என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ. 2 ஆயிரம் வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் தனது ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக திடீரென அறிவித்து இருக்கிறது. இந்த விலை குறைப்பு ரெனோ 3 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டிற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய விலை குறைப்பின் படி ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 2 ஆயிரம் விலை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மாடல் ரூ. 25,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை அமேசானில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.

முன்னதாக ஒப்போ ரெனோ 3 ப்ரோ 8 ஜிபி + 128ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை முறையே ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டது. தற்சமயம் டாப் எண்ட் மாடல் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் புல் ஹெச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், 64 எம்பி பிரைமரி கேமரா, 44 எம்பி செல்பி கேமரா, 4025 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனினை 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 64 ஜிபி என இரு வெர்ஷன்களில் அறிமுகம் செய்திருந்தது. அந்த வரிசையில் கேலக்ஸி ஏ21எஸ் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் புதிய 6 ஜிபி + 128 ஜிபி மாடல் பிளாக், புளூ மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 17,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 720×1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
- எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
- 48 எம்பி f/2.0 பிரைமரி கேமரா
- 8 எம்பி f/2.2 அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்பி f/ 2.4 டெப்த் சென்சார்
- 2 எம்பி f/2.4 மேக்ரோ சென்சார்
- 13 எம்பி f/2.2 செல்ஃபி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார், முக அங்கீகார வசதி
- 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0
- யுஎஸ்பி டைப் சி
- 5,000 எம்ஏஹெச் பேட்டரி
- 15W ஃபாஸ்ட் சார்ஜிங்
கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போனினை ரூ. 29 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்து இருக்கிறது.
கூகுள் நிறுவனம் இந்தியாவில் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் பின்புறம் கைரேகை சென்சார், 3140 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
கூகுள் பிக்சல் 4ஏ சிறப்பம்சங்கள்
- 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப்
- 6 ஜிபி LPDDR4X ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10
- 12.2 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS, EIS
- 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- கைரேகை சென்சார்
- 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 3140 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜஸ்ட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 31,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா இசட்எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 32 இன்ச் ஹெச்டி, 40 இன்ச் புல் ஹெச்டி, ரிவோ சீரிஸ் 43 இன்ச், 55 இன்ச் 4கே ஆண்ட்ராய்டு 10 என பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது.
அனைத்து மாடல்களிலும் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 4கே மாடல்களில் லினென் பினிஷ் இன்டகிரேட் செய்யப்பட்ட சவுண்ட்பார், ரேசர் தின் டிசைன் மற்றும் எண்ட்லெஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

இவற்றில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் எம்டி9602 பிராசஸர், மாலி ஜி52 எம்சி1 ஜிபியு மற்றும் டூயல் பேண்ட் வைபை வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் புதிய மோட்டோ ஸ்மார்ட் டிவி- 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடல் ரூ. 13,999, 40 இன்ச் புல் ஹெச்டி டிவி ரூ. 19,999, ரெவோ 43 இன்ச் அல்ட்ரா ஹெச்டி மாடல் ரூ. 30,999, ரெவோ 55 இன்ச் அல்ட்ரா ஹெச்டி டிவி ரூ. 40,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி மாடல்களின் விற்பனை அக்டோபர் 15 ஆம் தேதி துவங்குகிறது. இவை ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை அக்டோபர் 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்நிலையில், சிறப்பு விற்பனையின் போது மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட இருக்கும் சலுகைகளை ப்ளிப்கார்ட் அறிவித்து உள்ளது.
அந்த வகையில் மோட்டோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ. 1500 துவங்கி அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

ப்ளிப்கார்ட் விற்பனையில் தள்ளுபடி பெறும் மோட்டோ ஸ்மார்ட்போன்கள்
- மோட்டோ இ7 பிளஸ் - ரூ. 8999 (ரூ. 500 தள்ளுபடி)
- மோட்டோ ஜி9 ரூ. 9999 (ரூ. 1500 தள்ளுபடி)
- மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ரூ. 15,999 (ரூ. 1500 தள்ளுபடி)
- மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ரூ. 64,999 (ரூ. 40 ஆயிரம் தள்ளுபடி)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமானது. புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாடி, டூயல் டோன் பினிஷ் கொண்டிருக்கும் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எப்41 சிறப்பம்சங்கள்
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
- மாலி-G72MP3 GPU
- 6 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
- டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி 123° அல்ட்ரா வைடு கேமரா
- 5 எம்பி டெப்த் சென்சார்
- 32 எம்பி செல்பி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- எப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் பியுஷன் கிரீன், பியுஷன் பிளாக் மற்றும் பியுஷன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 16,999, 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 15,499 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அலுவல் பணிகளை எளிமையாக்கும் ஜிமெயில் ஸ்மார்ட் ரிப்ளை அம்சம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
நிறுவனங்கள் கணிணி மயமாக்கப்பட்ட பிறகு அனைத்து பரிவர்த்தனை மற்றும் தகவல் பரிமாற்றங்கள் ஆன்லைனிலேயே நடக்கின்றன. தகவலை தெளிவாக சொல்வது, எப்போது யாருக்கு அனுப்பினோம் என்பதை தெரிந்துகொள்ள முடிவது, ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்ப முடியும் என்பது உள்பட பல சாதகங்கள் இருக்கின்றன.
எனினும், ஒரு கட்டத்தில் வேலை செய்வதை விட மின்னஞ்சல்களுக்கு பதில் சொல்வதே பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு வேலையாக இருக்கிறது. அவர்களை போன்றவர்களுக்காக ‘கூகுள் ஸ்மார்ட் ரிப்ளை’ என்னும் சேவையை உருவாக்கி இருக்கிறது.
இந்த சேவை ஒருவருக்கு வரும் மின்னஞ்சல்களை படித்து அதற்கு ஏற்ப, மூன்று விதமான பதில்களை உங்களுக்கு கொடுக்கும். அதில் எந்த பதிலை அனுப்ப நினைக்கிறீர்களோ அதை அனுப்பலாம். அல்லது அந்த வாய்ப்பில் சில திருத்தங்கள் செய்வதாக இருந்தால் அதை செய்து அனுப்பலாம்.

சிறிய பதில் அனுப்ப இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும். மெஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வரும் மெயில் படிக்கப்படுகிறது. பொதுவாக அனுப்பப்படும் 20,000 பதில்களை ஆராய்ந்து மூன்று வாய்ப்புகளை ஸ்மார்ட் ரிப்ளை கொடுக்கும்.
1. அந்த தகவல் என்னிடம் இல்லை.
2.அதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன்.
3. உடனடியாக அனுப்புகிறேன்.
மேலே உள்ள மூன்று பதில்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து நேரடியாக அனுப்பலாம். அல்லது தேர்வு செய்த பதிலில் பயனருக்கு ஏற்றவாறு திருத்தங்களை செய்து அனுப்பலாம். இதன் மூலம் மெயிலை பயன்படுத்துபவர்களுக்கு நேரம் மீதமாகும் என்று கூகுள் தெரிவித்திருக்கிறது.
ஒரு வருடத்துக்கு முன்பு இன்பாக்ஸ் (ஜிமெயிலின் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் இன்பாக்ஸ்) என்னும் செயலியை கூகுள் அறிமுகப்படுத்தியது. அந்த செயலியை பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட்கள் இந்த ஸ்மார்ட் ரிப்ளை சேவையை இலவசமாக பயன்படுத்த முடியும்.
பல்வேறு டீல்கள், சலுகைகள் உடன் அமேசான் விற்பனை திருவிழா விரைவில் தொடங்க இருக்கிறது.
அமேசான் நிறுவனம் அதன் பண்டிகை நிகழ்வான கிரேட் இந்திய திருவிழாவினை அக்டோபர் 17 ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவித்து உள்ளது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் விற்பனையில் கலந்து கொள்ளலாம்.
உள்ளூர் கடைகள், அமேசான் லாஞ்ச்பேட், அமேசான் சஹேலி மற்றும் அமேசான் காரிகர் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆயிரக்கணக்கான அமேசான் விற்பனையாளர்களிடம் இருந்து தனித்துவ தயாரிப்புகளை வாங்க முடியும்.

வாடிக்கையாளர்கள் நூற்றுக்கணக்கான டீல்களில் இருந்து ஷாப்பிங் செய்வதன் மூலம் 10 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலும் சேமிக்க முடியும். டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கும் கட்டணம் இல்லா மாத தவணை வசதி, 10 சதவீத கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.
ஹானர் பிராண்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்திய சந்தையில் ஹானர் வாட்ச் இஎஸ் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.64 இன்ச் ஹெச்டி அளவில் பிரத்யேக செவ்வக வடிவம் கொண்ட AMOLED தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.
இதில் ஆட்டோ பிரைட்னஸ் மற்றும் ஆறு விதமான ஆல்வேஸ் ஆன் வாட்ச் பேஸ்கள் வழங்கப்பட்டு உள்ளது. இது 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டணட் வசதி, இதய துடிப்பு சென்சார் மற்றும் 10 நாட்கள் பேட்டரி லைப் கொண்டிருக்கிறது.

ஹானர் வாட்ச் இஎஸ் சிறப்பம்சங்கள்
- 1.64 இன்ச் 456x280 பிக்சல் ஹெச்டி 2.5டி AMOLED டிஸ்ப்ளே
- ப்ளூடூத் 5
- 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- 6 ஆக்சிஸ் ஐஎம்யு சென்சார்
- ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார்
- ஹூவாய் ட்ரூசீன் 4.0
- ஹூவாய் ட்ரூஸ்லீப் 2.0
- 10 நாட்களுக்கான பேட்டரி பேக்கப்
ஹானர் வாட்ச் இஎஸ் மாடல் மெட்டோரைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசானில் அக்டோபர் 17 ஆம் தேதி துவங்குகிறது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சவுண்ட்பார் ஸ்பீக்கரை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து உள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் 100 வாட் சவுண்ட்பார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 2 புல் ரேன்ஜ் ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்கள் உள்ளதாக ரியல்மி தெரிவித்து இருக்கிறது. இது மெட்டல் மற்றும் ஸ்கின் போன்ற பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மியின் புதிய சவுண்ட்பாரில் 2 60 வாட் புல் ரேன்ஜ் ஸ்பீக்கர்கள் மற்றும் ட்வீட்டர்கள், 5.25 இன்ச் 40 வாட் சப்வூஃபர் வழங்கப்பட்டு உள்ளது. இவை ஒன்றிணைந்து 2.1 சேனல் அகௌஸ்டிக் சிஸ்டத்தை வழங்குகிறது. இது தரமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

இதில் ப்ளூடூத் 5.0, ஆக்ஸ் இன், லைன் இன், யுஎஸ்பி, ஆப்டிக்கல், ஹெச்டிஎம்ஐ, கோ-ஆக்சியல் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் ரிமோட் கண்ட்ரோல் ஷார்ட் கட் கீ, வாய்ஸ் பிராம்ப்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ரியல்மி 100 வாட் சவுண்ட்பார் விலை ரூ. 6999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கி வருகிறது.
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 வழங்கப்பட்டு வருகிறது. ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனினை 2018 மே மாத வாக்கில் அறிமுகம் செய்த நிலையில் புது அப்டேட் 2020 இரண்டாவது காலாண்டில் வெளியாகும் என அறிவித்து இருந்தது.
எனினும், அப்டேட் வெளியாக காலதாமதம் ஆகி தற்சமயம் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் இந்தியா மட்டுமின்றி மேலும் சில நாடுகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் இந்தியா, அர்மெனியா, வங்கதேசம், பெலாரஸ், ஜார்ஜியா, கசகஸ்தான், லவோஸ், மலேசியா, மங்கோலியா, மொரோக்கோ, நேபால், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, துனிசியா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலும் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்படுகிறது.
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6750 சிப்செட், 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், எதிர்காலத்தில் ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் பாலிகார்போனேட் மற்றும் பக்கவாட்டுகளில் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் நோக்கியா 3.1 டூயல் டைமண்ட் கட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2900 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ஹானர் பிராண்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது நீண்ட பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது.
ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்திய சந்தையில் ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் வட்ட வடிவ AMOLED ஸ்கிரீன், கிரின் ஏ1 சிப், ப்ளூடூத் 5.1 வசதி கொண்டுள்ளது.
இத்துடன் ஸ்பீக்கர், மைக்ரோபோன், 100 ஸ்போர்ட் மோட்களுக்கான வசதி, ஸ்லீப் டிராக்கிங், இதய துடிப்பு டிராக்கிங் மற்றும் பல்வேறு இதக அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்
- 1.39 இன்ச் 454x454 பிக்சல் AMOLED டச் டிஸ்ப்ளே
- ஹூவாய் கிரின் ஏ1 சிப்
- ப்ளூடூத் 5.1
- 4 ஜிபி மெமரி
- 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட்
- மைக்ரோபோன், ஸ்பீக்கர், ப்ளூடூத் காலிங் வசதி
- MIL-STD 810G சான்று
- 455 எம்ஏஹெச் பேட்டரி
ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ மாடல் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் துவங்குகிறது.






