search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் டீசர்
    X
    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் டீசர்

    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது மேம்பட்ட ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடலான 2020 ஜிஎல்எஸ் காரை இந்திய சந்தையில் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் மார்டின் வென்க் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

    புதிய ஆடம்பர எஸ்யுவி மாடலுக்கான டீசரை மெர்சிடிஸ் பென்ஸ் தனது வலைதளத்திலும் பதிவேற்றம் செய்திருக்கிறது. தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மாடலில் அதிக இடவசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மாடல் முந்தைய மாடலை விட 77எம்எம் நீளமாகவும், 22 எம்எம் அகலமாகவும் இருக்கிறது. இத்துடன் புதிய காரின் வீல்பேஸ் பழைய மாடலை விட நீளமாக இருக்கிறது. இதனால் காரின் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு இருக்கைகளில் அமர்வோருக்கு அதிக இடவசதி கிடைக்கும் என தெரிகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ்

    புதிய ஜிஎல்எஸ் மாடலின் வெளிப்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு பிளாட்ஃபார்மை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் இரண்டு-ஸ்லாட் கிரில், புதிய எல்இடி டெயில்லைட்கள், டூயல் எக்சாஸ்ட் போர்ட் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

    புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரில் 3.0 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் 285 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 3.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் 366 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    Next Story
    ×