என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சியோமியின் ரெட்மிபுக் லேப்டாப் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    சியோமியின் ரெட்மிபுக் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. சில தினங்களுக்கு முன் ரெட்மிபுக் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசரை சியோமி வெளியிட்டது. தற்போது இந்த மாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது இந்தியாவில் வெளியாகும் முதல் ரெட்மி பிராண்டு லேப்டாப் ஆகும். 

     ரெட்மிபுக் டீசர்

    எம்.ஐ. நோட்புக் சீரிஸ் மூலம் இந்திய லேப்டாப் சந்தையில் சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு களமிறங்கியது. தற்போது ரெட்மி பிராண்டு லேப்டாப்களும் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன. இந்தியாவில் ரெட்மிபுக் மாடல்கள் விலை, சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    ஏற்கனவே பல்வேறு ரெட்மிபுக் மாடல்கள் சீனாவில் அறிமுகமாகி இருப்பதால், இந்தியாவில் எந்த மாடல் அறிமுகமாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    போட் நிறுவனத்தின் ஏர்டோப்ஸ் 501 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பீஸ்ட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.


    இந்தியாவை சேர்ந்த ஆடியோ சாதனங்கள் விற்பனையாளரான போட், ஏர்டோப்ஸ் 501 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் இந்த இயர்பட்ஸ் ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, பீஸ்ட் தொழில்நுட்பம், இன்ஸ்டா வேக் அன்ட் பேர் தொழில்நுட்பம், ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. 

    இதில் உள்ள 8 எம்.எம். டிரைவர்கள் போட் சிக்னேச்சர் சவுண்ட், ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் வெளிப்புற சத்தத்தை 30 டிபி வரை குறைக்கிறது. இத்துடன் போட் நிறுவனத்தின் (Bionic Engine And Sonic Technology - BEAST) பீஸ்ட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இது ஆடியோ மற்றும் வீடியோ சீராக இயங்க வழி செய்கிறது. 

     போட் ஏர்டோப்ஸ் 501 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

    போட் ஏர்டோப்ஸ் 501 மாடலில் IPX4 தர ரேட்டிங், டச் கண்ட்ரோல், ஒருமுறை சார்ஜ் செய்தால் 5 மணி நேரத்திற்கான பேக்கப், யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங், ASAP சார்ஜ் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ASAP  சார்ஜிங் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 60 நிமிடத்திற்கான பிளேபேக் வழங்குகிறது. 

    இந்தியாவில் போட் ஏர்டோப்ஸ் 501 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 2499 ஆகும். இது அமேசான் மற்றும் போட் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    நோக்கியா XR20 ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் முதல் ரக்கட் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகி இருக்கிறது.


    ஹெச்.எம்.டு. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா XR20 ரக்கட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. வாட்டர் ப்ரூப் வசதி கொண்ட புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் MIL-STD-810H மிலிட்டரி தர உறுதித்தன்மை கொண்டுள்ளது. அம்சங்களை பொருத்தவரை நோக்கியா XR20 மாடலில் 6.67 இன்ச் FHD+ பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா விக்டஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

     நோக்கியா XR20

    நோக்கியா XR20 அம்சங்கள்

    - 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 20:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 480 8nm பிராசஸர்
    - அட்ரினோ 619 GPU
    - 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
    - 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 11
    - 48 எம்பி பிரைமரி கேமரா, ƒ/1.79, LED பிலாஷ், ZEISS ஆப்டிக்ஸ்
    - 13 எம்பி 123° அல்ட்ரா வைடு கேமரா, f/2.4, OZO ஆடியோ
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - 3.5mm ஆடியோ ஜாக், OZO பிளேபேக்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810H சான்று
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 4630 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங்

    நோக்கியா XR20 ஸ்மார்ட்போன் கிரானைட் மற்றும் அல்ட்ரா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 108 எம்பி பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன.


    மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. முதற்கட்டமாக புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகமாகின்றன. புதிய மோட்டோ எட்ஜ் மாடல்களில் 100 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட இருக்கின்றன.

     மோட்டோரோலா டீசர்

    மோட்டோ எட்ஜ் 20 | எட்ஜ் 20 ப்ரோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    - 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED 120Hz டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778 5ஜி (எட்ஜ் 20) | ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் (எட்ஜ் 20 ப்ரோ)
    - அட்ரினோ 642L GPU (எட்ஜ் 20) | அட்ரினோ 650 GPU (எட்ஜ் 20 ப்ரோ)
    - 6 ஜிபி / 8 ஜிபி / 12 ஜிபி ரேம் (எட்ஜ் 20 ப்ரோ )
    - 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு 11
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - 108 எம்பி பிரைமரி கேமரா
    - 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
    - 8 எம்பி டெலிபோட்டோ கேமரா
    - 32 எம்பி செல்பி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார் | இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (எட்ஜ் 20 ப்ரோ)
    - 3.5mm ஆடியோ ஜாக்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி | 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி (எட்ஜ் 20 ப்ரோ)
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    மோட்டோ எட்ஜ் 20 ஸ்மார்ட்போன் எமரால்டு ஸ்டவுட், வைட் நிறங்களிலும் மோட்டோ எட்ஜ் 20 ப்ரோ மாடல் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களிலும் கிடைக்கிறது. முந்தைய தகவல்களில் மோட்டோ எட்ஜ் 20 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையிலும், எட்ஜ் 20 ப்ரோ ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற சந்தைகளிலும் அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டது.

    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் பிராண்டு ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. தற்போது மற்றொரு இன் சீரிஸ் ஸ்மார்ட்போனை வெளியிடும் பணிகளில் மைக்ரோமேக்ஸ் ஈடுபட்டு வருகிறது. புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் பென்ச்மார்க் வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன் 2 அல்லது இன் நோட் 2 என அழைக்கப்படலாம்.

     மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்

    கீக்பென்ச் தள விவரங்களின்படி புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் E7446 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

    இவைதவிர புது ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் வெளியாகவில்லை. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை ஜூலை 30 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் இன் 2பி அல்லது இன் 1பி மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. வரும் நாட்களில் புது ஸ்மார்ட்போனின் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    லெனோவோ நிறுவனத்தின் டேப் பி11 டேப்லெட் இந்தியாவில் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.


    லெனோவோ நிறுவனத்தின் டேப் பி11 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த மாடல் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய லெனோவோ டேப் பி11 மாடலில் 11 இன்ச் WUXGA+ 2K தொடுதிரை வசதி கொண்ட IPS ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் புதிய லெனோவோ டேப்லெட் மாடலில் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 8 எம்பி செல்பி கேமரா, 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிலாஷ், குவாட் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் வசதி மற்றும் 12 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் பேட்டரி உள்ளது.

     லெனோவோ டேப் பி11

    லெனோவோ டேப் பி11 அம்சங்கள்

    - 11 இன்ச் 2000x1200 பிக்சல் IPS LCD ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 4 ஜிபி LPDDR4 ரேம்
    - 128 ஜிபி மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ் 
    - 8 எம்பி செல்பி கேமரா 
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ 
    - குவாட் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் 
    - 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 7500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    லெனோவோ டேப் பி11 மாடல் பிளாட்டினம் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லெனோவோ டேப்லெட் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    அமேசான் பிரைம் டே சேல் 2021 சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அமேசான் பிரைம் டே சேல் 2021 துவங்கி நடைபெற்று வருகிறது. அமேசானில் பிரைம் சந்தாதாரர்களுக்கு மட்டும் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் - அமேசானில் கேலக்ஸி எம்31எஸ் வாங்குவோருக்கு ஒன்பது மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 15,499 ஆகும். 

    எம்ஐ 11எக்ஸ் 5ஜி - சியோமி எம்ஐ 11எக்ஸ் 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் 18 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு சலுகையில் எம்ஐ 11எக்ஸ் 5ஜி விலை ரூ. 27,999 என மாற்றப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 33,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

     ஒன்பிளஸ் 9

    ஒன்பிளஸ் 9 - அமேசான் பிரைம் டே விற்பனையில் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ரூ. 49,999 விலையிலும், ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக ரூ. 4 ஆயிரம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 

    கேலக்ஸி எம்42 5ஜி - சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்42 5ஜி மாடல் விலை ரூ. 21,999 என மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஒன்பது மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் 9 ஆர் 5ஜி - அமேசான் பிரைம் டே சேல் விற்பனையில் ஒன்பிளஸ் 9 ஆர் 5ஜி மாடல் ரூ. 39,999 சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் புது ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    2021 ஐபோன் புகைப்பட போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஷரன் ஷெட்டி வெற்றி பெற்று இருக்கிறார்.

    ஆப்பிள் நிறுவனம் வருடாந்திர ஐபோன் புகைப்பட போட்டிக்கான வெற்றியாளர்களை அறிவித்து இருக்கிறது. ஆண்டின் சிறந்த புகைப்படக்காரருக்கான முதல் இடத்தை இந்தியரான ஷரன் ஷெட்டி வென்று இருக்கிறார். பூனேவை சேர்ந்த ஷரன் ஷெட்டி தனது ஐபோன் எக்ஸ் மூலம் எடுத்த புகைப்படத்தை சிறந்த புகைப்படமாக ஆப்பிள் தேர்வு செய்துள்ளது.

    மொத்தம் 18 பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போட்டியில் ஷரன் ஷெட்டியின் புகைப்படம் வெற்றி பெற்று இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களுக்காக புகைப்பட போட்டியை ஆப்பிள் நடத்தி வருகிறது. ஷரன் ஷெட்டியின் புகைப்படம் 'பான்டிங்' தலைப்பின் கீழ் முதல் பரிசை வென்று இருக்கிறது.

     ஷரன் ஷெட்டி எடுத்த புகைப்படம்

    ஐபோன் புகைப்பட போட்டியில் கிராண்ட் பிரைஸ் வின்னராக ஹங்கேரியை சேர்ந்த இஸ்வான் கெரிகிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபோன் புகைப்பட போட்டியை ஆப்பிள் கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களுக்காக இந்த போட்டியை ஆப்பிள் நடத்தி வருகிறது. 18 பிரிவுகளுக்கான வெற்றியாளர்களை ஆப்பிள் அறிவித்து இருக்கிறது. 

    முதல் மூன்று இடங்களை பிடித்த வெற்றியாளர்களுக்கான பரிசு விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதுதவிர 2022 ஐபோன் புகைப்பட போட்டிக்கான அறிவிப்பை ஆப்பிள் வெளியிட்டு உள்ளது. இந்த போட்டியில் சமர்பிக்கப்படும் புகைப்படங்கள் வேறு எந்த போட்டிக்கும் அனுப்பப்பட்டு இருக்கக் கூடாது. மேலும் புகைப்படங்கள் கணினி மென்பொருள்கள் எதிலும் எடிட் செய்யப்பட்டு இருக்கக் கூடாது. 
    சாம்சங் நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி ஏ22 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருககிறது. ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ கோர் 3.1 ஒஎஸ் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ22 5ஜி பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி

    சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி அம்சங்கள்

    - 6.6 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி வி LCD ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் 
    - மாலி-G57 MC2 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ கோர் 3.1
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
    - 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0 
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
    - 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி மாடல் கிரே, மின்ட் மற்றும் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 19,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் 3 மாடல் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இம்முறை ஐபோன்கள் மட்டுமின்றி ஏர்பாட்ஸ் 3 அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஏர்பாட்ஸ் 3 பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. மேலும் புதிய ஏர்பாட்ஸ் உதிரி பாகங்கள் ஏற்கனவே வினியோகம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

    அந்த வகையில் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களுடன் ஏர்பாட்ஸ் 3 மாடலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் 3 விலையும் மிக அதிகமாக நிர்ணயம் செய்யப்படாது என்றே கூறப்படுகிறது. ஐபோன் 13 சீரிஸ் மாடல்களுடன் ஹெட்போன்கள் வழங்கப்படாது என்பதால், ஏர்பாட்ஸ் 3 விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என தெரிகிறது.

     ஆப்பிள் ஏர்பாட்ஸ்

    தோற்றத்தில் ஏர்பாட்ஸ் 3 முந்தைய தலைமுறை மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஏர்பாட்ஸ் அளவில் சிறிய ஸ்டெம் பகுதியுடன், சென்சார் மற்றும் மைக்ரோபோன்களை கொண்டிருக்கிறது. தற்போதைய தகவல்களின்படி ஏர்பாட்ஸ் 3 வெள்ளை நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது. ஏர்பாட்ஸ் 3 புதிய சிப்செட் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ஏர்பாட்ஸ் 3 மாடலில் ஆப்பிள் மியூசிக் லாஸ்லெஸ் ஆடியோ, முந்தைய மாடல்களை விட சிறப்பான பேட்டரி பேக்கப் போன்றவை வழங்கப்படலாம்.

    ஹெச்.எம்.டி. குளோபல் அறிமுகம் செய்து இருக்கும் நோக்கியா 110 4ஜி பீச்சர் போன் மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி அம்சம் வழங்கப்படவில்லை.


    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 110 4ஜி பீச்சர் போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நோக்கியா போன் வோல்ட்இ காலிங் வசதி கொண்டிருக்கிறது. புதிய நோக்கியா 110 மாடலில் 1.8 இன்ச் QVGA LCD ஸ்கிரீன், பாலிகார்பனைட் பாடி, வெப் பிரவுசர், இன்-பில்ட் டார்ச், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, மியூசிக் பிளேயர், 0.8 எம்.பி. QVGA பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள மேம்பட்ட யு.ஐ. நேவிகேஷன் அம்சத்தை சிறப்பாக வழங்குகிறது. புதிய ரீட்-அவுட் அம்சம் எழுத்துக்களை வார்த்தைகளாக உச்சரிக்கும். முந்தைய நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி மாடல்களில் வழங்கப்பட்டு இருந்த ப்ளூடூத் அம்சம் இந்த மாடலில் வழங்கப்படவில்லை.

     நோக்கியா 110 4ஜி

    நோக்கியா 110 4ஜி அம்சங்கள்

    - 1.8 இன்ச் 160x120 பிக்சல் QQVGA LCD ஸ்கிரீன்
    - 128 எம்பி ரேம், 48 எம்பி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, எம்.பி.3 பிளேயர்
    - 0.8 எம்.பி. QVGA பிரைமரி கேமரா
    - டூயல் சிம்
    - GSM: 850, 900, 1800 | WCDMA: 1, 5, 8 | FDD LTE: 1, 3, 5, 8
    - மைக்ரோ யு.எஸ்.பி.
    - 1020 எம்.ஏ.ஹெச். பேட்டரி 

    நோக்கியா 110 4ஜி மாடல் எல்லோ, அக்வா மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2799 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் அமேசான், நோக்கியா வலைதளங்களில் இன்று (ஜூலை 24) விற்பனை செய்யப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மேக்புக் ஏர் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் மாடலை அடுத்த ஆண்டு அப்டேட் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 13.3 இன்ச் மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ஏர் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    முந்தைய தகவல்களிலும் புதிய மேக்புக் ஏர் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுதவிர 14 மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களை ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மினி எல்.இ.டி. தொழில்நுட்பம் வழக்கமான OLED பேனல்களை போன்ற பலன்களை அளிக்கிறது.

     மேக்புக் ஏர்

    எனினும், மினி எல்.இ.டி. சிறப்பான கான்டிராஸ்ட், மேம்பட்ட டைனமிக் ரேன்ஜ் வழங்குகிறது. மினி எல்.இ.டி. தொழில்நுட்பம் கொண்டு வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் முதல் சாதனமாக 2021 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ இருக்கிறது. இவைதவிர மேலும் பல்வேறு ஆப்பிள் சாதனங்களில் மினி எல்.இ.டி. தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக ஆப்பிள் வல்லுநர்கள் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

    புது மேக்புக் ஏர் மாடல் மேக்சேப் சார்ஜிங் வசதி, குறைந்தபட்சம் இரண்டு யு.எஸ்.பி. 4 போர்ட்கள், குறைந்த எடையில் மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மேக்புக் ஏர் கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த எம்1 பிராசஸரின் மேம்பட்ட வெர்ஷனை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    ×