்சிடிஸ் நிறுவனத்தின் 2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் துவக்க விலை ரூ. 2.48 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலில் புதிய ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட பம்ப்பர் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய 2020 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் முந்தைய மாடலை விட எடை குறைவாக இருக்கிறது.
சிறு மாற்றங்கள் தவிர 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் காரில் முந்தைய மாடலில் உள்ள அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய காரில் பேன்-அமெரிக்கா கிரில், 20 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடல் கேபினில் விர்ச்சுவல் காக்பிட், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்ட்டெட் தொழில்நுட்பம் மற்றும் இதர அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலில் 4.0 லிட்டர் பை-டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 577 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு அதிகபட்சமாக 317 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
Next Story






