என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் கைகளில் இருந்து நழுவாத வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய இன் 2பி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. புது ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிராப் நாட்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், ஆக்டாகோர் யுனிசாக் 610 பிராசஸர், மாலி ஜி52 GPU, 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் உள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் 2பி அம்சங்கள்
- 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் UNISOC T610 பிராசஸர்
- மாலி-G52 GPU
- 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி eMMC 5.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 11
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
- பின்புறம் கைரேகை சென்சார், பேஸ் அன்லாக்
- 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் புளூ, பிளாக் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 7,999 என்றும் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 8,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 2பி விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் இந்தியா வலைதளங்களில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி துவங்குகிறது.
இன்பினிக்ஸ் புதிய 40-இன்ச் FHD ஸ்மார்ட் டிவி மாடலில் 24 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் டால்பி ஆடியோ தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம் X1 சீரிசில் 40 இன்ச் FHD ஸ்மார்ட் டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக X2 சீரிசில் 32 இன்ச் HD மற்றும் 43 இன்ச் FHD வேரியண்ட்களை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது.
புதிய FHD ஸ்மார்ட் டிவி மாடலில் மெல்லிய பெசல்கள், அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, மெல்லிய டிசைன், இன்பினிக்ஸ் எபிக் 2.0 பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது டிவியின் ஒட்டுமொத்த பிக்ச்சர் தரத்தை மேம்படுத்தி தலைசிறந்த அனுபவத்தை வழங்குகிறது.

இன்பினிக்ஸ் X1 40 இன்ச் அம்சங்கள்
- 40 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
- இனிபினிக்ஸ் EPIC 2.0 பிக்ச்சர் என்ஜின், லோ புளூ லைட் எமிஷன்
- குவாட்கோர் மீடியாடெக் 6683 பிராசஸர்
- மாலி 470 MP3 GPU
- 1 ஜிபி DDR4 ரேம்
- 8 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0
- பில்ட்-இன் குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே ஸ்டோர்
- வைபை Wi-Fi 802.11 b/g/n (2.4 GHz), ப்ளூடூத் 5.0
- 3 x HDMI, AV, USB 2.0 x 2, ஈத்தர்நெட், ஆப்டிக்கல் அவுட்புட், மினி AV
- ப்ளூடூத் ரிமோட்
- 24 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர்
- டால்பி ஆடியோ
இன்பினிக்ஸ் X1 40 இன்ச் FHD மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதன் அறிமுக விலை ரூ. 19,999 ஆகும்.
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் 5ஏ ஸ்மார்ட்போன் மூன்று வித நிறங்களில் உருவாகி இருக்கிறது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேக ஜியோ சலுகைகளுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. அதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ. 550 வரையிலான கேஷ்பேக் பெறலாம்.
புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ மாடலில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிராப் நாட்ச் ஸ்கிரீன், பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஓசன் வேவ், குயிட்சல் சியான் மற்றும் மிட்நைட் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஜியோ சலுகையை பொருத்தவரை ரூ. 550 கேஷ்பேக் தொகையை வாடிக்கையாளர்கள் இருவழிகளில் பெற முடியும்.
- ஜியோ POS அதிகாரப்பூர்வ விற்பனையாளரிடம் வாங்கும் போது, வாடிக்கையாளரின் சாதனத்தில் ஜியோ சிம் லாக் செய்யப்பட்டு, உடனடியாக ரூ. 550 தள்ளுபடி பெறலாம்.
- ப்ளிப்கார்ட் அல்லது இதர தளங்களில் ஜியோ சலுகை பற்றி அறிந்துகொள்ளாமல் ஸ்மார்ட்போனினை வாங்கி இருந்தால், பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட மைஜியோ செயலி மூலம் 15 நாட்களுக்குள் கேஷ்பேக் தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.
- சாதனத்தை வெற்றிகரமாக பதிவு செய்துவிட்டால், வாடிக்கையாளர்கள் தங்களின் UPI விவரங்களை கொடுத்து ரூ. 550 தொகையை வங்கி கணக்கிற்கு நேரடியாக பெற்றுக் கொள்ள முடியும்.
- இந்த சலுகையை முழுமையாக பெற வாடிக்கையாளர்கள் சாதனத்தில் ஜியோ சிம் கார்டினை பிரைமரி சிம் ஆக குறைந்தபட்சம் 30 மாதங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
போக்கோ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு குறித்து அந்நிறுவன அதிகாரி பதில் அளித்து இருக்கிறார்.
போக்கோ நிறுவனம் சமீபத்தில் தனது X3 GT ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை 200 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14,855 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது என போக்கோ இந்தியா இயக்குனர் அனுஜ் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.
'இந்தியாவுக்கென பெரிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. எனினும், போக்கோ X3 GT இதில் இடம்பெறவில்லை. வாடிக்கையாளர்கள் மத்தியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை,' என அனுஜ் ஷர்மா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அம்சங்களை பொருத்தவரை போக்கோ X3 GT மாடலில் 6.6 இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரேஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
முன்னணி ஆடியோ சாதனங்கள் உற்பத்தியாளரான JBL இந்தியாவில் இரண்டு வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹார்மன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஆடியோ பிரிவு பிராண்டான JBL இந்திய சந்தையில் இரு ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை JBL லைவ் ப்ரோ பிளஸ் மற்றும் JBL லைவ் 660NC என அழைக்கப்படுகின்றன. இவற்றில் JBL சிக்னேச்சர் சவுண்ட், அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ஸ்மார்ட் ஆம்பியன்ட், ஹேன்ட்ஸ்-ப்ரீ கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
JBL லைவ் ப்ரோ பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இன்-இயர் டிசைன் மற்றும் சிறிய ஸ்டெம் கொண்டிருக்கிறது. இத்துடன் 3 எக்கோ கேன்சலிங் மைக், டூயல் கனெக்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமின்றி ஆட்டோ பிளே/பாஸ், பாஸ்ட் பேர், IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், ஸ்பீடு சார்ஜ், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களும் உள்ளன.

இதில் உள்ள பேட்டரி ANC பயன்படுத்தாத போது 7 மணி நேரங்களும், ANC பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்கும் பேக்கப் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சேர்த்தால் கூடுதலாக 21 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும்.
JBL லைவ் 660NC மாடல் ஒவர்-தி-இயர் ரக வயர்லெஸ் ஹெட்போன் ஆகும். இதில் JBL சிக்னேச்சர் சவுண்ட், அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம், ஸ்மார்ட் ஆம்பியன்ட் அம்சங்கள் உள்ளன. இத்துடன் அமேசான் அலெக்சா, கூகுள் அசிஸ்டண்ட் சேவைகளை ஹேண்ட்ஸ்-பிரீ முறையில் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.
JBL லைவ் ப்ரோ பிளஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ, 16,999 ஆகும். JBL லைவ் 660NC மாடல் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12,999 ஆகும். இரு மாடல்களும் JBL ஆன்லைன் வலைதளம் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
சோனியின் புதிய பிளே ஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல் அதிவேகமாக விற்பனையாகும் பிளே ஸ்டேஷன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
சோனி கார்ப்பரேஷன் தனது பிளே ஸ்டேஷன் 5 கன்சோல் உலகளாவிய விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. மேலும் அதிவேக விற்பனையாகும் பிளே ஸ்டேஷன் கன்சோலாகவும் பிளே ஸ்டேஷன் 5 இருக்கிறது.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 45 லட்சம் பிளே ஸ்டேஷன் 5 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. பின் 2021 மார்ச் மாத வாக்கில் சுமார் 78 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. மொத்தத்தில் ஒரு கோடி பிளே ஸ்டேஷன் 5 யூனிட்கள் எட்டு மாதங்களில் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

முந்தைய பிளே ஸ்டேஷன் 4 கன்சோல் விற்பனையில் பத்து கோடி யூனிட்களை ஆறு ஆண்டுகளில் எட்டியது. தற்போதைய வரவேற்பை பார்க்கும் போது, புதிய பிளே ஸ்டேஷன் 5 இந்த மைல்கல்லை முன்கூட்டியே எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வன்பொருள் பொறியியல் நிர்வாக குழு மற்றும் சர்வதேச வியாபார நிர்வாக குழுவின் ஒருங்கிணைந்த முயற்சி காரணமாகவே மிக குறுகிய காலக்கட்டத்தில் இத்தனை யூனிட்களை விற்பனை மற்றும் வினியோகம் செய்ய முடிந்தது என சோனி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
போஸ்ட்பெயிட் சலுகையை போன்றே என்ட்ரி லெவல் பிரீபெயிட் சலுகையை ஏர்டெல் நிறுவனம் திடீரென நிறுத்தி இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவந்த ரூ. 49 விலை என்ட்ரி லெவல் சலுகையை நீக்கி இருக்கிறது. அதன்படி ஏர்டெல் பிரீபெயிட் சலுகை துவக்க விலை தற்போது ரூ. 79 என மாறி இருக்கிறது. ரூ. 79 ஸ்மார்ட் ரீசார்ஜ் சலுகையில் இருமடங்கு டேட்டா, நான்கு மடங்கு அவுட்கோயிங் நிமிடங்கள் வழங்கப்படுகிறது.
முன்னதாக போஸ்ட்பெயிட் சலுகை விலையை ஏர்டெல் மாற்றியமைத்தது. தலைசிறந்த கனெக்டிவிட்டியை வழங்கும் நோக்கில் புதிய மாற்றங்களை மேற்கொள்வதாக ஏர்டெல் அறிவித்து இருக்கிறது. ஏர்டெல் என்ட்ரி லெவல் ரிசார்ஜ் சலுகைகளில் அக்கவுண்ட் பேலன்ஸ் பற்றிய கவலை இன்றி வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் இணைப்பில் இருக்கலாம் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளது.

ரூ. 79 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 64 டாக்டைம், 200 எம்.பி. டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு நொடிக்கு ஒரு பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முந்தைய ரூ. 49 சலுகையில் ரூ. 38.52 டாக்டைம், 100 எம்.பி. டேட்டா, அழைப்புகளை மேற்கொள்ள நொடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்பட்டது.
புதிய மாற்றம் காரணமாக ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளரிடம் இருந்து பெற்றுவந்த சராசரி வருவாய் அதிகரிக்கும். எனினும், குறைந்த விலை சலுகையை பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு இனி ரூ. 30 கூடுதல் செலவாகும். இந்த மாற்றம் ஜூலை 28 ஆம் அமலுக்கு வந்தது.
ஆப்பிள் நிறுவனம் மூன்றாவது காலாண்டிற்கான வருவாய் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் கடந்த காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் இந்திய மதிப்பில் ரூ. 1,61,588 கோடிகளாக அதிகரித்து இருக்கிறது. ஐபோன் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் விற்பனையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஆப்பிள் நிறுவன வருவாய் வருடாந்திர அடிப்படையில் 36 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஐபோன் வருவாய் 50 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இவற்றுடன் மேக் மற்றும் ஐபேட் மாடல்களின் விற்பனையும் வருடாந்திர அடிப்படையில் அதிகரித்து இருக்கிறது.

அதிக பிரபலம் இல்லாத ஆப்பிள் நிறுவனத்தின் 'இதர பொருட்கள்' பரிவு விற்பனையும் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இந்த பிரிவில் ஏர்பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் விற்பனையில் கணிசமான பங்குகளை பெற்றுள்ளன.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகின் பல்வேறு நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதே ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. இத்துடன் புது ஸ்மார்ட்போன் வாங்குவோரில் பலர் 5ஜி சாதனங்களை வாங்க திட்டமிட்டதும் ஐபோன் விற்பனை வளர்ச்சிக்கு காரணம் ஆகும்.
நத்திங் நிறுவனத்தின் முதல் வயர்லெஸ் இயர்போனில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் இந்தியாவில் இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. இந்த இயர்போன் முற்றிலும் டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இயர்பட்ஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெளிவாக பார்க்க முடிகிறது.
நத்திங் இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 11.6 எம்எம் டிரைவர், ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் இயர்பட் ஒவ்வொன்றும் 4.7 கிராம் எடை கொண்டிருக்கிறது. இவை காதுகளில் சவுகரியமாக பொருந்திக் கொள்ளும் வகையிலும், நீண்ட நேர பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மூன்றுவித அளவுகளில் லிக்விட் சிலிகான் டிப்கள் வழங்கப்படுகின்றன.

இயர் 1 மாடலில் உள்ள மூன்று உயர் ரக மைக் கொண்டு ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் செயல்படுத்தப்படுகிறது. இந்த இயர்போனில் லைட் மோட் மற்றும் மேக்சிமம் மோட் உள்ளன. இவை முறையே வெளிப்புற சத்தத்தை குறைவாகவும், முழுமையாகவும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன. மேலும் இதில் உள்ள க்ளியர் வாய்ஸ் தொழில்நுட்பம் பேக்கிரவுண்டு சத்தத்தை குறைக்கிறது.
இவற்றுடன் பைன்ட் மை இயர்பட், இ.க்யூ., ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் கஸ்டமைசேஷன், வாட்டர் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரி 5.7 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இதன் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் 34 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கிறது. இதில் உள்ள அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 8 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.
இந்தியாவில் நத்திங் இயர் 1 விலை ரூ. 5,999 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி துவங்குகிறது. புதிய நத்திங் இயர் 1 இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் பிரிட்டனிலும் அறிமுகமாகி இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சத்தில் அசத்தலான புது மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் ரீல்ஸ் அம்சத்தை அதிகளவில் பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக ரீல்ஸ் அம்சத்தின் வீடியோ கால அளவை 60 நொடிகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
Reels. up to 60 secs. starting today. pic.twitter.com/pKWIqtoXU2
— Instagram (@instagram) July 27, 2021
இத்துடன் ஆடியோவை எழுத்துக்களாக மாற்றும் கேப்ஷன் ஸ்டிக்கர் அம்சமும் இன்ஸ்டாவில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக கேப்ஷன் ஸ்டிக்கர் அம்சம் பரவலாக ஆங்கிலம் பயன்படுத்தப்படும் வெளிநாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அப்டேட்டில் இந்த அம்சம் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரீல்ஸ் அம்சத்தில் முன்னதாக வீடியோ கால அளவு 30 நொடிகளாக இருந்துவந்தது. ரீல்ஸ் அம்சத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றம் இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.
ZTE நிறுவனத்தின் ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போனில் இரண்டாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ZTE நிறுவனம் ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது இரண்டாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கும் நிலையில், இதன் சர்வதேச வெளியீட்டையும் ZTE உறுதிப்படுத்தி இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை ஆக்சன் 30 5ஜி மாடலில் 6.92 இன்ச் FHD AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம்+256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி+256 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் 3CM மேக்ரோ புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 55 வாட் பாஸ்ட் சார்ஜிங், பவர் டெலிவரி, குவிக் சார்ஜ் 4+ வழங்கப்பட்டு இருக்கிறது.
ZTE ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மைஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது புது ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி பிளாஷ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்து இருக்கிறார். இது மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட உலகின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் பெயர் குறிப்பிடாமல் டீசரை மட்டும் ரியல்மி வெளியிட்டு இருந்தது.

புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை ரியல்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் மேக்டார்ட் என அவைக்கப்பட இருக்கிறது. மேக்டார்ட் என்பது க்ளிப்-ஆன் அக்சஸரி ஆகும். இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஆப்பிள் மேக்சேப் சாதனத்தை போன்றே செயல்படுகிறது.
மேக்டார்ட் சாதனத்துடன் கூலிங் பேன் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த பேன் யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர் கொண்டிருக்கிறது. இது சார்ஜிங்கின் போது ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ள வழி செய்கிறது. தற்போதைய தகவல்களின்படி ரியல்மி பிளாஷ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.






