என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
இனி வேலை தேடுபவர்களுக்கு கவலை இல்லை- வி.ஐ வெளியிட்ட அறிவிப்பு
Byமாலை மலர்7 April 2022 7:51 AM GMT (Updated: 7 April 2022 7:51 AM GMT)
ஆங்கில மொழி பயிற்சி, அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி, வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்படவுள்ளது.
வோடஃபோன்-ஐடியா நிறுவனம் Vi Jobs and Education என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவையின் மூலம் இந்திய இளைஞர்கள் எளிதாக வேலை தேட முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஐ செயலியிலேயே இந்த Vi Jobs and Education அம்சம் இடம்பெற்றிருக்கும். இந்த சேவைக்காக வோடஃபோன் நிறுவனம் அப்னா, என்குரு, பரிக்ஷா ஆகிய தளங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த செயலி 3 வகையில் பயனர்களுக்கு உதவும் என வோடஃபோன் கூறியுள்ளது. இதன்படி, ஆங்கில மொழி பயிற்சி, அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி, வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் இந்த சேவையில் வழங்கப்படும்.
ஆங்கில மொழி பயிற்சி வகுப்புகள் என்குரு நிறுவனத்துடன் இணைந்து 14 நாட்களுக்கு இலவச வகுப்புகள் நடத்தப்படும். அதன்பின் வகுப்பில் தொடர கட்டணம் செலுத்த வேண்டும். வோடஃபோன் வாடிக்கையாளர்கள் பயிற்சி வகுப்பில் சேர 15 சதவீதம் முதல் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இத்துடன் ரூ.1500 மதிப்புள்ள பாடங்களும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
அரசு தேர்வுக்கு படிப்பவர்களுக்கு பரிக்ஷா தளத்துடன் இணைந்து மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கான வகுப்புகள் ஒரு மாதத்திற்கு இலவசமாக நடத்தப்படும். அதன்பின் வகுப்பை தொடர விரும்புவோருக்கு வருடத்திற்கு ரூ.249 என்ற கட்டணத்தில் வகுப்புகள் நடத்தப்படும். இத்துடன் இடைவிடாத தேர்வுகள் மூலமும் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் அப்னா என்ற தளத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும். இந்த சேவைக்கு கட்டணம் கிடையாது என தெரிவித்துள்ளது.
தற்போது ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படவுள்ளது.
Next Story
×