என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2021 கவாசகி நின்ஜா 1000 எஸ்எக்ஸ்
    X
    2021 கவாசகி நின்ஜா 1000 எஸ்எக்ஸ்

    அசத்தல் அம்சங்கள் நிறைந்த 2021கவாசகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

    கவாசகி நிறுவனத்தின் 2021 கவாசகி நின்ஜா 1000 எஸ்எக்ஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.



    கவாசகி நிறுவனம் 2021 நின்ஜா எஸ்எக்ஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் நான்காம் தலைமுறை நின்ஜா 1000எஸ்எக்ஸ் மாடல் ஆகும். இந்தியாவில் புதிய 2021 கவாசகி நின்ஜா எஸ்எக்ஸ் பிஎஸ்6 மாடல் விலை ரூ. 10.79 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் முதல் பிரீமியம் ஸ்போர்ட் டூரர் மாடலாக கவாசகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் இருக்கிறது. 2021 மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி கூர்மையான வடிவமைப்பு, மேம்பட்ட எக்சாஸ்ட் சிஸ்டம், இருபக்கங்களில் வழங்கப்பட்ட ட்வின் எக்சிட்களுக்கு மாற்றாக ஒற்றை எக்சாஸ்ட் சிஸ்டம் மோட்டார்சைக்கிளின் வலதுபுறத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பக்கவாட்டில் மேம்பட்ட பேனல்களும் பின்புறத்தில் சிறிதளவு மாற்றங்களும் செய்யப்பட்டு இருக்கின்றன.

    2021 கவாசகி நின்ஜா 1000 எஸ்எக்ஸ்

    புதிய மாடலில் 4.3 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ரைடோலஜி செயலி மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, மோட்டார்சைக்கிள் முழுக்க எல்இடி லைட்டிங் கொண்டிருக்கிறது. புதிய கவசாகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் மாடலில் பிஎஸ்6 ரக 1043 சிசி லிக்விட் கூல்டு, இன் லைன் நான்கு சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 140 பிஹெச்பி பவர், 111 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எலெக்டிரானிக் திராட்டிள் வால்வுகள், எலெக்ட்ரானிக் குரூயிஸ் கண்ட்ரோல், குவிக் ஷிஃப்டர், இன்டெலிஜன்ட் ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், 3 ஸ்டெப் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    புதிய 2021 கவாசகி நின்ஜா 1000 எஸ்எக்ஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மெட்டாலிக் கிராஃபைட் கிரே / மெட்டாலிக் டையப்ளோ பிளாக் மற்றும் எமரால்டு கிலேஸ்டு கிரீன் / மெட்டாலிக் கார்பன் கிரே / மெட்டாலிக் கிராஃபைட் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    Next Story
    ×