என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ப்ளிப்கார்ட் நிறுவனம் விரைவில் துவங்க இருக்கும் பிக் பில்லியன் டேஸ் 2020 விற்பனையின் சலுகை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.


    ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் ஏழாம் ஆண்டு பிக் பில்லியன் டேஸ் சேல் அக்டோபர் 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த விற்பனை அக்டோபர் 21 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    சிறப்பு விற்பனைக்கென ப்ளிப்கார்ட் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில், இரு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி, கேஷ்பேக் போன்ற சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது.

     பிக் பில்லியன் டேஸ் 2020

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட டெபிட் கார்டுகளுக்கு மாத தவணை வசதி மற்றும் ப்ளிப்கார்ட் பே லேட்டர் போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது. சிறப்பு விற்பனையில் மொபைல், டிவி, வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதனங்கள், அக்சஸரீக்கள் மற்றும் பல்வேறு இதர பிரிவுகளில் கிடைக்கும் பொருட்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

    சிறப்பு விற்பனையின் போது எல்ஜி ஜி8எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 19,990, போக்கோ எம்2 ப்ரோ மாடல் ரூ. 12,999, மோட்டோ ஒன் பியூஷன் பிளஸ் ரூ. 15,999, சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ரூ. 13,999 என தள்ளுபடி செய்யப்பட்ட சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    பேடிஎம் நிறுவனம் இந்தியாவில் மினி ஆப் ஸ்டோர் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.


    பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது டிஜிட்டல் பேமன்ட்ஸ் செயலியினுள் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    முன்னதாக பேடிஎம் நிறுவனம் தேசிய ஆப் ஸ்டோர் ஒன்றை வெளியிடுவதற்கு இந்திய டெவலப்பர்களுடன் இணைந்து கோரிக்கை விடுத்து இருந்தது. இதைத் தொடர்ந்து புதிய மினி ஆப் ஸ்டோர் துவங்கப்பட்டு இருக்கிறது.

     பேடிஎம் மினி ஆப் ஸ்டோர்

    செயலிகள் மற்றும் டெவலப்பர் டூல்களை வெளியிடுவதற்கு மாற்றாக பேடிஎம், ப்ரோகிரசிவ் வெப் ஆப் (PWA) வழங்குகிறது. இவை பிரவுசர்களில் இயங்கும் லைட் ஆப்கள் ஆகும். மேலும் இவற்றை இன்ஸ்டால் செய்யாமலேயே இயக்க முடியும். தற்சமயம் மினி ஆப் ஸ்டோரில் சில செயலிகள் மட்டுமே பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.

    புதிய பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் இந்தியாவை சேர்ந்த சிறு டெவலப்பர்கள் மற்றும் வியாபாரங்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என பேடிஎம் தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

    இந்த ஆப் ஸ்டோரில் குறைந்த செலவில், ஹெச்டிஎம்எல் மற்றும் ஜாவா ஸ்க்ரிப்ட் மூலம் செயலிகளை உருவாக்கி பதிவேற்றம் செய்ய முடியும். இதில் உள்ள செயலிகள் பேடிஎம் செயலியினுள் திறக்கும். இதில் செயலிகளை பட்டியலிட எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என பேடிஎம் தெரிவித்து இருக்கிறது.
    கூகுள் மீட் செயலியில் இரண்டு புதிய அம்சங்களை வழங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
     

    கொரோனாவைரஸ் தொற்று காரணமாக உலகின் பெரும்பான்மை நாடுகளில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். வீட்டில் இருந்து பணியாற்றுவோர் அலுவலகத்துடன் தொடர்பில் இருக்க வீடியோ சாட் செயலிகள் பெரிதும் உதவி வருகின்றன.

    சமீப காலக்கட்டத்தில் அதிக பிரபல செயலிகளாக உருவெடுத்துள்ள ஜூம், கூகுள், மைக்ரோசாப்ட் ஒவ்வொன்றும் மற்ற செயலிகளுடன் கடும் போட்டியை எதிர்கொள்கின்றன. எனினும், போட்டியில் நிலைத்திருக்க ஒவ்வொரு செயலியிலும் தொடர்ந்து புதுப்புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

     கோப்புப்படம்

    அந்த வரிசையில் கூகுள் மீட் செயலியில் புதிதாக இரண்டு அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதனை கூகுள் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது. இவை அக்டோபர் 8 ஆம் தேதி முதல் பயனர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.

    'கூகுள் மீட் செயலியில், அக்டோபர் 8 முதல் Q&A மற்றும் Polls என இரண்டு அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இவை அழைப்புகளின் போது ஒவ்வொருத்தரும் ஆர்வத்துடன் பங்கேற்று இருப்பதை உறுதி செய்யும்' என  கூகுள் தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.
    விவோ நிறுவனத்தின் அசத்தல் அம்சங்கள் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விவோ நிறுவனம் இந்தியாவில் தனது வி20 ஸ்மார்ட்போனை அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருந்தது.

    தற்சமயம் இதன் வெளியீட்டு தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த வாரம் நடைபெறும் அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்படுகிறது.

     விவோ வி20

    விவோ வி20 சிறப்பம்சங்கள்

    - 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
    - 64 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ்
    - 44 எம்பி பிரைமரி கேமரா
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
    - டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ10டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    சியோமி நிறுவனம் தனது எம்ஐ10டி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இவற்றில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் லிக்விட் கூலிங், ஆண்ட்ராய்டு 10, எம்ஐயுஐ 11, கிளாஸ் பேக்,  கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, அலுமினியம் அலாய் பிரேம், டூயல் லினியர் ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை ரெஸ் ஆடியோ வசதி கொண்டுள்ளது.

     சியோமி எம்ஐ 10டி

    சியோமி எம்ஐ10டி சீரிஸ் சிறப்பம்சங்கள்

    - 6.67 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி - எம்ஐ10டி 
    - 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி / 256 ஜிபி (UFS 3.1) மெமரி - எம்ஐ10டி ப்ரோ
    - டூயல் சிம்
    - எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - எம்ஐ 10டி — 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.89, LED பிளாஷ்
    - 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
    - 5 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
    - எம்ஐ 10டி ப்ரோ — 108 எம்பி பிரைமரி கேமரா, f/1.69, OIS, LED பிளாஷ்
    - 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 5 எம்பி மேக்ரோ லென்ஸ்
    - 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ரேசர் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ரேசர் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் மடிக்கக்கூடிய OLED சினிமாவிஷன் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் 2.7 இன்ச் OLED குவிக் வியூ டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு 10, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     மோட்டோரோலா ரேசர் 5ஜி

    மோட்டோரோலா ரேசர் 5ஜி சிறப்பம்சங்கள்

    - 6.2 இன்ச் 2142x876 பிக்சல் ஹெச்டி பிளஸ் சினிமா விஷன் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே
    - 2.7 இன்ச் குவிக் வியூ டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
    - அட்ரினோ 620 ஜிபியு
    - 8 ஜிபி (LPPDDR4x) ரேம்
    - 256 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு 10
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், OIS, f/1.7
    - 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - வாட்டர் ப்ரூப் வசதி
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 2800 எம்ஏஹெச் பேட்டரி
    - 15 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்

    மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன் பாலிஷ்டு கிராபைட் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 12 ஆம் தேதி துவங்குகிறது.
    உலகில் செல்போன்கள் உருவாக்கப்பட்டது முதல் இன்று அதில் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சிகள் பற்றி சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

    செல்போன்கள் 40 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டவை. மார்ட்டின் கூப்பர் முதல் தலைமுறை செல்லுலார் போனை உருவாக்கி அரிய சாதனை படைத்தார். அவரது தொடர் முயற்சியால் 1973ம் ஆண்டு ஏப்ரல் 13ம் நாள் வயர் இணைப்பு இல்லாத முதல் செல்போன் வெளியிடப்பட்டது. அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் தயாரிப்பாக செல்போன் அறிமுகமானது.

    இந்தியாவில் செல்போன் சேவை 1995 முதல் பரவலாக பயன்பாட்டிற்கு வந்தது. தொலை தூர தொடர்புக்காகவும், அறிவியல் விஞ்ஞானிகள் தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் செல்போன்கள் மிகவும் பயன்பட்டு வருகிறது. 

    இன்றைய காலங்களில் செல்போன்கள் பேசுவதற்காக மட்டுமின்றி விளையாட்டு, பாடல்கள், வீடியோக்கள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் அதனை உபயோகிக்கிறோம்.

     கோப்புப்படம்

    நொடிப் பொழுதில் மனிதனின் அன்றாட வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற மிகப்பெரிய அத்தியாவசிய பொருளாக செல்போன்கள் மாறி வருகின்றன. மேலும் எஸ்எம்எஸ் மூலம் மாதத்திற்கு 500 கோடிகளுக்கு மேல் கருத்துக்களையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றோம் என தெரிய வருகின்றது.

    செல்போனை ஒரு உள்ளங்கை கணினிபோல நாம் பயன் படுத்துகிறோம். செல்போன் இணையதள சேவையின் மூலம் உலகில் பல்வேறு இடங்களில் நடந்தவை, நடந்து கொண்டு இருப்பவை, இனி நடக்க இருப்பவை என அனைத்தையும் மிக துல்லியமாக அறிந்து கொள்கிறோம். இது இணையதளம் மற்றும் செல்போன்கள் ஆற்றும் மிகப்பெரிய சேவையாகும்.

    செல்போன்களால் நாம் ஒரு வகையில் பயனடைந்து வளர்ந்து வருகிறோம். ஆனாலும் சில தீமைகளும் செல்போன் வழியே வந்து சேர்கிறது. செல்போன்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதன் மூலமாகவும், தவறாக பயன்படுத்துவதன் மூலமாகவும் பல்வேறு தீமைகள் விளைகிறது. 

    பெண்களுக்கு தேவையற்ற தொல்லைகளும் செல்போன் வழியே வந்து சேர்கிறது. செல்போன்கள் கிருமிகளின் சிறந்த வசிப்பிடமாக அமைந்து நோய்கள் பரவ காரணமாக இருக்கின்றன. மேலும் செல்போன் கதிர் வீச்சின் மூலம் சில உயிரினங்கள் அழிந்து வருவதாகவும், மனிதர்களுக்கும் பலவித நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் விஞ்ஞான எச்சரிக்கைகள் வெளியாகி வருகின்றன.
    ஐஒஎல் 14 இன்ஸ்டால் செய்தவர்கள் தங்களின் சாதனத்தில் அந்த பிரச்சனை ஏற்பட்டால் இதை மட்டும் செய்யுங்கள் என ஆப்பிள் கேட்டுக் கொண்டுள்ளது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் 14 கடந்த மாதம் வெளியிடப்பட்டது. மற்ற அப்டேட்களை போன்றே புதிய அப்டேட்டையும் இன்ஸ்டால் செய்ய முடியும். இந்த அப்டேட் ஐபோன் மற்றும் ஐபேட் மாடல்களுக்கு வெளியிடப்பட்டது.

    புதிய ஒஎஸ் வெளியான குறுகிய காலக்கட்டத்திற்குள் ஆப்பிள் மற்றொரு அப்டேட்டை .0.1 வெர்ஷனில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இது பொதுப்படை மேம்படுத்தல்களை வழங்குகிறது. பிழை திருத்தங்கள் மட்டுமின்றி சில புதிய அம்சங்களும் வழங்கப்படுகிறது.

     ஐபேட் ஒஎஸ் 14

    சமீபத்திய ஐஒஎஸ் 14 வெர்ஷனில் பலர் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதாக குற்றஞ்சாட்டினர். பின் ஐஒஎஸ் 14.0.1 வெர்ஷனை ஆப்பிள் வெளியிட்டது. எனினும், இந்த அப்டேட் வெளியான பின்பும் பேட்டரி தீர்ந்து போகும் பிரச்சனை சரியாகவில்லை என பயனர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

    பேட்டரி தீர்ந்து போகும் பிரச்சனையை சரி செய்ய பயனர்கள் சாதனத்தை பேக்ட்ரி ரீசெட் செய்ய வேண்டும். வாட்ச் மற்றும் ஐபோன் பயனர்கள் இவ்வாறு செய்ய ஆப்பிள் தனது வலைதளத்தில் கேட்டு கொண்டுள்ளது. சாதனத்தில் உள்ள பிரச்சனையை சரி செய்ய ரீசெட் செய்யக் கோரும் வழக்கம் மிகவும் அரிதான விஷயம் ஆகும்.

    பேட்டரி சார்ந்த கோளாறு மிகவும் முக்கியமான ஒன்று என்பதால் பயனர்கள் ரீசெட் செய்வதே நல்ல தீர்வை தரும். எனினும், ஐபோனை ரீசெட் செய்வது சற்றே சிக்கலான காரியம் ஆகும்.
    அமேசான் ஊழியர்களில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.


    அமேசான் நிறுவன ஊழியர்களில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது அந்நிறுவன ஊழியர்களில் 1.44 சதவீதம் ஆகும். 

    ஊழியர்கள் ஆரோக்கியத்துக்கு அபாயம் ஏற்படுத்தும் வகையில், பெருந்தொற்று காலக்கட்டத்தில் அமேசான் தனது கிடங்குகளை திறந்து வைத்திருந்தது என ஊழியர்களால் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் யூனியன்கள் சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

     அமேசான்

    எனினும், பொது மக்களுக்கு தொற்று ஏற்படும் அபாயத்தை விட அமேசானில் தொற்று அபாயம் 42 சதவீதம் குறைவாகவே இருந்தது என அமேசான் தெரிவித்து இருக்கிறது. நவம்பர் மாத வாக்கில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    பெருந்தொற்று காட்டுத்தீ போல் பரவ அமேசான் அனுமதித்து இருக்கிறது என தொழிலாளர் நல அமைப்பின் இயக்குனர் தான்யா ராஜேந்திரா தெரிவித்து இருக்கிறார். 

    மார்ச் 1 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 19 வரையிலான காலக்கட்டத்தில் அமேசானில் பணியாற்றும் 13,72,000 முன்னணி ஊழியர்களில் 19,816 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என அமேசான் தெரிவித்து இருக்கிறது. 
    இனிபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஹாட் 10 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 9,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் ஹெச்டி பிளஸ் பின்ஹோல் எல்சிடி ஸ்திரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், லோ-லைட் வீடியோ கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5200 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

     இன்பினிக்ஸ் ஹாட் 10

    இன்பினிக்ஸ் ஹாட் 10 சிறப்பம்சங்கள்

    - 6.78 இன்ச் 1640x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20.5:9 பின்ஹோல் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
    - ஏஆர்எம் மாலி ஜி52 2இஇஎம்சி2 ஜிபியு
    - 6 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - எக்ஸ்ஒஎஸ் 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - லோ-லைட் வீடியோ கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்
    - 8 எம்பி செல்பி கேமரா, f/1.8, டூயல் எல்இடி பிளாஷ்
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 5200 எம்ஏஹெச் பேட்டரி

    இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் ஓசன் வேவ், ஆம்பர் ரெட், மூன்லைட் ஜேட் மற்றும் ஆப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 16 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

    உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் இந்தியாவில் செல்போன்கள் விலை 3 சதவீதம் வரை அதிகரிக்க இருக்கிறது.


    கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்ததால் மின்னணு மற்றும் மின்சாதன பொருட்களின் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் சமீபத்தில் உற்பத்தி தொடங்கி உள்ளது. 

     கோப்புப்படம்

    இதற்கிடையே செல்போன் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்வதற்கான வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இம்முறை இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக செல்போன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய வரி உயர்வு காரணமாக செல்போன்களின் விலை 3 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது.

    உலக சந்தையில், 'நம் நாட்டு உற்பத்தி பொருட்கள் அதிகம் இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதனால் குறிப்பிட்ட உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் நிலை உள்ளது. தற்போது செல்போன் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக செல்போன்களின் விலை 3 சதவீதம் வரை உயரும்.'

    என இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர் பங்கஜ் மோகிந்திரு கூறி உள்ளார்.
    சியோமியின் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    சியோமியின் ரெட்மி பிராண்டு நோட் 10 சீரிஸ் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே இந்த சீரிஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி விட்டது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முந்தைய ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருந்த நிலையில், புதிய நோட் 10 சீரிஸ் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

     ரெட்மி நோட் 9

    ஸ்னாப்டிராகன் 750ஜி மற்றும் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட இரு ஸ்மார்ட்போன்களை ரெட்மி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இரு மாடல்களிலும் பெரிய டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரிகள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    5ஜி வசதி வழங்கப்படும் பட்சத்தில் ரெட்மி நோட் 10 சீரிஸ் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இந்த ஆண்டு நோட் 10 ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    ×