என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
இந்த போனை ஐசிஐசிஐ வங்கி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.2000 உடனடி கேஷ்பேக்கும் வழங்கப்படும்.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனில் 6.6 இன்ச் full HD+ Infinity-V டிஸ்பிளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12, One UI 4.1-ல் இயங்குகிறது.
இதில் octa-core 5nm Exynos processor வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை இந்த போனில் f/1.8 அப்பெர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 5 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் சென்சார் (120 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வீவ், f/2.4 அப்பேர்ச்சருடன்) f/2.2 அப்பெர்ச்சர் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர், f/2.2 அப்பெர்ச்சர் கொண்ட 2 மெகாபிக்ஸல் டெப்த் கேமரா இடம்பெற்றுள்ளது.
இதில் வழங்கப்பட்டுள்ள கேமராக்கள் போக்கே எஃபெக்ட், சிங்கிள் டே, ஆப்ஜெக்ட் எரேசர், வீடியோ டி.என்.ஆர் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இத்துடன் 8 மெகாபிக்ஸல் செல்ஃபி ஷூட்டர் கேமராவும் இதில் தரப்பட்டுள்ளது.
மேலும் இந்த போனில் 6000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளன.
இந்த போனின் 6ஜிபி+128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.18,999-ஆகும். 8ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை ரூ.20,499-ஆகும். இந்த இரு போன்களையும் அறிமுகம் விலையாக ரூ.17,999 மற்றும் ரூ.19,999-க்கு சாம்சங் வழங்குகிறது.
மேலும் இந்த போனை ஐசிஐசிஐ வங்கி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.2000 உடனடி கேஷ்பேக்கும் வழங்கப்படும்.
ஜியோ வழங்கும் ரூ.7200 மதிப்பிலான கூப்பன்கள் இந்த ஆண்டு இறுதி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியானது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ஜியோ புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
இதன்படி ஜியோ வாடிக்கையாளார்கள் புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கினால்ரூ.7200 அளவிலான கேஷ்பேக் வழங்கப்படும். ஆனால் இந்த கேஷ்பேக் மொத்தமாக வழங்கப்படாது. ரூ.150 தள்ளுபடி கூப்பனாக 48 கூப்பன்கள் மை ஜியோ செயலி மூலம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த சலுகை ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்திய வேரியண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் ஜியோ கூறியுள்ளது. மேலும் ஜியோ வாடிக்கியாளர்கள் ரூ.1199 திட்டத்தையும் பயன்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தினம் 3ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், ஜியோ செயலி சந்தா ஆகியவை 84 நாட்களுக்கு வழங்கப்படும்.
இந்த கூப்பன்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை செல்லுபடியாகும். போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை கிடையாது.
இந்த இயர்போனை 10 நிமிட சார்ஜ் செய்தாலே 100 நிமிடம் பிளேபேக் டைம்மை பெற முடியும் என கூறியுள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் பட்ஸ் ஏர் 3 TWS இயர்போன்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 10 mm டைனமிக் பேஸ் பூஸ்ட் டிரைவர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இந்த இயர்போனில் TUV-Rhienland சான்றிதழ் வழங்கிய நாய்ஸ் கேன்சலேஷன் வசதி தரப்பட்டுள்ளது. இது 2 மைக்ரோஃபோன்கள் மற்றும் டிரான்ஸ்பரன்ஸி மோடுடன் 42dB வரை இரைச்சலை குறைக்கக்கூடியது.
மேலும் ரியல்மி பட்ஸ் ஏர் 3 88ms குறைந்த லேட்டன்ஸியை கேம் மோடுடன் வழங்குகிறது. இது முந்தைய ஜெனரேஷனை விட 35 சதவீதம் குறைந்த லேட்டன்ஸி ஆகும்.
இந்த இயர்போனில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி v5.2 வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 சாதனங்களை இந்த இயர்போனில் இணைக்கமுடியும். இதில் கூகுள் ஃபாஸ்ட் பேர் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது.
இந்த இயர்போன் IPX5 ரேட்டர்ட் வியர்வை மற்றும் தண்ணீர் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட்டுள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் டோட்டல் பிளேபேக் வழங்கப்படும். 10 நிமிட சார்ஜில் 100 நிமிடம் பிளேபேக் டைம்மை பெற முடியும்.
இந்த இயர்போனின் விலை ரூ.3999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக விலையாக ரூ.3499-க்கு இந்த இயர்போன் கிடைக்கும்.
இந்த லேப்டாப்பை ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படும் என்றும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் புக் ப்ரைம் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப்பில் 2கே Full Vision டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது 11th Gen Intel Core i5-11320H பிராசஸர், Intel Iris Xe Graphics, டூயல் ஃபேன் லிக்விட் கூலிங் சிஸ்டம் ஆகியவை தரப்பட்டுள்ளன.
மேலும் இதில் பேக் லிட் கீபோர்ட் டச் பேட்டுடன் வழங்கப்படுகிறது. டிடிஎஸ் ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், WiFi 6, Thunderbolt fort 4 உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த லேப்டாப்பை ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படும் என்றும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப்பின் 16ஜிபி+521 ஜிபி மாடல் ரூ.64,999-க்கு கிடைக்கிறது. வரும் ஏப்ரல் 13ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த லேப்டாப் அறிமுக விலையாக ரூ.57,999க்கு விற்பனையாகவுள்ளது. மேலும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்று காலத்தில் நாம் பணி செய்யும் நேரம் 45 நிமிடங்கள் வரை அதிகரித்துள்ளது. இரவு 10 மணிக்கு மேலும் சிலர் வீட்டில் இருந்து பணி புரிகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் அலுவலகங்கள், வீட்டில் இருந்தே பணி செய்யும் வொர்க் ஃபிரம் ஹோம் உள்ளிட்ட அம்சங்களை அறிமுகம் செய்தன.
ஆனால் இந்த வொர்க் ஃபிரம் ஹோம் பணிகளை தவறாக கையாண்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வொர்க்ஃபிரம் ஹோம் எத்தகைய பாதிப்பை தனது அலுவலர்களிடம் உருவாக்கியது என்ற ஆய்வை செய்தது. அதில் ஊழியர்கள் அனைவரும் மாலை நேரத்திற்கு பின் வேலை பார்த்தது தெரியவந்தது.
ஊழியர்களின் உற்பத்தி திறன் மதிய உணவுக்கு முன்பும், அதற்கு பின்பும் அதிகரித்துள்ளது. அதைத்தவிர மாலை நேரத்திலும் பொதுவாக ஊழியர்களின் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஹொர்க்பிரம் ஹோம் நமது பணிக்கும், வீட்டினருடன் நேரம் செலவிடுவதற்குமான எல்லையை குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த மாற்றம் நல்லதல்ல என நாதெல்லா எச்சரித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் மேலாளர்கள் அனைவரும் சரியான எல்லையை வகுத்துகொள்ள வேண்டும். இரவு நேரத்தில் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கும்படி யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது. நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதை வைத்தும், நமது வெளியீட்டு அளவீடுகளையும் மட்டுமே வைத்து உற்பத்தி திறனை அளக்கிறோம். ஆனால் ஆரோக்கியமாக இருப்பது என்பதும் உற்பத்தி திறனுக்கு முக்கியமானது.
பெருந்தொற்று காலத்தில் நாம் பணி செய்யும் நேரம் 45 நிமிடங்கள் வரை அதிகரித்துள்ளது. இரவு 10 மணிக்கு மேலும் சிலர் வீட்டில் இருந்து பணி புரிகின்றனர்.
ஊழியர்கள் உடல் நலத்தை பாதுகாக்க இரவு நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் இமெயில்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த போனை ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த போனில் 6.4 இன்ச் சூப்பர் ஆமோலெட் ஃபுல் ஹெச்டி+ டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. மேலும் 360Hz டச் சாம்பிளிங் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகியவை தரப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 680 பிராசஸர், Aderno 610 GPU இடம்பெற்றுள்ளன.
கேமராவை பொறுத்தவரை 108 மெகாபிக்ஸல் சாம்சங் ISOCELL HM6 பிரைமரி சென்சார், 8 மெகாபிக்ஸல் அல்ட்ராவைட் கேமரா, 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த போனில் 5000 mAh பேட்டரி, 33W டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் இடம்பெறுகிறது.
இதன் 6ஜிபி+128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.17,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிமுகம் விலையாக ரூ.15,999-க்கும் இந்த போன் கிடைக்கும். அதேபோன்று 8ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை ரூ.18,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகம் விலையாக ரூ.16,999-க்கு இந்த போன் கிடைக்கும்.
இதைத்தவிர இந்த போனை ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடியும் உண்டு.
வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.
நாம் செலவு செய்யும் தொகையில் இருந்து குறைந்தது 5 சதவீத கட்டணம் நியு காயின்களாக நமக்கு கிடைக்கின்றன.
டாடா நிறுவனம் தனது டாடா நியு என்ற செயலியை வெளியிட்டுள்ளது.
இந்த செயலி உணவு ஆர்டர் செய்வதில் இருந்து விமான டிக்கெட் புக் செய்வது வரை பலதரப்பட்ட சேவைகளை வழங்குகிறது.
இந்த செயலி தற்போது சோதனை அடிப்படையில் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. நமது மொபைல் நம்பர் கொடுத்து ரிஜிஸ்டர் செய்துவிட்டு உள்ளே சென்றால் மளிகை, எலக்ட்ரானிக்ஸ், மொபைல்ஸ், ஃபேஷன், அழகு சாதன பொருட்கள், லக்சரி, ஹோட்டல்கள், விமானங்கள், உணவு, ஆரோக்கியம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அனைத்து விதமான சேவைகளும் இந்த செயலியில் வழங்கப்படுகின்றன.
இதுதவிர யூபிஐ சேவையையும் இந்த செயலி வழங்குகிறது.
இந்த செயலியில் வாங்கும் பொருட்கள் அல்லது புக் செய்யப்பட்டும் சேவைகள் தள்ளுபடி விலையில் வழங்கப்படவுள்ளன. இவற்றை நாம் பயன்படுத்தும்போது நமக்கு நியு காயின் என்ற டிஜிட்டல் காசும் கிடைக்கிறது. நாம் செலவு செய்யும் தொகையில் இருந்து குறைந்தது 5 சதவீத கட்டணம் நியு காயின்களாக நமக்கு கிடைக்கின்றன.
ஒரு நியு காயின் 1 ரூபாய் மதிப்பை கொண்டுள்ளது. இந்த நியு காயின்கள் ஒருவருட வேலிடிட்டியை கொண்டுள்ளன.
அறிமுகம் விலையாக இந்த போனின் விலையில் ரூ.5000 குறைக்கப்பட்டு 8ஜிபி/128ஜிபி வேரியண்ட் ரூ.44,999க்கும், 12ஜிபி/256ஜிபி வேரியண்ட் ரூ.52,999க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி ஜிடி2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட், Bio-polymer-ல் தயாரிக்கப்பட்ட பேக் பேனல், 120Hz ரெஃப்ரெஷ் ரெட்டுடன் 2கே ரெஷலியூஷன் கொண்ட டிஸ்பிளே, LTPO2 AMOLED பேனல், 1Hz ரெஃப்ரெஷ் ரேட் வரை செல்லக்கூடிஉய டிஸ்பிளே ஆகியவை தரப்பட்டுள்ளன.
கேமராவை பொறுத்தவரை இதில் IMX766 சோனி சென்சாருடன் கூடிய 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 150 டிகிரி ஃபீல்ட் ஆஃப் விஷன் கொண்ட 50 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், 40X மைக்ரோ லென்ஸ் அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
5000mAh பேட்டரி, 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ள இந்த போனின் 8ஜிபி/128ஜிபி வேரியண்டின் விலை ரூ.49,999 ஆகும். 12ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.57,999-ஆகும்.
அறிமுகம் விலையாக இந்த போனின் விலையில் ரூ.5000 குறைக்கப்பட்டு 8ஜிபி/128ஜிபி வேரியண்ட் ரூ.44,999க்கும், 12ஜிபி/256ஜிபி வேரியண்ட் ரூ.52,999க்கும் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 14ம் தேதி விற்பனைக்கு வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் ஃபினான்ஸ்+, ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.3000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.7-inch full-HD+ Infinity-O Super AMOLED+ டிஸ்பிளே,800 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இருக்கிறது. மேலும் இதில் octa-core Qualcomm Snapdragon 778G SoC பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை 108 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் (OIS சப்போர்ட்டுடன்), 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் இரண்டு 5 மெகாபிக்ஸல் டெப்த் மற்றும் மேக்ரோ சென்சார் கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.
மேலும் இதில் 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், டால்பி சப்போர்ட்டுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த போனில் 8ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.41,999-ஆகவும், 8ஜிபி+256ஜிபி வேரியண்டின் விலை ரூ.44,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் ஃபினான்ஸ்+, ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.3000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ.6,990 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ் லைவ் ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்கள் வெறும் ரூ.499-க்கு வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட் டிவி ஒன்பிளஸ், அமேசான், ஜியோ டிஜிட்டல், ரிலையன்ஸ் டிஜிட்டல் , க்ரோமா ஆகிய தளங்களில் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் டிவி 43 Y1S ப்ரோ ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த டிவியில் 4கே UHD ரெஷலியூஷன், கோடிக்கணக்கான நிறங்கள், ஒவ்வொரு பிரேமிலும் துல்லியமான காட்சிகளை வழங்கும் 10 bit கலர் டெஃப்த் அம்சங்கள்.
இதில் வழங்கப்பட்டுள்ள அதிநவீன காமா இன்ஜின் அம்சம், பயனர்களுக்கு ரியல் டைம் இமேஜ் குவாலிட்டியை வழங்குகிறது. மேலும் இந்த டிவி HDR10, HDR10+ மற்றும் HLG ஃபார்மட்டுகளை வழங்குகிறது.
கேம் விளையாடுபவர்களுக்காக இந்த டிவியில் Auto Low latency mode தரப்பட்டுள்ளது. இத்துடன் ஒன்பிளஸ் பட்ஸ் மற்றும் ஒன்பிளஸ் வாட்ச்சை இந்த டிவியுடன் இணைக்கலாம்.
இதில் உள்ள ஸ்மார்ட் ஸ்லீப் கண்ட்ரோல் அம்சம், நாம் தூங்கிவிட்டால் தானாக டிவி அணைந்துவிடும்படி செய்கிறது.
இந்த டிவியில் சினிமா ஒலியை கேட்கும் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குவதற்காக டால்பி ஆடியோ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 24W அவுட்புட் தரும் 2 ஃபுல்ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த டிவியின் விலை இந்தியாவில் ரூ.29,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவி ஒன்பிளஸ், அமேசான், ஜியோ டிஜிட்டல், ரிலையன்ஸ் டிஜிட்டல் , க்ரோமா ஆகிய தளங்களில் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
சார்ஜர் பயன்பாடு குறைந்தால் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுவது குறையும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி சார்ஜர் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போனுக்கு சார்ஜர் வழங்கப்படாது என அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆப்பிள், சாம்சங் ( சில மாடல்களுக்கு மட்டும்) நிறுவனங்கள் சார்ஜர் வழங்குவதை நிறுத்திய நிலையில் தற்போது ரியல்மியும் அறிவித்துள்ளது.
சார்ஜர் பயன்பாடு குறைந்தால் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுவது குறையும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி சார்ஜர் வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சார்ஜர் வழங்காதது மூலம் ஸ்மார்ட்போன்களொன் விலை மேலும் குறைக்கப்பட்டு, கூடுதல் சலுகையுடன் வழங்கப்படும் என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் எல்லா ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கும் சார்ஜர் நிறுத்தப்படவில்லை. நார்சோ 50A ப்ரைம் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளது.
ரியல்மி நிறுவனம் இந்த மாடலின் விற்பனை மற்றும் பயனர்களின் தரும் ஆதரவை பொறுத்து பிற போன்களுக்கும் சார்ஜர் வழங்குவதை நிறுத்தும் என கருதப்படுகிறது.
ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி ஏ73, கேலக்ஸி ஏ53, கேலக்ஸி ஏ33 ஆகிய போன்களுக்கும் சில ஃபிளாக்ஷிப் போன்களுக்கும் சார்ஜரை நிறுத்தியுள்ளது. ஜியோமி நிறுவனம் எம்11 ஸ்மார்ட்போன்கள்க்கு சார்ஜர் வழங்குவதை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் முதல் அறிவித்தது. இருப்பினும் சர்வேதச சந்தைகளில் மட்டுமே எம்.ஐ 11 போனுக்கு சார்ஜர் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஆங்கில மொழி பயிற்சி, அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி, வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்படவுள்ளது.
வோடஃபோன்-ஐடியா நிறுவனம் Vi Jobs and Education என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவையின் மூலம் இந்திய இளைஞர்கள் எளிதாக வேலை தேட முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஐ செயலியிலேயே இந்த Vi Jobs and Education அம்சம் இடம்பெற்றிருக்கும். இந்த சேவைக்காக வோடஃபோன் நிறுவனம் அப்னா, என்குரு, பரிக்ஷா ஆகிய தளங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த செயலி 3 வகையில் பயனர்களுக்கு உதவும் என வோடஃபோன் கூறியுள்ளது. இதன்படி, ஆங்கில மொழி பயிற்சி, அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி, வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் இந்த சேவையில் வழங்கப்படும்.
ஆங்கில மொழி பயிற்சி வகுப்புகள் என்குரு நிறுவனத்துடன் இணைந்து 14 நாட்களுக்கு இலவச வகுப்புகள் நடத்தப்படும். அதன்பின் வகுப்பில் தொடர கட்டணம் செலுத்த வேண்டும். வோடஃபோன் வாடிக்கையாளர்கள் பயிற்சி வகுப்பில் சேர 15 சதவீதம் முதல் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இத்துடன் ரூ.1500 மதிப்புள்ள பாடங்களும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
அரசு தேர்வுக்கு படிப்பவர்களுக்கு பரிக்ஷா தளத்துடன் இணைந்து மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கான வகுப்புகள் ஒரு மாதத்திற்கு இலவசமாக நடத்தப்படும். அதன்பின் வகுப்பை தொடர விரும்புவோருக்கு வருடத்திற்கு ரூ.249 என்ற கட்டணத்தில் வகுப்புகள் நடத்தப்படும். இத்துடன் இடைவிடாத தேர்வுகள் மூலமும் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் அப்னா என்ற தளத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும். இந்த சேவைக்கு கட்டணம் கிடையாது என தெரிவித்துள்ளது.
தற்போது ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படவுள்ளது.






