என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    போக்கோ நிறுவனத்தின் புதிய போக்கோ F3 GT கேமிங் ஸ்மார்ட்போன் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.


    போக்கோ நிறுவனத்தின் போக்கோ F3 GT கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது போக்கோவின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும். அம்சங்களை பொருத்தவரை போக்கோ F3 GT மாடலில் 6.67 இன்ச் FHD+ Flexible 10-பிட் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1200 சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. புதிய போக்கோ F3 GT மாடலில் 5065 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     போக்கோ F3 GT

    போக்கோ F3 GT அம்சங்கள்

    - 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED 20:9 HDR10 + டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 3GHz ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 6nm பிராசஸர்
    - ARM G77 MC9 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி
    - 8 ஜிபி LPDDR4x ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி
    - டூயல் சிம் 
    - MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    - 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.65, LED பிளாஷ்
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 16 எம்பி செல்பி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார், இன்ப்ராரெட் சென்சார்
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
    - யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ, டால்பி அட்மோஸ்
    - 5ஜி SA/NSA (n77/n78), டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5,065 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 67 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    போக்கோ F3 GT ஸ்மார்ட்போன் கன்மெட்டல் சில்வர், பிரிடேட்டர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 26,999, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 28,999 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 30,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூலை 26 ஆம் தேதி துவங்குகிறது.

    எனினும், போக்கோ F3 GT ஸ்மார்ட்போன் முதல் இரண்டு வாரங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதன்படி முதல் விற்பனை துவங்கி ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை இந்த ஸ்மார்ட்போன் ரூ. 25,999 துவக்க விலையிலும், இரண்டாவது விற்பனை துவங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ரூ. 26,499 விலையிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.  
    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    ரியல்மி நிறுவனத்தின் வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன. இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களும் LCD ஸ்கிரீன், இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங், ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் 90-க்கும் அதிக ஸ்போர்ட் மோட்களை கொண்டிருக்கின்றன.

    ரியல்மி வாட்ச் 2 ப்ரோ மாடலில் ஜி.பி.எஸ். வசதி, 390 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி 14 நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது. 

     ரியல்மி வாட்ச் 2

    ரியல்மி வாட்ச் 2 அம்சங்கள்

    - 1.4 இன்ச் 320x320 பிக்சல் LCD ஸ்கிரீன்
    - 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
    - இதய துடிப்பு சென்சார், ரோட்டார் வைப்ரேஷன் மோட்டார்
    - ப்ளூடூத் 5.0
    - 90 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
    - இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார்
    - நோட்டிபிகேஷன்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
    - 315 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ரியல்மி வாட்ச் 2 ப்ரோ

    ரியல்மி வாட்ச் 2 ப்ரோ அம்சங்கள்

    - 1.75 இன்ச் 320x385 பிக்சல் LCD ஸ்கிரீன்
    - 2.5D ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் கிளாஸ்
    - 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
    - இதய துடிப்பு சென்சார்
    - ப்ளூடூத் 5.0
    - டூயல் ஜி.பி.எஸ்.
    - 90 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
    - இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார்
    - நோட்டிபிகேஷன்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
    - 390 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ரியல்மி வாட்ச் 2 பிளாக் நிறத்திலும் வாட்ச் 2 ப்ரோ ஸ்பேஸ் கிரே மற்றும் மெட்டாலிக் சில்வர் நிறங்களிலும் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 3,499 மற்றும் ரூ. 4,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி வாட்ச் 2 மட்டும் ரூ. 2999 சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. சிப்செட், 50 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு 2 5ஜி மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் 6.43 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. சிப்செட், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர்ஒஎஸ் 11.3 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11.3 வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது.

     ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி

    ஒன்பிளஸ் நார்டு 2 அம்சங்கள்

    - 6.43 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 408 ppi 20:9 புளூயிட் AMOLED டிஸ்ப்ளே
    - 3GHz ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1200-ஏஐ பிராசஸர்
    - ARM G77 MC9 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
    - 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி (UFS 31) மெமரி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 11.3
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - 50 எம்பி பிரைமரி கேமரா, 1μm, f/1.88, OIS, டூயல் LED பிளாஷ்
    - 8 எம்பி 119.7° அல்ட்ரா வைடு கேமரா, f/2.25, EIS
    - 2 எம்பி மோனோ கேமரா, f/2.5
    - 32 எம்பி செல்பி கேமரா, f/2.45, EIS
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2
    - 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வார்ப் சார்ஜ் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 27,999 என்றும், 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 29,999 என்றும் டாப் எண்ட் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 34,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ப்ளிக்ஸ் பொழுதுபோக்கு மட்டுமின்றி கேமிங் துறையிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளது.


    இந்தியாவில் முன்னணி ஓ.டி.டி. தளங்களில் ஒன்றாக இருக்கும் நெட்ப்ளிக்ஸ் விரைவில் கேமிங் சந்தையில் களமிறங்க இருக்கிறது. 2021 இரண்டாவது காலாண்டிற்கான வருவாய் அறிக்கை வெளியீட்டின் போது நெட்ப்ளிக்ஸ் இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. 

     கோப்புப்படம்

    நெட்ப்ளிக்ஸ் கேமிங் சேவைக்கான சந்தா, பயனர் ஏற்கனவே செலுத்திய கட்டணத்திலேயே சேர்க்கப்பட்டுவிடும். இதனால் எவ்விதமான கூடுதல் கட்டணமும் இன்றி பயனர்கள் நெட்ப்ளிக்ஸ் கேமிங் சேவையை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தலாம். 

    வருவாய் அறிக்கையின்படி நெட்ப்ளிப்க்ஸ் நிறுவனம் 7.3 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 19 சதவீதம் அதிகம் ஆகும். தற்போது நெட்ப்ளிக்ஸ் சேவையை 20.9 கோடி பயனர்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர். இது சரசாரி கட்டண வருவாயில் 11 சதவீதமும், ஒரு சந்தாதாரரின் வருவாயில் 8 சதவீதமும் அதிகம் ஆகும்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் 48 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்களை கொண்டிருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் அம்சங்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எம்21 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது. எனினும், இதன் பின்புறம் புது பேனல் டிசைன், 48 எம்பி சாம்சங் ISOCELL GM2 சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.4 இன்ச் FHD+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி டெப்த் கேமரா, 20 எம்பி செல்பி கேமரா உள்ளது.

     கேலக்ஸி எம்21 2021 எடிஷன்

    இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்க்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஆர்க்டிக் புளூ மற்றும் சார்கோல் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 12,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதுதவிர சாம்சங் தனது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இவ்விழாவில் சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய சாதனங்கள், கேலக்ஸி வாட்ச் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
    டிசோ பிராண்டு வயர்லெஸ் இயர்போன்களின் முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

    ரியல்மியின் டிசோ பிராண்டு இரு இயர்பட்கள் - டிசோ வயர்லெஸ் நெக்பேண்ட் மற்றும் டிசோ கோபாட்ஸ் டி இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. டிசோ வயர்லெஸ் நெக்பேண்ட் விலை ரூ. 1499, டிசோ கோபாட்ஸ் டி ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இரு இயர்போன்களின் முன்பதிவு ரூ. 1 கட்டணத்தில் நடைபெறுகிறது.

     ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட்

    ப்ளிப்கார்ட் தளத்தில் இரு டிசோ இயர்போன்களின் முன்பதிவும் ஜூலை 21 ஆம் தேதி துவங்கி ஜூலை 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்பதிவில் ரூ. 1 செலுத்தி மீதமுள்ள தொகையை பின்னர் செலுத்தி இயர்போன்களை வாங்கிக் கொள்ளலாம். ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை காரணமாக டிசோ இயர்போன்களுக்கு ரூ. 200 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    டிசோ நெக்பேண்ட் பிளாக், புளூ, ஆரஞ்சு மற்றும் கிரீன் போன்ற நிறங்களிலும், கோபாட்ஸ் டி இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. டிசோ வயர்லெஸ் நெக்பேண்ட் 11.2 எம்எம் பேஸ் பூஸ்ட் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 150 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
    இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போனின் புது 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. புது மெமரி வேரியண்டை தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    அதன்படி இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே மாடலில் 6.82 இன்ச் HD+LCD டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் XOS 7.0 ஒ.எஸ். வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

     இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே

    இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே அம்சங்கள்

    - 6.82 இன்ச் 1640x720 பிக்சல் HD+ 20.5:9 மினி டிராப் டிஸ்ப்ளே
    - 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
    - IMG PowerVR GE8320 GPU
    - 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் 
    - XOS 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் LED பிளாஷ்
    - டெப்த் சென்சார்
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, LED பிளாஷ்
    - கைரேகை சென்சார் 
    - 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ 
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 

    இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் 7 டிகிரி பர்பில், ஏஜியன் புளூ மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999 என்றும் புதிய 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பைட்டேன்ஸ் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலியை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இந்தியாவில் டிக்டாக் செயலி மீண்டும் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் இந்திய காப்புரிமை அலுவலகத்தில் TickTack எனும் பெயருக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. அதன்படி டிக்டாக் செயலி TickTack பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     டிக்டாக்

    முன்னதாக பைட்டேன்ஸ் நிறுவனம் டிக்டாக் செயலியை மீண்டும் இந்தியாவில் வெளியிடும் முயற்சியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மேலும் இந்தியாவில் சமீபத்தில் அமலுக்கு வந்த புது தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்று செயல்பட பைட்டேன்ஸ் ஒப்புக் கொள்வதாக அறிவித்தது. இதற்கென 2019 வாக்கில் பைட்டேன்ஸ் குறைதீர்க்கும் அதிகாரியை நியமித்தது.

    சமீபத்தில் பப்ஜி மொபைல் கேம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா எனும் பெயரில் வெளியிடப்பட்டது. முந்தைய கேமினை போன்றே புதிய பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமும் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.


    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புது 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ 90Hz டைனமிக் ஸ்விட்ச் டாட் டிஸ்ப்ளே, 8 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

     ரெட்மி நோட் 10டி 5ஜி

    ரெட்மி நோட் 10டி 5ஜி அம்சங்கள்
     
    - 6.5 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்
    - மாலி-G57 MC2 GPU
    - 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி
    - 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5
    - ஹைப்ரிட் டூயல் சிம் 
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4 
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ 
    - டூயல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.1,
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்.ஏ.ஹெச். 
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    ரெட்மி நோட் 10டி 5ஜி மெட்டாலிக் புளூ, மின்ட் கிரீன், குரோமியம் வைட் மற்றும் கிராபைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,999 ஆகும். இவை அறிமுக விலை தான், விரைவில் மாற்றப்படும் என சியோமி தெரிவித்து இருக்கிறது.

    செய்தியாளர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் ஐபோன்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல்களுக்கு ஆப்பிள் நிறுவனம் பதில் அளித்துள்ளது.


    இஸ்ரேல் நாட்டை சேர்ந்த NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் செய்தியாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பெகாசஸ் ஸ்பைவேர் ஐபோன் மாடல்களையும் பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 மாடல்களில் பயனருக்கே தெரியாமல் இந்த ஸ்பைவேர் நுழைந்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஐபோன்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது என தகவல்கள் வெளியாகி வருகின்றன. பெகாசஸ் தாக்குதலில் பல ஐபோன்கள் குறிவைக்கப்பட்டன. எனினும், எத்தனை யூனிட்கள் வெற்றிகரமாக ஹேக் செய்யப்பட்டன என்ற விவரங்கள் வெளியாகவில்லை. 

     ஐபோன்

    இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு தலைவர் இவான் ஸ்டிக் கூறும் போது, “இதுபோன்ற தாக்குதல்கள் மிகவும் சிக்கலானவை ஆகும். இவற்றை செயல்படுத்த அதிக செலவாகும். மேலும் இவை மிகவும் குறிப்பிடத்தக்க நபர்களை குறிவைத்தே நடத்தப்படுகின்றன. ஐபோன்களில் பாதுகாப்பு அம்சத்தை மேலும் பலப்படுத்துவதற்கான பணிகளில் ஆப்பிள் ஈடுபட்டு வருகிறது.”

    “உலகை வாழ்வதற்கு ஏற்ற சிறந்த பகுதியாக மாற்ற நினைக்கும் செய்தியாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான சைபர் தாக்குதல்களை ஆப்பிள் கடுமையாக கண்டிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக பாதுகாப்பு விஷயத்தில் புதுமையை புகுத்துவதில் ஆப்பிள் சிறந்து விளங்குகிறது. மேலும் உலகின் பல்வேறு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் உலகில் கிடைக்கும் நுகர்வோர் மொபைல் சாதனங்களில் ஐபோன் மிகவும் பாதுகாப்பானது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். எங்களது சாதனங்களின் தரவுகளை பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என தெரிவித்தார். 
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE மாடல் ஏ14 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 13 சீரிஸ் அம்சங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது புதிய ஐபோன் SE விவரங்கள் வெளியாகி இருக்கிறது. முன்னதாக புதிய ஐபோன் SE மேம்பட்ட பிராசஸர் கொண்டிருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.

     ஐபோன் SE

    இந்த நிலையில், புதிய ஐபோன் SE அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ஐபோன் SE 2022 மாடலில் ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. ஐபோன் SE 2022 குறைந்த விலை 5ஜி ஐபோன் என விளம்பரப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் SE மாடலில் 4.7 இன்ச் டிஸ்ப்ளே, பெசல்கள், டச் ஐடி சென்சார் வழங்கப்படுகிறது.

    தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் SE 2020 மாடலில் 4.7 இன்ச் IPS LCD ஸ்கிரீன், ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட், 3 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, 1821 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 7 எம்பி செல்பி கேமரா, 12 எம்பி பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
    இந்தியாவில் இரு ரெட்மி ஸ்மார்ட்போன்கள் விலை மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டு இந்த ஆண்டு துவக்கத்தில் ரெட்மி 9 பவர் மற்றும் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்தது. தற்போது இரு மாடல்கள் விலையும் இந்தியா முழுக்க உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களுக்கும் பொருந்தும்.

    விலை உயர்வின் படி ரெட்மி 9 பவர் ரூ. 500 அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ. 13,499 என்றும், ரெட்மி 9ஏ மாடல் விலை ரூ. 7,499-இல் இருந்து தற்போது ரூ. 7,799 என்றும் மாறி இருக்கிறது. 

     ரெட்மி 9ஏ

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 பவர் மற்றும் ரெட்மி 9ஏ மாடல்களில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. ரெட்மி 9 பவர் மாடலில் புல் ஹெச்டி ரெசல்யூஷன், 9ஏ மாடலில் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் ஸ்கிரீன் உள்ளது. 

    இவற்றில் முறையே ஸ்னாப்டிராகன் 662, மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை பொருத்தவரை இரு மாடல்களிலும் 3 ஜிபி, 32 ஜிபி வழங்கப்பட்டுள்ளது. 

    ரெட்மி 9 பவர் மாடலில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும், ரெட்மி 9ஏ மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
    ×