என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

வெடித்து ஒன்பிளஸ் நார்ட் 2 ஸ்மார்ட்போன்
மீண்டும் வெடித்த பிரபல ஸ்மார்ட்போன்- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயனர்
கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இந்த போன் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்த செய்தி வெளியான நிலையில், தற்போது மீண்டும் அதே மாடல் போன் வெடித்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்ட் 2 ஸ்மார்ட்போன் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
லக்ஷய் வெர்மா என்பவர் ட்விட்டர் பக்கத்தில், தனது சகோதரன் ஒன்பிளஸ் நார்ட் 2 ஸ்மார்ட்போனில் பேசிக்கொண்டிருந்தபோது அந்த போன் வெடித்ததாக தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சர்வீஸ் செண்டரில் சென்று புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
’ என் சகோதரன் அதிர்ஷ்டவசமாக யிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஒன்பிளஸ் நிறுவனத்திடம் பேசியும் எந்த பலனும் இல்லை. பாதிப்படைந்த ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக இழப்பீடு கூட தரவில்லை’ என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் நார்ட் 2 போன் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்த செய்தி வெளியான நிலையில் தற்போது மீண்டும் அதே மாடல் போன் வெடித்துள்ளது பயனர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Next Story






