என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
உக்ரைனை சுற்றியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் தற்போது நிலையில்லாத சூழல் நிலவுவதால் ஐடி துறையினருக்கு இந்தியாதான் பாதுகாப்பான நாடு என பலர் கருதுகின்றனர்.
ரஷியா- உக்ரைன் போர் சுமார் 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இதனால் ரஷியா மற்றும் உக்ரைனில் இயங்கி வந்த பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு வேறு நாடுகளுக்கும் இடம்பெயர்கின்றனர்.
இந்நிலையில் ஐடி துறையில் சுமார் 55,000 முதல் 65,000 வரையிலான வேலைவாய்ப்புகள் இந்தியாவிற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வேலைவாய்ப்புகள் தற்காலிகமாகவும், சில வேலைவாய்ப்புகள் நிரந்தரமாகவும் இந்தியாவுக்கு மாற்றப்படவுள்ளன.
இதுகுறித்து ஹெச்.ஆர் நிறுவனங்கள் கூறுகையில், பேக் ஆஃபிஸ் செயல்பாடுகள், பகிரப்பட்ட சேவைகள், தீர்வு மற்றும் பராமரிப்பு சார்ந்த சேவைகள், குறைந்த, நடுத்தர நிலையிலான ஆய்வு மற்றும்
மேம்பாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு மாற்றப்படுகின்றன.
இந்தியாவை தவிர உக்ரைனின் அண்மை நாடுகளான குரோட்ஷியா, பல்கேரியா, பெலாரஸ், ரொமானிஉயா, போலாந்து ஆகிய நாடுகளுக்கும் பல நிறுவனங்கள் இடம்பெயர்கின்றன.
ஆனாலும் உக்ரைனை சுற்றியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் தற்போது நிலையில்லாத சூழல் நிலவுவதால் ஐடி துறையினருக்கு இந்தியா தான் பாதுகாப்பான நாடாக பலர் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புகள் இந்தியார்களுக்கு பெரும் அளவில் பயனளிக்கும் என கூறப்படுகிறது.
தற்பொது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த செயலி, விரைவில் ஐஓஎஸ்க்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் ஒன்றாக ஃபிளிப்கார்ட் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை ஆர்டர் செய்து ஃபிளிப்கார்ட் மூலம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் மருந்து, மாத்திரைகளை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் ஃபிளிப்கார்ட் ஹெல்த்+ என்ற புதிய செயலியை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே ஃபிளிப்கார்ட் ஹெல்த் பிளஸ் என்ற பக்கம் ஃபிளிப்கார்ட் தளத்தில் இருந்த நிலையில் தற்போது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தனி செயலியாக இந்த சேவை விரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலியில் பயனர்கள் அனைத்து வகையான மருந்துகளையும் தடை இன்றி பெற முடியும். தற்போது இந்தியாவில் 20,000 பின்கோடுகளுக்கு இந்த ஆப் டெலிவரியை வழங்குகிறது.
மிகவும் எளிதாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய இண்டர்ஃபேஸ் கோண்டிருக்கும் இந்த செயலியின் மூலம் எந்த வயதினரும் மருந்து, மாத்திரைகளை ஆர்டர் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் மருத்துவ ஆலோசனை, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை பெறும் வகையிலும் அம்சங்கள் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த செயலி, விரைவில் ஐஓஎஸ்க்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப விதி 4(7)-க்கு கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ‘கூ’ என்ற சமூக இணையதளம் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ட்விட்டர் போன்ற மைக்ரோ பிளாகிங் தளமாக செயல்படும் கூ செயலி ’சுய சரிபார்ப்பு’ என்ற செயல்பாட்டினை தொடங்கியுள்ளது.
இதன்படி கூ பயனர்கள் அரசாங்க அடையாள அட்டை அல்லது ஆதார் எண்ணை கொடுத்து தங்கள் அடையாளத்தை உறுதி செய்துகொள்ள முடியும். இவ்வாறு சரிபார்க்கப்பட்ட கணக்குகளின் பக்கத்தில் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் வருவது போன்ற பச்சை நிற டிக் தரப்படும்.
இந்த சரிபார்ப்புக்காக தரப்படும் ஆதார் எண், 3-வது நபர் சேவையை கொண்டே சரிபார்க்கப்படும். மேலும் வழங்கப்பட்ட பயனர்களின் தகவல்கள் சேகரிக்கப்படாது. ஓடிபிக்காக மட்டுமே ஆதார் எண்கள் கேட்கப்படும் என கூ செயலி தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப விதி 4(7)-க்கு கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூ கணக்கை சரிபார்க்க நாம் செய்ய வேண்டியது:
கூ செயலிக்கு சென்று, ப்ரொஃபைல் பக்கத்திற்கு செல்லவும். அதில் "Self Verify”-ஐ கிளிக் செயவும்.
இதில் 12 டிஜிட் ஆதார் எண்ணை டைப் செய்யவும்.
இப்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட போனுக்கு வரும் ஓடிபியை டைப் செய்தால் கூ செயலி சரிபார்ப்பு முடிந்துவிடும்.
இதற்கு இந்த நிறுவனங்களின் சர்வர் இடம்பெற்றுள்ள அமேசான் வெப் சர்வீஸ் சேவையில் ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி செயலிகளான ஸ்விக்கியும், ஜொமேட்டோவும் நேற்று மதியம் முதல் சரியாக செயல்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
அந்த செயலிகளுக்கு சென்று உணவு ஆர்டர் செய்ய முடியவில்லை, ஆர்டர் கொடுத்த உணவுகள் சரியாக கிடைக்காததால் உணவகங்களின் பக்கத்தில் இருந்து உணவை டெலிவரி செய்வதற்கு தாமதம் ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இந்த பிரச்சனையை அனைத்து பயனர்களுக்கும் இல்லாமல் சில பயனர்கள் மட்டுமே சந்தித்துள்ளனர்.
இதையடுத்து பயனர்கள் ஜொமேட்டோ, ஸ்விக்கியை ட்விட்டரில் குறிப்பிட்டு புகார் அளித்து வருகின்றனர். தொடர்ந்து புகார் வருவது அதிகரித்ததால் கஸ்டமர் கேர் நபர்கள் பதிலளிப்பதையும் நிறுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜொமேட்டோ, ஸ்விகி செயலிகள் செயலிழந்து இருப்பதாக அந்த நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். இதற்கு இந்த நிறுவனங்களின் சர்வர் இடம்பெற்றுள்ள அமேசான் வெப் சர்வீஸ் சேவையில் ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என கூறப்படுகிறது. ஆனால் அமேசான் தரப்பில் இருந்து பிரச்சனை எதுவும் இருப்பதாக தெரிவிக்கப்படவில்லை.
தற்போது இந்த பிரச்சனை பெரும்பாலான பயனர்களுக்கு சரி செய்யப்பட்டுவிட்டாலும், சிலருக்கு மட்டும் பிரச்சனை தொடர்ந்து நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் சமீபகாலமாக டிக்டாக் செயலியிடம் தனது தினசரி பயனர்களை இழந்து வருகிறது. இதை ஈடு செய்ய மெட்டா நிறுவனம் புதிய புதிய அம்சங்களை ரீல்ஸில் அறிமுகம் செய்து வருகிறது.
குறைந்த அளவிலான வீடியோக்களை பதிவிடுவது இன்று இணைய உலகில் பரவாக இருக்கிறது. டிக்டாக் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இதுபோன்ற வீடியோக்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் மெட்டா நிறுவனமும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் ரீல்ஸ் என்ற சேவையை குறு வீடியோக்கள் சேவையை வழங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த சேவையில் புதிய மாற்றம் ஒன்றை தற்போது மெட்டா அறிவித்துள்ளது.
இதன்படி வீடியோ கிரியேட்டர்கள் இனி தங்களுக்கு பிடித்த வீடியோவை வேறு செயலிகளில் இருந்து ரீல்ஸில் பகிர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ரீல்ஸ் சேவைக்குள் சென்று வீடியோவை பிடித்து அதில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களை பயன்படுத்தி வீடியோவை எடிட் செய்து பகிர வேண்டும். அல்லது வேறு செயலிகளில் வீடியோவை எடிட் செய்து, பின் அதை டவுன்லோட் செய்து ரீல்ஸில் பகிர வேண்டும். இந்நிலையில் இனி ஸ்மியூள், விட்டா, விவாவிடியோ உள்ளிட்ட வீடியோ எடிட்டிங் செயலிகளை பயன்படுத்தி அதில் தங்களுக்கு பிடித்தவாறு எடிட் செய்து நேரடியாக ரீல்ஸில் பகிரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பயனர்கள் ரீல்ஸ் பயன்படுத்துவதை அதிகப்படுத்தும் என கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் சமீபகாலமாக டிக்டாக் செயலியிடம் தனது தினசரி பயனர்களை இழந்து வருகிறது. இதை ஈடு செய்ய மெட்டா நிறுவனம் புதிய புதிய அம்சங்களை ரீல்ஸில் அறிமுகம் செய்து வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதற்கான காரணம் மற்றும் அவற்றை தவிர்க்கும் முறையை இப்போது பார்க்கலாம்.
இரண்டு நாட்களுக்கு முன் ஒன்பிளஸ் நார்ட் 2 ஸ்மார்ட்போன் வெடித்ததாக செய்தி வெளியானது. இந்த விபத்து குறித்து புகார் அளித்தும் ஒன்பிளஸ் நிறுவனம் எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதை தடுப்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
நவீன ஸ்மார்ட்போன்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். பேட்டரிக்குள் இருக்கும் இந்த Lithium-Ion கூறுகளில் ஏதேனும் தவறு நடந்தால், அது உடைந்து ஆவியாகும் எதிர்வினையை உருவாக்கலாம். இந்த எதிர்வினைகள் வெடிப்புகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் பேட்டரிகள் வெடிப்பதற்கு பொதுவான காரணம் அதிக வெப்பம். சார்ஜ் செய்து கொண்டே போனில் அதிக அளவில் பயன்படுத்துவது, அதிகபடியான நேரம் போன் சூடாகுவதை கண்டுகொள்ளாமல் விளையாடுவது போன்றவை பேட்டரி கூறுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி தீ அல்லது வெடிப்புக்கு வழிவகுக்கும்.
அதேபோல தவறான மால்வேர் பாதிக்கப்பட்ட செயலிகளை பயன்படுத்துவது, நேரடி சூரிய வெளிச்சத்தில் போனை வைத்திருப்பது, ஈரப்பதம் இருக்கும் இடத்தில் அதிக நேரம் போனை போட்டுச் செல்வது போன்றவையும் ஸ்மார்ட்போன்கள் வெடிக்க காரணமாக அமைகின்றன.
ஸ்மார்ட்போன் அதிக வெப்பமாகாமல் பார்த்துகொள்வது ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்திருக்கும். சரியான போன் கேஸைப் பயன்படுத்துதல், இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்துவிட்டு தூங்குவதை தவிர்த்தல் ஆகியவையும் நல்லது. ஸ்மார்ட்போன் சார்ஜ் குறைந்தவுடன் மட்டுமே மீண்டும் சார்ஜ் செய்யவும். அதேபோல ஒரிஜினல், தரமான சார்ஜரை பயன்படுத்துவது நல்லது.
இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலக சந்தையில் அறிமுகமாக நிலையில் தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் வரும் ஏப்ரல் 8ம் தேதி இந்தியாவில் மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலக சந்தையில் அறிமுகமாக நிலையில் தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனில் 90Hz IPS LCD டிஸ்பிளே, சைட் மவுண்ட் ஃபிங்கர் ஸ்கேனர், MediaTek Helio G37 பிராசஸர் இடம்பெறும் என கூறப்படுகிறது.
மேலும் இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்றும், ஆண்ட்ராய்டு 12 நியர் ஸ்டாக் மொபைல் ஓஎஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் குவாட் பிக்ஸல் தொழில்நுட்பத்துடன் இடம்பெறவுள்ளது. இத்துடன் 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், டெப்த் சென்சார், மேக்ரோ விஷன் சென்சார் ஆகியவையும் இடம்பெறுகிறது.
இந்த போனின் விலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதுபோன்ற ஹேக்கிங் தாக்குதல்களை தடுக்க சைபர் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 வருடங்களில் 600-க்கும் மேற்பட்ட அரசாங்கத்தின் சமூக வலைதள கணக்குகள் ஹேக்கர்களால் முடப்பட்டதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர்,
மத்திய அரசின் ட்விட்டர் கணக்குகள், இமெயில் கணக்குகள் என 641 கணக்குகள் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இந்திய கணினி அவசரகால பதில் குழு (CERT-In)இந்த அறிக்கையை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு 175 கணக்குகளும், 2018-ல் 114 கணக்குகளும், 2019-ல் 61 கணக்குகளும், 2020-ல் 77 கணக்குகளும், 2021-ல் 186 கணக்குகளும், இந்த வருடம் 28 கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்ற ஹேக்கிங் தாக்குதல்களை தடுக்க சைபர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
இந்த விலை உயர்வை ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் ஆப்பிள் இணையதளத்தில் விலைகள் உயர்த்தி காணப்படுகின்றன.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட் அறிக்கையில் மின்னணு பொருட்கள் மீதான சுங்க வரியில் பல மாற்றங்களை அறிவித்தது.
இதன்படி இயர்பட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் அதிகரித்தது. இதனால் வயர்லெஸ் இயர்பட்கள், நெக்பேண்ட் ஹெட்ஃபோன்கள் போன்றவற்றின் விலை உயரும் என கூறப்பட்டது.
அதேபோன்று ப்ரீமியம் ஹெட்ஃபோன்களின் நேரடி இறக்குமதிக்கு 20 சதவீதம் கூடுதல் கட்டணத்தை அரசாங்கம் அறிவித்தது. இதனால் இறக்குமதி செய்யப்படும் ஹெட்போன்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆடியோ சாதனங்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது.
2 மற்றும் 3-வது ஜெனரேஷன் ஏர்போட்ஸ், ஏர்போட்ஸ் மேக்ஸ் மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோ ஆகியவற்றுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் ஆப்பிள் இணையதளத்தில் இயர்போன்களின் விலை உயர்த்தி காணப்படுகின்றன.
2வது ஜெனரேஷன் ஆப்பிள் ஏர்போட்ஸ் ரூ.12,900-ல் இருந்து ரூ14,100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 3-வது ஜெனரேஷன் ஏர்போட்ஸ் ரூ.18,500-ல் இருந்து ரூ.20,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏர்போட்ஸ் ப்ரோ ரூ.24,900-ல் இருந்து ரூ.26,300-ஆக உயர்துள்ளது. ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்செட்டுகள் ரூ.59,000-ல் இருந்து ரூ.66,100-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஃபிளிப்கார்ட்டில் மட்டும் பழைய விலையில் இந்த இயர்போன்கள் விற்பனை ஆகி வருகின்றன. அந்த விலையும் விரைவில் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிறப்பு விற்பனையில் போன்களை பேங்க் ஆப் பரோடா, சிட்டிபேங்க் கார்டுகள் கொண்டு வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடியை அமேசான் வழங்குகிறது.
அமேசான் நிறுவனம் மொபைல் சேவிங்ஸ் டே சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் 40 சதவீதம் வரை தள்ளுபடியில் சாம்சங், ஒன்பிளஸ், ஜியோமி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும்.
இந்த போன்களை பேங்க் ஆப் பரோடா, சிட்டிபேங்க் கார்டுகள் கொண்டு வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடியை அமேசான் வழங்குகிறது.
இதன்படி ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்ட் சிஇ 2 ஸ்மார்ட்போனை சலுகை விலையில் ரூ.21,999-க்கு வாங்க முடியும். அதேபோன்று ஒன்பிளஸ் நார்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.28,499-க்கும் வாங்க முடியும்.
ஒன்பிளஸ் 9RT ஸ்மார்ட்போன் ரூ.38,999-க்கும், ஒன்பிளஸ் 9R ரூ.33,999-க்கும், ஒன்பிளஸ் 9 ப்ரோ ரூ.49,199-க்கும், ஒன்பிளஸ் 9 ரூ.35,599-க்கும் ரூ.5000 உடனடி வங்கி தள்ளுபடி போக கிடைக்கிறது.
இத்துடன் எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.15,650 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
வங்கி கார்டுகள் சலுகையை பயன்படுத்தி சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனை ரூ.11749-க்கும், எம்.ஐ 11X ஸ்மார்ட்போனை ரூ.22,999-க்கும் வாங்கலாம். ஜியோமி 11 லைட் NE 5ஜி ஸ்மார்ட்போன் 21,999க்கும், Mi 11X Pro ஸ்மார்ட்போன் ரூ.31,999க்கும், ரெட்மி 11 ப்ரோ+ 5ஜி ரூ.18,999க்கும் கிடைக்கிறது.
ஐக்யூ 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.6000 வங்கி கார்ட் சலுகை போக ரூ.64,990க்கு கிடைக்கிறது. iQOO 9 SE ரூ.33,990க்கு விற்பனை ஆகிறது. இத்துடன் ஐசிஐசிஐ கார்ட் பயன்படுத்தினால் ரூ.3000 தள்ளுபடியும் உண்டு.
இன்று மதியம் பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட், ரியல்மி தளங்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி சி31 ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனில் ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாக கொண்ட UI R எடிஷன் வழங்கபப்டவுள்ளது. மேலும் 6.5 இன்ச் HD+ எல்.சிடி டிஸ்பிளே 120Hz டச் சாம்பிளிங் ரேட்டுடன் வருகிறது. மேலும் இதில் 12nm Unisoc T612 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை இதில்f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, f/2.4 லென்ஸ் கொண்ட மேக்ரோ கேமரா, f/2.8 லென்ஸ் கொண்ட மோனொகுரோம் சென்சார் இடம்பெறவுள்ளன. மேலும் இதில் 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளது.
சைட் மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட், 5000 mAh பேட்டரி, 10W சார்ஜிங் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இந்த போனில் இடம்பெறவுள்ளன.
இந்த போனின் 3ஜிபி/32ஜிபி மாடலின் விலை ரூ.8,999-ஆகவும், 4ஜிபி/64ஜிபி வேரியண்டின் விலை ரூ.9,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்று மதியம் பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட், ரியல்மி தளங்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.
ஹெட்போனை தயாரித்த நிறுவனத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் அந்த நபர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருடைய உயிரை ரேசர் நிறுவனத்தின் ஹெட்போன் காப்பாற்றியதாக ரெடிட் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவில் அவர் கூறியதாவது:-
கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள எனது படுக்கையறையில் படுத்திருந்தபோது ஜன்னல் வழியாக துப்பாக்கி தோட்டா ஒன்று என் தலையை நோக்கி பறந்து வந்தது. தலையில் ஹெட்போன் மாட்டியிருந்ததால் தோட்டா ஹெட்போனில் பட்டு தெரித்தது.
நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்ட ஹெட்போன் என்பதால் பிழைத்துக்கொண்டேன். ஹெட்போன் என் உயிரை காப்பாற்றியது. இல்லையென்றால் 18 வயதில் நான் இறந்திருப்பேன். இந்த ஹெட்போனை தயாரித்த ரேசர் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மனதார நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.






