என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    இந்த விற்பனை ஏப்ரல் 17ம் தேதி வரை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ், மைஜியோ ஸ்டோர்ஸ், ஜியோ மார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் இணையதளங்களில் நடைபெறுகிறது.
    ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் டிஜிட்டல் டிஸ்கவுண்ட் டேஸ் சேல் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் வாடிக்கையாளர்கள் சிறப்பு தள்ளுபடியில் தொழில்நுட்ப சாதனங்களை வாங்கலாம்.

    இதன்படி ரூ.74,999 மதிப்புள்ள ஐபோன் 13-ஐ சிறப்பு சலுகைகள் மூலம் ரூ.61,999க்கு வாங்கலாம். ரிலையன்ஸ் ஹெச்.டிஎஃப்சி கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு 7.5 சதவீதம் தள்ளுபடியை வழங்குகிறது. இத்துடன் ரூ.2000 தள்ளுபடி கூப்பனும் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.80,000க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ.10,000 சலுகை வழங்கப்படுகிறது. 

    இந்த சலுகைகளை பயன்படுத்தி ரூ.74,999 மதிப்புள்ள ஐபோனை நாம் ரூ.61,999க்கு வாங்கலாம்.

    இந்த விற்பனை ஏப்ரல் 17ம் தேதி வரை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ், மைஜியோ ஸ்டோர்ஸ், ஜியோ மார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் இணையதளங்களில் நடைபெறுகிறது.
    இந்த போனுடன் புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z2 இயர்போன்ஸ் மற்றும் பட்ஸ் ப்ரோ ரேடியண்ட் சில்வர் இரண்டும் விற்பனைக்கு வருகின்றன.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது

    இந்த ஸ்மார்போனில்  6.7 இன்ச் QHD+ AMOLED டிஸ்பிளே 1Hz முதல் 120 Hz வரையிலான டைனமிக் ரெஃப்ரெஷ் ரெட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஸ்னேப் டிராகன் 8 ஜென் 1 SoC ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது.

    மேலும் இதில் HASSELBLAD 48 மெகாபிக்ஸல் SONY IMX789 சென்சார் (F/1.8) ஆப்டிகள் இமேஜ் ஸ்டேபிலைஷேனனுடன் வருகிறது. அத்துடன் 50 மெகாபிக்ஸல் Samsung ISOCELL JN1 அல்ட்ரா வைட் சென்சார், 8 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ லென்ஸ் OIS சப்போர்ட்டுட இடம்பெறுகிறது. 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா இதில் தரப்பட்டுள்ளது.

    5000mAh பேட்டரி, 80W ஃபிளாஷ் சார்ஜிங், 50W AirVOOC ஒயர்லெஸ் சார்ஜிங், டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர் ஆகிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவையும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த போனின் 8ஜிபி+128ஜிபி வேரியண்ட் விலை ரூ.66,999-ஆகவும், 12ஜிபி+256ஜிபி வேரியண்டின் விலை ரூ.71,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி செயலிகளான ஜொமேட்டோ மற்றும் ஸ்விகி மீது கடும் குற்றச்சாட்டு ஒன்றை தேசிய உணவக சங்கம் வைத்துள்ளது.
    கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு ஸ்விக்கி, ஜோமெட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    மக்கள் கடைகளுக்கு செல்லாமல் செயலி மூலமே தாங்கள் விரும்பிய உணவை வாங்கி உண்கின்றனர்.

    இந்நிலையில் இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி செயலிகளான ஜொமேட்டோ மற்றும் ஸ்விகி மீது கடும் குற்றச்சாட்டு ஒன்றை தேசிய உணவக சங்கம் வைத்துள்ளது.

    இதன்படி ஜொமேட்டோ, ஸ்விகி இரு நிறுவனங்களும் உணவகனங்களை மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் கூடுதல் தள்ளுபடி வழங்க வேண்டும் இல்லையென்றால் ஜோமேட்டோ, ஸ்விகி தளங்களில் அந்த உணவகங்களின் பெயர் இடம்பெறாமல் அல்லது இறுதியில் இடம்பெறும்படி செய்துவிடுவோம் என மிரட்டுவதாக கூறப்படுகிறது.

    தங்கள் செயலியை வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கூடுதல் தள்ளுபடி வழங்ககோரி உணவகங்களை மிரட்டுவதாகவும், இவ்வாறு குறைந்த விலைக்கு விற்கும்போது லாபம் வருவதில்லை என்றும் உணவக சங்கம் தெரிவித்துள்ளது. இதைத்தவிர உணவகங்கள் விலையை குறைத்தாலும் தங்களுக்கான டெலிவரி சார்ஜை இரு செயலிகளும் குறைப்பதில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளன.

    இந்த குற்றச்சாட்டையடுத்து இரு நிறுவனங்கள் மீதும் விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    தற்போது ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஆகியவை 30 நாட்கள் வேலிட்டி ரீசார்ஜ்ஜை வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் ஏற்கனவே 30 நாட்கள் திட்டத்தை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.16க்கு 30 நாட்கள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. 

    இந்த திட்டத்தில் நிமிடத்திற்கு 20 பைசா என ஆன் நெட் கால்களும், நிமிடத்திற்கு 20 பைசா என ஆஃப் நெட் கால்களும் வழங்கப்படும். எஸ்.எம்.எஸ், டேடா பலன்கள் இந்த திட்டத்தில் கிடையாது.  பிஎஸ்என்எல் சிம்மை பயன்பாட்டில் வைத்துகொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் பலன் தரும்.

    பிஎஸ்என்எல் ரூ.147க்கு மற்றொரு ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் ரூ.147க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் அழைப்புகள், 10 ஜிபி டேட்டா ஆகியவை 30 நாட்களுக்கு வழங்கப்படும்.

    தற்போது ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஆகியவை 30 நாட்கள் வேலிட்டி ரீசார்ஜ்ஜை வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் ஏற்கனவே 30 நாட்கள் திட்டத்தை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ட்விட்டரில் அதிக பங்குகளை வைத்திருக்கும் நபரும் எலான் மஸ்க்தான் என்பதால், கருத்துகணிப்பு மூலம் அவர் வைக்கும் கோரிக்கைக்கு ட்விட்டர் நிறுவனம் செவிசாய்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களை நிறுவியருமான எலான் மஸ்க் ட்விட்டரில் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தினார்.

    அதில் ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.  அந்த கேள்விக்கு 74.4 சதவீதம் பேர் எடிட் பட்டன் வேண்டும் என்றும், 25.6 சதவீதம் பேர் வேண்டாம் என்றும் வாக்களித்திருந்தனர்.

    இந்த கருத்துக்கணிப்பை பகிர்ந்த ட்விட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால் இந்த கருத்துகணிப்புக்கு கவனமாக வாக்களியுங்கள். இந்தன் விலைவு மிக முக்கியம் என கூறியுள்ளார்.

    எலான் மஸ்க் இந்த கருத்துகணிப்புக்கு முன்பு தான் ட்விட்டரில் தனக்கு 9.2 சதவீத பங்கு இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,700 கோடி ஆகும்.  ட்விட்டரில் அதிக பங்குகளை வைத்திருக்கும் நபரும் எலான் மஸ்க்தான் என்பதால், கருத்துகணிப்பு மூலம் அவர் வைக்கும் கோரிக்கைக்கு ட்விட்டர் நிறுவனம் செவிசாய்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே சமயம், ட்விட்டரில் எடிட் பட்டன் வந்தால், சிலர் தனது சொந்த விளம்பரத்திற்காக ஒரு ட்வீட்டை பதிவிட்டு அது அதிக கவனத்தை பெற்றவுடன் வேண்டுமென்றே கருத்தை மாற்றி எடிட் செய்துகொள்ளும் அபாயமும் இருப்பதால பலர் தெரிவித்து வருகின்றனர்.
    கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இந்த போன் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்த செய்தி வெளியான நிலையில், தற்போது மீண்டும் அதே மாடல் போன் வெடித்துள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்ட் 2 ஸ்மார்ட்போன் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

    லக்‌ஷய் வெர்மா என்பவர் ட்விட்டர் பக்கத்தில், தனது சகோதரன் ஒன்பிளஸ் நார்ட் 2 ஸ்மார்ட்போனில் பேசிக்கொண்டிருந்தபோது அந்த போன் வெடித்ததாக தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சர்வீஸ் செண்டரில் சென்று புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

    ’ என் சகோதரன் அதிர்ஷ்டவசமாக யிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஒன்பிளஸ் நிறுவனத்திடம் பேசியும் எந்த பலனும் இல்லை. பாதிப்படைந்த ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக இழப்பீடு கூட தரவில்லை’ என கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் நார்ட் 2 போன் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்த செய்தி வெளியான நிலையில் தற்போது மீண்டும் அதே மாடல் போன் வெடித்துள்ளது பயனர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
    இந்த போனை HDFC வங்கி கார்ட் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும்.
    போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

    இந்த போன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 13 ஆகிய இயங்குதளங்களில் இயங்கும். இதில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி+, சூப்பர் AMOLED டிஸ்பிளே 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட்டுடன் வருகிறது.

    இந்த போனில் Snapdragon 695 SoC, Adreno 619 GPU இடம்பெற்றுள்ளன.

    கேமராவை பொறுத்தவரை இதில் 64 மெகாபிக்ஸல் Samsung ISOCELL GW3 பிரைமரி சென்சார் f/1.8 லென்ஸ், 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஷூட்டர் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் லென்ஸ் தரப்பட்டுள்ளது.

    குளோபல் வேரியண்ட் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா சென்சார் தரப்பட்டுள்ளது.

    செல்ஃபி கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா f/2.45 லென்சுடன் தரப்பட்டுள்ளது.

    இதில் 5000 mAh Li-Polymer battery, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

    இந்த போனின் 6ஜிபி ரேம்/64 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.18,999-ஆகவும், 6ஜிபி ரேம்/128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.19,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் டாப் வேரியண்ட்டான 8ஜிபி ரேம்/128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.21,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த போனை HDFC வங்கி கார்ட் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும். மேலும் போக்கோ எக்ஸ்2, போக்கோ எக்ஸ்3 மற்றும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை இக்ஸ்சேஞ்ச் செய்தால் கூடுதலாக ரூ.3000 சலுகையும் உண்டு.
    ஆண்ட்ராய்டு 13 குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிம்கார்டுகள் குறித்த தகவலை கூகுள் பகிர்ந்துள்ளது.
    சிம்கார்டுகள் இல்லாமல் இ.சிம் எனப்படும் டிஜிட்டல் சிம்களை பயன்படுத்தும் வகையில் போன்கள் சந்தையில் உள்ளது. இருப்பினும் இந்த இ.சிம் தொழில்நுட்பத்தில் 2 இ.சிம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது.

    இந்நிலையில் கூகுள் வெளியிடவுள்ள ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டில், இ.சிம் வசதியை மேம்படுத்தவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு MEP (Multiple Enabled Profiles) என்ற புதிய தொழில்நுட்பத்தை கூகுள் பயன்படுத்தவுள்ளது. இதற்கான காப்புரிமையை கூகுள் 2020-ம் ஆண்டிலேயே பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு இ.சிம்களை பயன்படுத்த உதவி செய்கிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவில் சிம்கார்ட் ஸ்லாட்டுகளே இல்லாத பிக்ஸல் போன்களை கூகுள் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 மினி உள்ளிட்ட போன்களில் இரண்டு இ சிம்கள் அல்லது ஒரு நேனோ சிம் மற்றும் ஒரு இ.சிம் ஆகியவற்றை பயன்படுத்தும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஆண்ட்ராய்டு போன்களில் ஒற்றை இ.சிம் வசதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது கூகுளின் ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டினால் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த மால்வேர் பரவாமல் தடுக்க, பயனர்கள் அறியப்படாத செயலிகளை தரவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    லேப்52 என்ற ஆய்வு நிறுவனம் ’பிராசஸ் மேனேஜர்’ என்ற புதிய ஸ்பைவேர் ஒன்று பிளே ஸ்டோர் செயலிகள் மூலம் பரவி வருவதாக எச்சரித்துள்ளது.

    இந்த பிராசஸ் மேனேஜர் ஆண்ட்ராய்ட் ஓஎஸ் ஃபைல் போல தன்னை மாற்றிக்கொண்டு பயனர்களின் லொகேஷன், நெட்வோர்க், வைஃபை, கேமரா, ஆடியோ செட்டிங்ஸ், கால் லாக், கான்டெக்ட்ஸ், ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல அம்சங்களை பயனர்கள் அறியாமலேயே பயன்படுத்த தொடங்குகிறது.

    இதன்மூலம் நாம் எப்போது இணையம் பயன்படுத்துகிறோம், யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், கேமராவில் என்ன ரெக்கார்ட் செய்கிறோம் உள்ளிட்டவற்றின் தகவல்களை இந்த ஸ்பைவேர் சேகரிக்க தொடங்குகிறது.

    இதுத்தவிர நாம் வைஃபையுடன் நம் போனை இணைத்திருக்கும்போது அந்த வைஃபையின் பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றின் தகவல்களை இந்த மால்வேர் சேகரிக்கிறது.

    பிராசஸர் மேனேஜர்

    அதன்பின் நமது நோட்டிஃபிகேஷன் பாரில் ‘Process manager is running' என்று இந்த ஸ்பைவேரின் மெசேஜ் ஒன்று காட்டியபடியே இருக்கிறது. இவற்றை நீக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

    தற்போது பிளே ஸ்டோரில் உள்ள RozDhan: Earn Wallet Cash என்ற செயலி மூலம் இந்த மால்வேர் பரவி வருவதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ள பிற செயலிகள் என்னென்ன என்பது இன்னும் முழுதாக அறியப்படவில்லை.

    இந்த மால்வேர் பரவாமல் தடுக்க, பயனர்கள் அறியப்படாத செயலிகளை தரவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இதில் தரப்பட்டுள்ள 9x ஃபோகஸ் அம்சம் துல்லியமாக ஃபோகஸ் செய்ய உதவும் என கூறப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் 7ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த போனில் 108 மெகாபிக்ஸல் ப்ரோலைட் கேமரா இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ISOCELL HM6 இமேஜ் சென்சார், 6.6 இன்ச் IPS LCD டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ்ரேட், AMOLED டிஸ்பிளே ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது.

    இந்த போன் 5000mAh பேட்டரி, 33W சார்ஜிங் வசதியை கொண்டிருக்கும் என்றும், 6ஜிபி+128 ஜிபி மற்றும் 8ஜிபி+128 ஜிபி மாடலில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இதில் தரப்பட்டுள்ள 9x ஃபோகஸ் அம்சம் துல்லியமாக ஃபோகஸ் செய்ய உதவும் என கூறப்படுகிறது.

    இந்த போனில் விலை இந்திய மதிப்பில் ரூ.15,000-க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த செயலியிலேயே டாடாவின் பிற டிஜிட்டல் சேவைகளும் இணைக்கப்பட்டு, அனைத்து டாடா டிஜிட்டல் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவது போல இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    இந்தியாவில் யூபிஐ பண பரிவர்த்தனை சேவையை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
    இந்த துறையில் பேடிஎம், போன்பே, கூகுள் பே, அமேசான் பே என பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 

    இந்நிலையில் தற்போது டாடா குழுமமும் இந்த துறையில் இறங்கியுள்ளது. டாடா குழுமத்தின் யூ.பி.ஐ செயலிக்கு ‘டாடா நியு’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சேவை வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

    இந்த சேவைக்காக டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக பிரிவான டாடா டிஜிட்டல், ஐசிஐசி வங்கியுடன் இணைந்து செயல்படவுள்ளது. டாடாவின் இந்த நியு சேவை, பிற யூபிஐ செயலிகளை விட அதிவேகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு யூபிஐ செயலிகளும் கேஷ்பேக், கூப்பன்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகின்றன. இதே வகையில் டாடா நியு செயலியிலும் பல வகையான சலுகைகள், கேஷ்பேக்குகள் வழங்கப்படவுள்ளன. இவற்றிருக்கு டாடா ‘நியுகாயின்ஸ்’ என பெயரிட்டுள்ளது.

    ஒவ்வொரு முறை பணம் பரிவர்த்தனை நடைபெறும்போதும் பயனர்களுக்கு நியுகாயின்ஸ் வழங்கப்படும். இந்த நியுகாயின்ஸை டாடாவின் பிற சேவைகளான பிக்பாஸ்கெட், 1 எம்.ஜி, குரோமா, டாடா கிளிக், ஃபிளைட் புக்கிங் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.

    மேலும் இந்த செயலியிலேயே டாடாவின் பிற டிஜிட்டல் சேவைகளும் இணைக்கப்பட்டு, அனைத்து டாடா டிஜிட்டல் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவது போல இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஐடி சட்டம் 2021, விதி எண் 4(1)(d)-ன் கீழ் தடை செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் (பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28-ம் தேதிக்குள்) 14.26 லட்சம் இந்திய வாட்ஸ்ஆப் கணக்குகளை தடை செய்துள்ளதாக அரிவித்துள்ளது.

    வாட்ஸ்ஆப்க்கு வந்த புகார்கள் அடிப்படையிலும், வாட்ஸ்ஆப் மற்றும் இந்திய சட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

     ஐடி சட்டம் 2021, விதி எண் 4(1)(d)-ன் கீழ் தடை செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ் ஆப்பிற்கு வந்த 194 புகார்களின் அடிப்படையில் வெறும் 19 கணக்குகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவை அனைத்தும் வாட்ஸ்ஆப் வைத்துள்ள தடுப்பு அம்சங்களுக்கு கீழ் விதிமீறல்களை செய்த கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, பின் தடை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வாட்ஸ்ஆப்பில் வன்முறையை பரப்புவோர், தீய செயல்களில் ஈடுபடுவோர் ஆகியோரின் தரவுகள் பயனர்கள் அளிக்கும் ஃபீட்பேக் மற்றும் அதிகம் பிளாக் செய்யப்படும் கணக்குகள் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டு, அவை தடை செய்யப்படுகின்றன என வாட்ஸ்ஆப் விளக்கம் அளித்துள்ளது.  
    ×