search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஏர்டெல்
    X
    ஏர்டெல்

    குறைந்த விலை சலுகையை நீக்கிய ஏர்டெல்

    போஸ்ட்பெயிட் சலுகையை போன்றே என்ட்ரி லெவல் பிரீபெயிட் சலுகையை ஏர்டெல் நிறுவனம் திடீரென நிறுத்தி இருக்கிறது.


    ஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவந்த ரூ. 49 விலை என்ட்ரி லெவல் சலுகையை நீக்கி இருக்கிறது. அதன்படி ஏர்டெல் பிரீபெயிட் சலுகை துவக்க விலை தற்போது ரூ. 79 என மாறி இருக்கிறது. ரூ. 79 ஸ்மார்ட் ரீசார்ஜ் சலுகையில் இருமடங்கு டேட்டா, நான்கு மடங்கு அவுட்கோயிங் நிமிடங்கள் வழங்கப்படுகிறது.

    முன்னதாக போஸ்ட்பெயிட் சலுகை விலையை ஏர்டெல் மாற்றியமைத்தது. தலைசிறந்த கனெக்டிவிட்டியை வழங்கும் நோக்கில் புதிய மாற்றங்களை மேற்கொள்வதாக ஏர்டெல் அறிவித்து இருக்கிறது. ஏர்டெல் என்ட்ரி லெவல் ரிசார்ஜ் சலுகைகளில் அக்கவுண்ட் பேலன்ஸ் பற்றிய கவலை இன்றி வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் இணைப்பில் இருக்கலாம் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளது.

     கோப்புப்படம்

    ரூ. 79 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 64 டாக்டைம், 200 எம்.பி. டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு நொடிக்கு ஒரு பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முந்தைய ரூ. 49 சலுகையில் ரூ. 38.52 டாக்டைம், 100 எம்.பி. டேட்டா, அழைப்புகளை மேற்கொள்ள நொடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்பட்டது. 

    புதிய மாற்றம் காரணமாக ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளரிடம் இருந்து பெற்றுவந்த சராசரி வருவாய் அதிகரிக்கும். எனினும், குறைந்த விலை சலுகையை பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு இனி ரூ. 30 கூடுதல் செலவாகும். இந்த மாற்றம் ஜூலை 28 ஆம் அமலுக்கு வந்தது.

    Next Story
    ×