என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
குவால்காம் நிறுவனம் புதிதாக கேமிங் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குவால்காம் நிறுவனம் டிசம்பர் மாத வாக்கில் ஸ்னாப்டிராகன் 875 சீரிஸ் பிராசஸர்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாகி இருக்கிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் குவால்காம் நிறுவனம் பிரத்யேக கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பும் டிசம்பர் மாத நிகழ்விலேயே நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கேமிங் ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட்போனினை உருவாக்க குவால்காம் மற்றும் அசுஸ் நிறுவனங்கள் ஒன்றிணைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
குவால்காம் நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, கூலிங் மெக்கானிசம், பெரிய பேட்டரி, கஸ்டம் கண்ட்ரோல் மற்றும் இதக வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சலுகைகளுடன் அமேசான் பிரைம் சந்தா வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் துவக்க விலை சலுகைகள் அதவாது 40Mbps மற்றும் 100Mbps உடன் அமேசான் பிரைம் சந்தாவை இலவசமாக வழங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய சலுகை பற்றிய தகவல் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் காணப்படுவதாக சில பயனர்கள் தெரிவித்தனர்.
ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகை விலை ரூ. 499 முதல் துவங்குகிறது. முன்னதாக இதில் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படாமல் இருந்தது. அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவை 200Mbps மற்றும் அதிக வேகம் கொண்ட பிராட்பேண்ட் சலுகைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

தற்சமயம் ஏர்டெல் பிராட்பேண்ட் துவக்க விலை சலுகைகளிலும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. புதிய சலுகை விவரங்கள் ஏர்டெல் வலைதளம் மற்றும் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனினும், சலுகை பலன்கள் சிலருக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
புதிய மாற்றத்தின் படி ஏர்டெல் ரூ. 499, ரூ. 589 போன்ற சலுகைகளில் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இவற்றில் அன்லிமிட்டெட் டேட்டா, அதிகபட்சம் 40Mbps வேகம், அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்டிரீம் செயலிக்கான சந்தா வழங்கப்படுகிறது.
ரெட்மி பிராண்டின் புதிய வயர்லெஸ் இயர்போன் ரூ. 999 துவக்க விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்திய சந்தையில் ரெட்மி சோனிக்பேஸ் வயர்லெஸ் இயர்போன் நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் மற்றும் ரெட்மி இயர்பட்ஸ் 2சி ட்ரூ வயர்லெஸ் ஹெட்செட் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஹெட்செட்களிலும் ப்ளூடூத் 5 மற்றும் அதிகபட்சம் 12 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
ரெட்மி சோனிக்பேஸ் வயர்லெஸ் இயர்போன் சிறப்பம்சங்கள்
- ப்ளூடூத் 5
- டூயல் மைக்ரோபோன்
- என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்
- 9.2 எம்எம் டிரைவர்
- மிக குறைந்த எடை
- காந்த சக்தி கொண்ட இயர்பட்கள்
- வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
- ஸ்பிலாஷ் மற்றும் ஸ்வெட் ப்ரூப்
- 120 எம்ஏஹெச் பேட்டரி

ரெட்மி பட்ஸ் 2சி சிறப்பம்சங்கள்
- ப்ளூடூத் 5
- டிஎஸ்பி என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்
- 7.2 எம்எம் டிரைவர்
- மிக குறைந்த எடை
- டச் கண்ட்ரோல் வசதி
- வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 300 எம்ஏஹெச் பேட்டரி
ரெட்மி சோனிக்பேஸ் வயர்லெஸ் இயர்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1299 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இது ரூ. 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி பட்ஸ் 2சி இயர்போன் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1499 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக ரூ. 1299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. முந்தைய மாடல்களை போன்றே புதிய டிவிக்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ், யூடியூப் போன்ற ஸ்டிரீமிங் செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இவற்றில் அதிகபட்சம் 48 வாட் சவுண்ட்பார் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன் யுஎஸ்பி, ஹெச்டிஎம்ஐ போர்ட்கள், 4கே, புல் ஹெச்டி, ஹெச்டி ரெடி ஆப்ஷன்கள் மற்றும் அதிகபட்சம் 65 இன்ச் அளவில் கிடைக்கிறது. மேலும் ஹெச்டிஆர் 10, மைக்ரோ டிம்மிங் மற்றும் புரோண்டோ போக்கல் ஏஐ என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
நோக்கியா ஸ்மார்ட் டிவி 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடலின் விலை ரூ. 12,999 என்றும், 43 இன்ச் புல் ஹெச்டி மாடல் ரூ. 22,999 என்றும் 43 இன்ச் 4கே அல்ட்ரா ஹெச்டி மாடல் விலை ரூ. 28,999, 50 இன்ச் 4கே மாடல் ரூ. 33,999, 55 இன்ச் 4கே மாடல் ரூ. 39,999 என்றும் 65 இன்ச் 4கே மாடல் ரூ. 59,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் வெளியாக இருக்கிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்31 போன்றே காட்சியளிக்கிறது.
மேலும் இதன் அம்சங்களும் கேலக்ஸி எம்31 மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

இத்துடன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி வழங்கப்படுகிறது. மற்ற கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்களை போன்றே புதிய மாடலிலும் எக்சைனோஸ் 9611 பிராசஸர், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. புதிய மாடலின் ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
64 எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி LPDDR4x ரேம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் புதிய ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் பியூஷன் கிரீன் மற்றும் புயூஷன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து பிரீபெயிட் சலுகைகளிலும் 25 சதவீதம் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து பிரீபெயிட் சலுகைகளுக்கும் 25 சதவீதம் வரை கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. கூடுதல் டேட்டா அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
டெலிகாம் துறையில் 20 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில், பிஎஸ்என்எல் அறிவித்து இருக்கிறது. இது கஸ்டமர் டிலைட் மந்த் எனும் பெயரில் வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டா பலன்களை அக்டோபர் மாதம் வரை வழங்குகிறது. கூடுதல் சலுகை பற்றிய அறிவிப்பு பிஎஸ்என்எல் தமிழ் நாடு வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இதே சலுகை ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களுக்கான ட்விட்டர் அக்கவுண்ட்களிலும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த சலுகை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுவதாக பிஎஸ்என்எல் அறிவித்து இருக்கிறது.
முன்னதாக சென்னை வட்டாரத்தில் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 49 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இது 100 நிமிடங்கள் வாய்ஸ் கால், 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 பேன் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.5 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 990 பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் இன்-டிஸ்ப்ளே ஆப்டிக்கல் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ, பிக்ஸ்பி, சாம்சங் ஹெல்த் மற்றும் சாம்சங் பே போன்ற சேவைகளை கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர்
- ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு
- 8 ஜிபி LPDDR5 ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
- சிங்கிள் சிம் / ஹைப்ரிட் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8, PDAF, 79˚ FOV, OIS
- 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32° FoV, f/2.4, PDAF, OIS
- 12 எம்பி 123° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- யுஎஸ்பி டைப் சி ஆடியோ
- ஆப்டிக்கல் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி 3.1
- 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்
- கியூஐ வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர்
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மின்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ. 49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சோனி நிறுவனம் இந்தியாவில் தனது முதல் 8கே ஸ்மார்ட் டிவி மாடலை பிரீமியம் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
சோனி நிறுவனத்தின் முதல் 8கே ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சோனி ZH8 டிவியில் சோனியின் எக்ஸ்1 அல்டிமேட் பிக்சர் பிராசஸர், டிரைலுமினஸ் டிஸ்ப்ளே, 8கே எக்ஸ்-டென்டட் டைனமிக் ரேன்ஜ் ப்ரோ, எஸ் போர்ஸ் சரவுண்ட் சவுண்ட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதில் உள்ள எக்ஸ்1 அல்டிமேட் பிக்சர் பிராசஸர் சோனியின் மிகவும் சக்திவாய்ந்த பிராசஸர் ஆகும். இந்த பிராசஸர் 8கே தரவுகளை மிக சீராக இயக்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த டிவியில் ஆப்ஜக்ட் சார்ந்த சூப்பர் ரெசல்யூஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு காட்சியிலும் நிறம் மற்றும் காண்டிராஸ்ட்களை துல்லியமாக பிரதிபலிக்கிறது.

இத்துடன் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் டிவி என்பதால், இது ஆண்ட்ராய்டு டிவி ஒஎஸ் கொண்டிருக்கிறது. மேலும் இதில் ஆப்பிள் ஏர் பிளே 2, ஹோம்கிட் மற்றும் பிஎஸ்6 ரெடி போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
சோனி KD-85Z8H 8கே ஸ்மார்ட் டிவி சோனி விற்பனை மையங்கள், ஆன்லைன் தளங்கள் மற்றும் முன்னணி மின்சாதன விற்பனை மையங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 13,99,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 13 ஆம் தேதி நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வு ஹை ஸ்பீடு என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபோன் 12 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதுதவிர பல்வேறு அக்சஸரீக்களும் அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது.
இதுவரை வெளியான தகவல்களில் ஆப்பிள் நான்கு ஐபோன்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. எனினும், இம்முறை மூன்று ஐபோன்களே அறிமுகமாகும் என தெரிகிறது. இவை அனைத்திலும் OLED டிஸ்ப்ளே மற்றும் 5ஜி வசதி வழங்கப்பட இருக்கின்றன.

மூன்று மாடல்களும் 6.1 இன்ச், 6.7 இன்ச் மற்றும் 5.4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் ப்ரோ மாடல்களில் LIDAR சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன்களில் ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதுதவிர புதிய ஐபோன்களுடன் சார்ஜர் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபோன்கள் மட்டுமின்றி ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ, ஹை எண்ட் ஒவர்-இயர் ஹெட்போன், ஏர்டேக்ஸ், சிறு டிராக்கிங் சாதனம், சிறிய ஹோம்பாட் மற்றும் புதிய மேக் உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்கோ பிராண்டின் புதிய போக்கோ சி3 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் போக்கோ சி3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூ-டோன் டிசைன் கொண்டிருக்கும் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

போக்கோ சி3 சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 IPS LCD ஸ்கிரீன்1
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
- 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
- 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- ஸ்பிலாஷ் ப்ரூப்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் புளூ, லைம் கிரீன் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் ரூ. 7499 விலையிலும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அசுஸ் நிறுவனம் இந்தியாவில் ரோக் போன் 3 மாடலின் 12 ஜிபி ரேம் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 3 புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை மாதத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பின் கடந்த மாதம் இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த வரிசையில் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது துவங்குகிறது.

புதிய ஸ்மார்ட்போனை வாங்குவோர் வட்டியில்லா மாத தவணை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய ரோக் போன் 3 (12 ஜிபி + 128 ஜிபி) மாடல் விலை ரூ. 52,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






