என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோருக்கு மாற்றாக தேசிய ஆப் ஸ்டோர் போன்ற தளத்தை உருவாக்க கோரிக்கை வலுத்து வருகிறது.


    இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோருக்கு மாற்றாக தேசிய ஆப் ஸ்டோர் ஒன்றை உருவாக்க ஆப் டெவலப்பர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    முன்னதாக பிளே ஸ்டோரில் கூகுளின் பில்லிங் சிஸ்டத்தை பயன்படுத்தாத செயலிகளுக்கு 30 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும் என கூகுள் அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து இந்திய ஆப் டெவலப்பர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தியாவுக்கென பிரத்யேக பிளே ஸ்டோரை உருவாக்க கோரிக்கை விடுக்க துவங்கி உள்ளனர்.

     கோப்புப்படம்

    சில வாரங்களுக்கு முன் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி நீக்கப்பட்டது. பின் ஜொமாட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற செயலிகளும் நீக்கப்பட்டன. இந்த செயலிகள் கூகுளின் விதிமுறைகளை மீறியதாக அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.

    பேடிஎம் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விஜய் சங்கர் ஷர்மா கூகுள் பிளே சேவைக்கு மாற்றான தேசிய பிளே ஸ்டோர் உருவாக்குவதற்கான கோரிக்கை விடுக்கும் ஆப் டெவலப்பர்கள் மற்றும் தொழில்முனைவோர் குழுவிற்கு தலைமை வகிக்கிறார். 
    விவோ நிறுவனத்தின் புதிய வி20 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    விவோ வி20 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலுடன் விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. 

    தற்சமயம் ஐரோப்பாவை தொடர்ந்து விவோ வி20 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதையொட்டி விவோ புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    வெளியீட்டிற்கு முன் விவோ தனது வி20 ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை தனது அதிகாரப்பூர்வ வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறது. விவோ வி20 ஸ்மார்ட்போன் இந்தியா உள்பட இதர தென்கிழக்கு ஆசிய சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

     விவோ வி20

    விவோ வி20 சிறப்பம்சங்கள்

    - 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
    - 64 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ்
    - 44 எம்பி பிரைமரி கேமரா
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
    - டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    கூகுள் மேப்ஸ் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் டார்ட் மோட் வசதி வழங்கப்பட்டு வருகிறது.


    கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்க துவங்கி இருக்கிறது. இந்த அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    ஆண்ட்ராய்டு 11 தளத்தின் கூகுள் மேப்ஸ் வெர்ஷன் 10.51.1 டார்க் மோட் வசதியை வழங்குகிறது. இதுபற்றிய தகவல் ரெடிட் தளத்தில் சில பயனர்கள் தெரிவித்தனர். எனினும், இதே அப்டேட் பயன்படுத்தும் சிலருக்கு டார்க் மோட் வசதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.

     கூகுள் மேப்ஸ்

    அந்த வகையில் புதிய டார்க் மோட் அம்சம் சர்வெர் சார்ந்த ரோல்-அவுட் முறையில் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது. துவக்கத்தில் இந்த அம்சம் எட்ஜ்-டு-எட்ஜ் யுஐ வசதி கொண்டிருக்கவில்லை என கூறப்படுகிறது.

    செயலியின் கீழ்புறத்தில் கருப்பு நிற பார் காணப்படுகிறது. இந்த அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியின் அப்பியரன்ஸ் டேபில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதில் பயனர்கள் லைட் தீம், டார்க் தீம் அல்லது சிஸ்டம் தீமுடன் சின்க் செய்வது என மூன்று ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் ரூ. 3 ஆயிரம் சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது.


    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சக்திவாய்ந்த மாடல்களில் ஒன்பிளஸ் 8 குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. ரூ. 41,999 விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி, தலைசிறந்த கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

    விரைவில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இந்நிலையில், ஒன்பிளஸ் 8 மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 8 மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள், மாத தவணைகளுக்கு ரூ. 3 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் விலை குறைப்பின் படி ஒன்பிளஸ் 8 பேஸ் வேரியண்ட் ஆன 6 ஜிபி ரேம் மாடல் ரூ. 38,999 விலையில் கிடைக்கிறது. இந்த சலுகை அக்டோபர் 9 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. 

     ஒன்பிளஸ் 8

    ஒன்பிளஸ் 8 சிறப்பம்சங்கள்:

    - 6.55 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
    - 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
    - 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி
    - 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.0
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.75, OIS + EIS 
    - 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4, 4K வீடியோ
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யுஎஸ்பி டைப் சி
    - 4300 எம்ஏஹெச் பேட்டபி
    - ராப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங் 
    அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் ஆன்லைன் தளங்களின் அதிரடி விற்பனை பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


    அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் அக்டோபர் 14 ஆம் தேதி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே தினத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. 

    அந்த வகையில், இதே தினத்தில் சிறப்பு விற்பனையும் துவங்கும் என கூறப்படுகிறது. சிறப்பு விற்பனையில் மொபைல் போன் மற்றும் இதர மின்சாதனங்கள், பல்வேறு இதர பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

     ப்ளிப்கார்ட்

    ப்ளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், மின்சாதனங்கள் மற்றும் பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவைகளை வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

    சிறப்பு விற்பனைக்காக ப்ளிப்கார்ட் எஸ்பிஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதன்படி எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதுதவிர மொபைல் போன் மற்றும் இதர அக்சஸரீக்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் விசேஷ விலை குறைப்பு வழங்கப்படும் என ப்ளிப்கார்ட் தெரிவித்து இருக்கிறது. பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கென பிரத்யேக வலைப்பக்கத்தை ப்ளிப்கார்ட் வெளியிட்டு உள்ளது.

    இத்துடன் சிறப்பு விற்பனையில் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தொலைகாட்சி மற்றும் பெரிய சாதனங்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் எக்சேன்ஜ் சலுகை மற்றும் கூடுதல் வாரண்டி உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
    பட்ஜெட் விலையில் புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    போக்கோ பிராண்டின் புதிய போக்கோ சி3 ஸ்மார்ட்போன் அக்டோபர் 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9சி ஸ்மார்ட்போன் போக்கோ சி3 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     போக்கோ சி3

    தற்போதைய டீசர்களின் படி புதிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இது கேம் சேன்ஜராக இருக்கும் என போக்கோ டீசர்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் எல்சிடி டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன், 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படலாம்.

    இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூகுள் நிறுவனத்தின் குறைந்த விலை பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. எனினும், இவை இந்தியாவில் வெளியாகாது என கூகுள் அறிவித்தவிட்டது.

    எனினும், பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என கூகுள் தெரிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    ட்விட்டரில் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த கூகுள், இந்தியாவில் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அக்டோபர் 17 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் சமூக வலைதளம் மற்றும் வலைதள பக்கங்களில் எந்த தகவலையும் வழங்கவில்லை.

     பிக்சல் 4ஏ

    கூகுள் பிக்சல் 4ஏ சிறப்பம்சங்கள்

    - 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப்
    - 6 ஜிபி LPDDR4X ரேம்
    - 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 10
    - 12.2 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS, EIS
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - கைரேகை சென்சார்
    - 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 3140 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    ரியல்மி நிறுவனம் 125 வாட் பாஸ்ட் சார்ஜரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
     

    ரியல்மி நிறுவனம் தனது 125 வாட் பாஸ்ட் சார்ஜர் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. ரியல்மி இந்தியா மற்றும் ஐரோப்பாவுக்கான தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் புதிய பாஸ்ட் சார்ஜருக்கான டீசரை தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.

    ஜூலை மாதத்தில் ரியல்மி நிறுவனம் 125வாட் அல்ட்ரா டார்ட் பிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை 33 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. தற்சமயம் ரியல்மி நிறுவனம் 65 வாட் சூப்பர்டார்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது.

     ரியல்மி பாஸ்ட் சார்ஜர்

    முதற்கட்டமாக 125 வாட் சார்ஜர் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய சாதனம் பற்றி இதுவரை வேறு எந்த தகவலையும் ரியல்மி வெளியிடவில்லை. ரியல்மி 125 வாட் அல்ட்ரா டார்ட் பிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அதிவேகமாக சார்ஜ் செய்ய வழி செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டு உள்ளது. 

    புதிய 125 வாட் அல்ட்ராடார்ட் பிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் பேட்டரியை 20 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல் இன்றி இந்த தொழில்நுட்பம் 100 சதவீத சார்ஜ் செய்ய 13 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.
    அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    ஹூவாமி நிறுவனம் இந்திய சந்தையில் அமேஸ்பிட் நியோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ரெட்ரோ ஸ்டைலிங், 1.2 இன்ச் அளவில் சதுரங்க வடிவம் கொண்டுள்ளது. 

    இத்துடன் ஸ்மார்ட்வாட்ச் பேட்டரியை சேமிக்கும் வகையில் பிளாக் அண்ட் வைட் எல்சிடி ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது நேரடி சூரிய வெளிச்சத்திலும் தெளிவாக பார்க்கும் வசதியை வழங்குகிறது. 

     அமேஸ்பிட் நியோ

    இத்துடன் லிப்ட்-டு-வேக் அம்சம், நான்கு பட்டன்கள் கொண்ட பிளாஸ்டிக் பாடி, 24 மணி நேர இதய துடிப்பை டிராக் செய்யும் வசதி, 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

    அமேஸ்பிட் நியோ சிறப்பம்சங்கள்

    - 1.2 இன்ச் எஸ்டிஎன் பிளாக் அண்ட் வைட் டிஸ்ப்ளே
    - அழைப்புகள், குறுந்தகவல், மின்னஞ்சல் நோட்டிபிகேஷன் வசதி
    - ஆக்டிவிட்டி டிராக்கிங் மற்றும் ஸ்லீப் மாணிட்டரிங் வசதி
    - 3 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
    - ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார்
    - ப்ளூடூத் 5.0 எல்இ
    - ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் ஐஒஎஸ் 10
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - 160 எம்ஏஹெச் பேட்டரி

    அமேஸ்பிட் நியோ ஸ்மார்ட்வாட்ச் ரெட், பிளாக் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் மிந்த்ரா வலைதளங்களில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    சியோமியின் புதிய ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்போன் தற்சமயம் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.


    இந்தியாவில் சியோமியின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. ஓபன் சேல் விற்பனை சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதுவரை இந்த ஸ்மார்ட்போன் பிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரெட்மி நோட் 9 மாடலில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, குவாட் கேமரா சென்சார்கள் மற்றும் 5020 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கின்றன.

    சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம் மட்டுமின்றி எம்ஐ ஹோம் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,499 என்றும் டாப் எண்ட் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     ரெட்மி நோட் 9

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக்  ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11 வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    இதுமட்டுமின்றி 3டி கர்வ்டு பேக் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜர், 9 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 வாங்குவோருக்கு அதெல்லாம் வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் நிகழ்வில் அறிமுகம் செய்த புதிய ஆப்பிள் வாட்ச்களுடன் சார்ஜிங் அடாப்டரை வழங்கவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்கவே இந்த முடிவை எடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், சமீபத்திய ஐஒஎஸ் 14 குறியீட்டு விவரங்களின் படி ஐபோன் 12 வாங்குவோருக்கும் இதே வழிமுறை பின்பற்றி இயர்பாட்களை வழங்காது என கூறப்படுகிறது. 

     ஐபோன் 11

    அந்த வகையில், இனி வரும் ஆப்பிள் சாதனங்களுடன் சார்ஜிங் அடாப்டர் மற்றும் இயர்பாட்களை எதிர்பார்க்க முடியாது என்றே தெரிகிறது.

    இதேபோன்ற தகவல் முன்கூட்டியே பலமுறை வெளியாகி வந்தது. எனினும், புதிய ஐபோன்களில் 5ஜி கனெக்டிவிட்டி மற்றும் இதர அம்சங்களால் ஏற்படும் விலை உயர்வை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்படலாம் என கூறப்பட்டது. 
    அந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு நிச்சயம் வெளியாகாது என ஒன்பிளஸ் அதிகாரி தெரிவித்து இருக்கிறது.


    ஒன்பிளஸ் 8டி ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகாது என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஒன்பிளஸ் 8டி ப்ரோ மாடலை வெளியிடும் திட்டமில்லை என அவர் அறிவித்து இருக்கிறார்.

    ஒன்பிளஸ் 8 ப்ரோ ஏற்கனவே பிரீமியம் பிளாக்ஷிப் மாடலாக இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு மற்றொரு ப்ரோ சீரிஸ் அப்கிரேடு செய்யும் திட்டம் ஏதும் இல்லை என பீட் லௌ தெரிவித்து இருக்கிறார். எனினும், ஒன்பிளஸ் 8டி மாடலுடன் ஒன்பிளஸ் நார்டு சீரிசில் புது மாடல் அறிமுகமாக இருப்பதை அவர் சூசகமாக தெரிவித்து உள்ளார்.

     ஒன்பிளஸ் நார்டு

    முன்னதாக ஒன்பிளஸ் நார்டு சீரிசில் புது மாடல் அறிமுகமாக இருப்பதை ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது. தற்சமயம் ப்ரோ சீரிஸ் அப்கிரேடு செய்யும் திட்டம் இல்லாததால், புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 8டி மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 8டி மாடல் துவக்க விலை 799 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 69 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    ×