என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

டாடா நியு செயலி
உணவு முதல் விமானம் டிக்கெட் வரை புக் செய்ய ஒரே செயலி- ஏராளமான சலுகைகள், கேஷ்பேக்குடன்
நாம் செலவு செய்யும் தொகையில் இருந்து குறைந்தது 5 சதவீத கட்டணம் நியு காயின்களாக நமக்கு கிடைக்கின்றன.
டாடா நிறுவனம் தனது டாடா நியு என்ற செயலியை வெளியிட்டுள்ளது.
இந்த செயலி உணவு ஆர்டர் செய்வதில் இருந்து விமான டிக்கெட் புக் செய்வது வரை பலதரப்பட்ட சேவைகளை வழங்குகிறது.
இந்த செயலி தற்போது சோதனை அடிப்படையில் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. நமது மொபைல் நம்பர் கொடுத்து ரிஜிஸ்டர் செய்துவிட்டு உள்ளே சென்றால் மளிகை, எலக்ட்ரானிக்ஸ், மொபைல்ஸ், ஃபேஷன், அழகு சாதன பொருட்கள், லக்சரி, ஹோட்டல்கள், விமானங்கள், உணவு, ஆரோக்கியம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அனைத்து விதமான சேவைகளும் இந்த செயலியில் வழங்கப்படுகின்றன.
இதுதவிர யூபிஐ சேவையையும் இந்த செயலி வழங்குகிறது.
இந்த செயலியில் வாங்கும் பொருட்கள் அல்லது புக் செய்யப்பட்டும் சேவைகள் தள்ளுபடி விலையில் வழங்கப்படவுள்ளன. இவற்றை நாம் பயன்படுத்தும்போது நமக்கு நியு காயின் என்ற டிஜிட்டல் காசும் கிடைக்கிறது. நாம் செலவு செய்யும் தொகையில் இருந்து குறைந்தது 5 சதவீத கட்டணம் நியு காயின்களாக நமக்கு கிடைக்கின்றன.
ஒரு நியு காயின் 1 ரூபாய் மதிப்பை கொண்டுள்ளது. இந்த நியு காயின்கள் ஒருவருட வேலிடிட்டியை கொண்டுள்ளன.
Next Story