என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கின்றன.
ரியல்மி GT 5ஜி மற்றும் ரயில்மி GT மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த தகவலை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் உறுதிப்படுத்தி இருக்கிறார். முன்னதாக ரியல்மி GT 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT 5ஜி மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 64 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்கள், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ரியல்மி GT 5ஜி மாடலின் விலை ரூ. 30 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சீன சந்தையில் இதன் விலை ரூ. 31,400 துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 39,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஜூன் மாதம் வாட்ஸ்அப் பீட்டாவில் அறிமுகமான அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் (view once) வரும் நாட்களில் அனைவருக்கும் வெளியிடப்பட இருக்கிறது. முன்னதாக இந்த அம்சம் ஜூன் மாத வாக்கில் செயலியின் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டது. இந்த அம்சம் பயன்படுத்தும் போது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தானாக மறைந்துவிடும்.

புது அப்டேட் விவரங்கள் பேஸ்புக்கின் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் மற்ற குறுந்தகவல்களை போன்றே வியூ ஒன்ஸ் மீடியாவும் முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
இந்த அம்சத்தின் கீழ் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஒன்-டைம் (one-time) ஐகான் மூலம் குறிப்பிடப்படுகிறது. புகைப்படம் அல்லது வீடியோவை பார்த்ததும், அது “opened” என குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் வாட்ஸ்அப் சாட்களில் ஏற்படும் குழப்பம் தீர்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெடித்து சிதறிய நார்டு 2 ஸ்மார்ட்போனில் என்ன பிரச்சினை ஏற்பட்டது என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.
ஒன்பிளஸ் பயனர் ஒருவர் தனது மனைவியின் நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக தனது ட்விட்டரில் பதிவிட்டார். தனது பதிவில் வெடித்து சிதறியதால் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் தெளிவாக தெரியும் படி புகைப்படங்களையும் அவர் இணைத்து இருந்தார். பயனர் குற்றச்சாட்டுக்கு ஒன்பிளஸ் பதில் அளித்துள்ளது.

"வெடித்து சிதறிய நார்டு 2 ஸ்மார்ட்போனினை முழுமையாக ஆய்வு செய்தோம். அந்த மாடலில் எந்த விதமான உற்பத்தி கோளாறும் ஏற்படவில்லை. நார்டு 2 வெளிப்புற காரணிகளால் தான் வெடித்து சிதறியது என எங்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது."
"குற்றம்சாட்டிய பயனருடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கிறோம். வாடிக்கையாளரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமே எங்களின் ஒரே நோக்கம் ஆகும். பயனரின் குறைகளை தீர்ப்பது மற்றும் நன்னிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் சிறந்த சேவையை வழங்கி இருக்கிறோம்," என தெரிவித்து இருக்கிறது.
கூகுளின் புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் கேமரா பம்ப் சதுரங்க வடிவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ஒருவழியாக உறுதிப்படுத்தி இருக்கிறது. புது ஸ்மார்ட்போன்களின் டீசரை கூகுள் வெளியிட்டு உள்ளது. இவற்றுடன் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் அதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸரையும் கூகுள் அறிவித்துள்ளது.
அதன்படி புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் டென்சார் சிப்செட் கொண்டு சக்தியூட்டப்படுகின்றன. முந்தைய தகவல்களில் இதே பிராசஸர் GS101 மாடல் நம்பர் மற்றும் வைட் சேப்பல் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாகி வருகிறது.
இரு மாடல்களிலும் மேட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. எனினினும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் வழங்கப்பட இருக்கிறது. மேம்பட்ட சென்சார் மற்றும் லென்ஸ்கள் மிகவும் பெரிது என்பதால் வழக்கமான டிசைனுக்கு மாற்றாக புதிய கேமரா பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிக்சல் 6 ப்ரோ மாடலில் டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது.
ரெட்மிபுக் ப்ரோ மற்றும் ரெட்மிபுக் E Learning எடிஷன் லேப்டாப்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்ம்புக் ப்ரோ மற்றும் ரெட்மிபுக் E Learning எடிஷன் லேப்டாப்களை அறிமுகம் செய்தது. புதிய லேப்டாப்களில் ரெட்மிபுக் ப்ரோ விலை உயர்ந்த மாடல் ஆகும். ரெட்மிபுக் ப்ரோ 1.8 கிலோ எடையில், 19.9mm அளவு தடிமனாக இருக்கிறது.
ரெட்மிபுக் ப்ரோ மாடலில் 11th Gen இன்டெல் கோர் i5 பிராசஸர், இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை பொருத்தவரை 8 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 3.5mm ஆடியோ ஜாக், SD கார்டு ஸ்லாட், USB 2.0, LAN, HDMI, இரண்டு USB 3.2 மற்றும் சார்ஜிங் போர்ட்கள் உள்ளன.
கனெக்டிவிட்டிக்கு வைபை 5, ப்ளூடூத் 5 வழங்கப்பட்டுள்ளன. ரெட்மிபுக் ப்ரோ மாடலில் 46Whr பேட்டரி உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இத்துடன் 65வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. மேலும் விண்டோஸ் பிரெசிஷன் டிரைவர், 720 பிக்சல் வெப்கேமரா, 100 cm-சதுர அளவில் டிராப்க்பேட் உள்ளது.

ரெட்மிபுக் E Learning எடிஷனில் 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளே, 11th Gen இன்டெல் கோர் i3 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி எஸ்.எஸ்.டி. வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப் விண்டோஸ் 10 ஹோம் ஒஎஸ் கொண்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தல் 10 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
இந்தியாவில் ரெட்மிபுக் ப்ரோ 8 ஜிபி + 512 ஜிபி விலை ரூ. 49,999 என்றும், ரெட்மிபுக் E Learning எடிஷன் 8 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 41,999 என்றும், ரெட்மிபுக் E Learning எடிஷன் 8 ஜிபி + 512 ஜிபி விலை ரூ. 44,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக சலுகையாக புதிய லேப்டாப்கள் முறையே ரூ. 46,999, ரூ. 39,499 மற்றும் ரூ. 42,499 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. புதிய ரெட்மிபுக் ப்ரோ மற்றும் ரெட்மிபுக் E Learning எடிஷன் ப்ளிப்கார்ட், எம்.ஐ. ஹோம் மற்றும் எம்.ஐ. வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. விற்பனை ஆகஸ்ட் 6 மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.
டெக்னோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
டெக்னோ பிராண்டின் புதிய போவா 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய போவா 2 மாடலில் 6.9 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஹை ஒஎஸ் கொண்டிருக்கும் டெக்னோ போவா 2 மாடலில் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ, ஏ.ஐ. லென்ஸ், குவாட் எல்.இ.டி. பிளாஷ், 8 எம்பி செல்பி கேமரா, டூயல் எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது.

டெக்னோ போவா 2 அம்சங்கள்
- 6.9 இன்ச் 1080x2460 பிக்சல் FHD+ டாட்-இன் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
- 1000MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
- 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி மெமரி
- 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஹைஒஎஸ் 7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
- 2 எம்பி 4cm மேக்ரோ
- 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்.பி. ஏ.ஐ. லென்ஸ், குவாட் எல்.இ.டி. பிளாஷ்
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, டூயல் எல்.இ.டி. பிளாஷ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 7000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
டெக்னோ போவா 2 மாடல் டேசில் பிளாக், போலார் சில்வர் மற்றும் எனர்ஜி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 12,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக ஆகஸ்ட் 5 முதல் குறுகிய காலக்கட்டத்திற்கு இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 10,499 மற்றும் ரூ. 12,499 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
இந்தியாவில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை வைத்திருப்போர் உடனே இப்படி செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பான CERT-In ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு சாதனங்களை பயன்படுத்துவோர் உடனடியாக iOS 14.7.1 மற்றும் iPadOS 14.7.1 வெர்ஷனை அப்டேட் செய்ய CERT-In கேட்டுக்கொண்டுள்ளது.
இரு புதிய அப்டேட்களும் பெரும் பிழை திருத்தங்களுடன் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் மெமரி கரப்ஷன் ஐபோன் 6எஸ் மற்றும் அதன்பின் வெளியான ஐபோன் மாடல்கள், ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் 2 மற்றும் 5th Gen ஐபேட், ஐபேட் மினி 4 மற்றும் அதன்பின் வெளியான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மெமரி கரப்ஷன் பிழையை கொண்டு ஹேக்கர் பயனரின் சாதனத்தை இயக்க முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ்-இன் IOMobileFrameBuffer-இல் இந்த பிழை ஏற்பட்டுள்ளது. இந்த பிழை வேகமாக பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், இந்திய பயனர்கள் உடனடியாக செக்யூரிட்டி பேட்ச் இன்ஸ்டால் செய்ய CERT-In அறிவுறுத்தி இருக்கிறது.
இரு புதிய அப்டேட்களும் பெரும் பிழை திருத்தங்களுடன் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் மெமரி கரப்ஷன் ஐபோன் 6எஸ் மற்றும் அதன்பின் வெளியான ஐபோன் மாடல்கள், ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் 2 மற்றும் 5th Gen ஐபேட், ஐபேட் மினி 4 மற்றும் அதன்பின் வெளியான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ் பூர்த்தி செய்த ஒரே விண்ணப்ப படிவம் ப்ரின்ட் மற்றும் என்.எப்.டி. முறையில் ஏலம் விடப்பட்டது.
ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுச்சின்னங்கள் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் இம்முறை ஜாப்ஸ், பணி வழங்க கோரி பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்ப படிவம் இந்திய மதிப்பில் ரூ. 2.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த விண்ணப்ப படிவத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் இருந்த போது பூர்த்தி செய்தார். ஸ்டீவ் ஜாப்ஸ் தன் வாழ்நாளில் பூர்த்தி செய்த ஒரே விண்ணப்ப படிவம் ஆகும். ஆன்லைனில் நடைபெற்ற ஏலத்தில் விண்ணப்ப படிவம் 3.43 லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது இந்திய மதிப்பில் ரூ. 2,54,95,018.50 ஆகும்.
ஸ்டீவ் ஜாப்ஸ் விண்னப்பத்திற்கான ஏலம் ப்ரின்ட் மற்றும் என்.எப்.டி. வகையில் நடைபெற்றது. ப்ரின்ட் வடிவத்திற்கு டாலர்களிலும், என்.எப்.டி.க்கான ஏலம் எத்தெரியம் மூலமாகவும் நடைபெற்றது. என்.எப்.டி.-யை விட விண்ணப்பத்தின் ப்ரின்ட் வடிவத்திற்கு நான்கு மடங்கு அதிக தொகை வழங்கப்பட்டது. ப்ரின்ட் வடிவத்திற்கான அதிகபட்ச தொகை 3.43 லட்சம் டாலர்கள் வரை கேட்கப்பட்டது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக இம்மாத துவக்கத்தில் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போனிற்கு பி.ஐ.எஸ். சான்று வழங்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் SM-A037F/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

வலைதளத்தில் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இடம்பெறவில்லை. எனினும், இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A03s மாடலில் 6.5 இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 13 எம்பி பிரைமரி கேமரா, இரண்டு 2 எம்பி சென்சார்கள், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் யு.எஸ்.பி. டைப் சி, 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல் விலை ரூ. 10 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. சாம்சங் கேலக்ஸி A03s இந்திய வெளியீடு மற்றும் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மட்டும் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மே மாதத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. ஜியோ தவிர ஏர்டெல், வி மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதைத் தொடர்ந்து வி மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களும் மற்ற நிறுவன சேவைக்கு மாறி இருக்கின்றனர். ஜியோவின் மாதாந்திர வளர்ச்சி 0.83 சதவீதமாக இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்திலும் ஜியோ மட்டுமே புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது.

மே 2021 வரையிலான காலக்கட்டத்தில் வயர்லெஸ் சந்தாதாரர் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோவின் பங்கு 36.15 சதவீதமாக இருக்கிறது. ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தற்போது 43.12 கோடியாக இருக்கிறது. பாரதி ஏர்டெல் நிறுவனம் சுமார் 46 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
இதே போன்று வி நிறுவனம் சுமார் 42 லட்சம், பி.எஸ்.என்.எல். நிறுவனம் 8.8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இருநிறுவனங்கள் டெலிகாம் சந்தாதாரர்கள் பிரிவில் முறையே 23.59 சதவீதம் மற்றும் 9.89 சதவீதமும் பெற்றுள்ளன. இந்த விவரங்கள் டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
போக்கோ நிறுவனம் X3 ஸ்மார்ட்போனினை ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் உடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
போக்கோ X3 ஸ்மார்ட்போன் 2020 இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் எம்.ஐ.யு.ஐ. 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் உடன் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனிற்கு எம்.ஐ.யு.ஐ. 12.5 அப்டேட் வழங்கப்படவில்லை. இந்நிலையில், போக்கோ X3 தற்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெற்று வருகிறது.
சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் போக்கோ X3 NFC மாடலுக்கு மார்ச் மாத வாக்கில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டது. இந்தியாவில் விற்பனையாகும் போக்கோ X3 சற்றே வித்தியாசமானது என்பதால், ஆண்ட்ராய்டு 11 அப்டேட் தற்போது வழங்கப்படுகிறது.

போக்கோ X3 மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் V12.0.2.0.RJGINXM எனும் பில்டு நம்பர் கொண்டிருக்கிறது. இந்த அப்டேட் ஸ்டேபில் பீட்டா முறையில் வழங்கப்படுகிறது. இதனால் அனைருக்கும் கிடைக்க மேலும் சில காலம் ஆகும்.
புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டை தொடர்ந்து எம்.ஐ.யு.ஐ. 12.5 அப்டேட் வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ X3 மாடலுக்கு ஆண்ட்ராய்டு 12 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 13 அப்டேட்களை வழங்குவதாக ஏற்கனவே அறிவித்து இருக்கிறது.
எக்ஸ்பாக்ஸ் கேமிங் கன்சோலின் 20 வது ஆண்டு விழா முற்றிலும் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டு செயல்பட்டு வரும் க்ரிஸ்பி கிரீம் உணவக குழுமம் எக்ஸ்பாக்ஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் லிமிடெட் எடிஷன் டோநட் அறிமுகமாகிறது. லிமிடெட் எடிஷன் டோநட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் ஆகஸ்டு 2 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 22 வரை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

புது கூட்டணி குறித்த விவரங்களை க்ரிஸ்பி கிரீம் விளம்பர வீடியோ வடிவில் அறிவித்தது. க்ரிஸ்பி கிரீம் நிறுவனம் முதல் முறையாக வியாபார ரீதியில் விளம்பரம் செய்கிறது. ஆனால் எக்ஸ்பாக்ஸ் ஏற்கனவே இதுபோன்ற கூட்டணி அமைத்து இருக்கிறது.
இம்முறை எக்ஸ்பாக்ஸ் வெளியாகி 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு லிமிடெட் எடிஷன் டோநட் விற்பனை செய்யப்பட இருக்கிறது. லிமிடெட் எடிஷன் டோநட் மீது எக்ஸ்பாக்ஸ் லோகோ இடம்பெற்று இருக்கிறது.






