என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. அதன்படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
முந்தைய தகவல்களில் ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறு வீடியோவையும் மோட்டோரோலா வெளியிட்டு இருந்தது. மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

தற்சமயம் புதிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஸ்மார்ட் டிவி, குளிர்சான பெட்டி மற்றும் வாஷிங் மெஷின் போன்றவற்றையும் மோட்டோரோலா அறிமுகம் செய்ய இருக்கிறது.
அந்த வகையில், மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன், மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி, முன்புறம் லோட் செய்யும் வசதி கொண்ட வாஷிங் மெஷின் மற்றும் இரண்டு கதவுகள் கொண்ட குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவற்றையும் மோட்டோரோலா அறிமுகம் செய்ய இருக்கிறது.
மேலும் இவை அனைத்தும் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என டீசரில் தெரியவந்துள்ளது. புதிய மோட்டோ ரேசர் போன் தவிர மற்ற சாதனங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் எம்ஐ வாட்ச் ரிவால்வ் பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் 46எம்எம் வெர்ஷனில் 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேம், 10 ஸ்போர்ட்ஸ் வகைகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 5 ஏடிஎம் வாட்டர் ப்ரூஃப் மற்றும் ஜிபிஎஸ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் சிறப்பம்சங்கள்
- 1.39 இன்ச் 454×454 பிக்சல் AMOLED ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ப்ளூடூத் 5, ஜிபிஎஸ்
- ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஎஸ் தளங்களுடன் இயங்கும் வசதி
- இதய துடிப்பு சென்சாருடன் பல்வேறு இதர சென்சார்கள்
- ஸ்லீப் டிராக்கிங், பிட்னஸ் டிராக்கிங் மற்றும் 10 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 420 எம்ஏஹெச் பேட்டரி
- 14 நாட்கள் பேட்டரி பேக்கப்
சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஸ்டிராப், குரோம் சில்வர் மற்றும் நெப்டியூன் புளூ ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், தீபாவளி வரை இது ரூ. 9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் இரு கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்11 மற்றும் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனின் விலை முதல் முறையாக குறைக்கப்படுகிறது. கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனின் விலை இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
இரு சாம்சங் ஸ்மார்ட்போன்களும் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்சமயம் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ. 1000 வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனிற்கு ரூ. 400 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

விலை குறைப்பின் படி கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 10,499 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 11,999 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், மெட்டாலிக் புளூ மற்றும் வயலெட் நிறங்களில் கிடைக்கிறது.
கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை ரூ. 7999 என மாறி இருக்கிறது. இது பிளாக், புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் அமேசான் மற்றும் சாம்சங் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்01 சிறப்பம்சங்கள்
- 5.7 இன்ச் 1520×720 பிக்சல் HD+ LCD இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
- அட்ரினோ 505 GPU
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
- டூயல் சிம்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 2 எம்பி இரண்டாவது டெப்த் சென்சார்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- ஃபேஸ் அன்லாக்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 7 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து உள்ளது. இதே நாளில் ரியல்மி ஸ்மார்ட் டிவி SLED அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இவை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

ரியல்மி 7ஐ சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
- அட்ரினோ 610 ஜிபியு
- 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
- 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
இதுமட்டுமின்றி ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 7ப்ரோ ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த மாடலில் சன் கிஸ்டு லெதர் பினிஷ் கொண்டிருக்கும். இத்துடன் பல்வேறு இதர சாதனங்களும் அக்டோபர் 7 நிகழ்வில் அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டு உள்ளது.
மொபைல் போன்களில் பண பரிமாற்றம் செய்யும் போது கவனிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.
மொபைல் போன்கள் இந்த காலக்கட்டத்தில் பலருக்கும் மணிபர்ஸ் போன்று உருமாற்றம் அடைந்துள்ளன. பலருக்கும் மொபைல் வாலெட்கள் இதற்கான வசதிகளை வழங்குகின்றன. ஒருவரது வங்கிக்கணக்கில் பணம் வைத்திருப்பதை போன்று மொபைல் வாலெட்டில் வைத்துக்கொண்டு தேவைக்கு ஏற்ப செலவு செய்யலாம்.
இப்படி மொபைல் போன் மூலம் நிதியியல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம் என்றபோது இன்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பயன்பாட்டு பொருளாக செல்போன் மாறியுள்ளது. இதுபோன்ற வசதிகள் காரணமாகத்தான் செல்போன் தொலைந்து போகாமல் இருக்க கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டி இருக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் செல்போன் தொலைந்து விடுகிறது என்றால் என்ன செய்வது? மொபைல் போனில் இருக்கும் நிதி சார்ந்த தகவல்கள் மற்றும் பணம் திருடப்பட்டால் என்ன செய்வது? இதுதான் தற்போதைய நிலையில் மொபைல் பயனாளிகள் கவனிக்க வேண்டிய விஷயம்.
பொதுவாக ஸ்மார்ட்போன்களை இயக்குவதற்கு ரகசிய குறியீடு உள்ளதுபோல அமைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். என்றாலும் செல்போன் தொலைந்து போனால் ரகசிய குறியீடுகளை எடுக்க முடியாது என்றில்லை. மொபைல் மென்பொருள் அறிந்தவர்கள் அதை இயக்கிவிட முடியும்.
எனவே சிம்கார்டு மட்டும் செயலிழக்கச் செய்துவிட்டால் போதுமானதல்ல என்பதை உணர வேண்டும். பொதுவாக வங்கிச் செயலிகளில் பயன்பாடுகளை பொறுத்த வரை ஒவ்வொருமுறை பயன்படுத்தும் போதும் வாடிக்கையாளர் எண் மற்றும் ரகசிய எண் கேட்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் என்னதான் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகள் கொடுத்தாலும் அதையும் உடைக்கும் ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அதாவது வாலட்டில் வைக்கும் பணமோ, கிரெடிட் கார்டு தகவல்களோ 100 சதவீதம் பாதுகாப்பாகத்தான் இருக்கும் என்றும் சொல்ல முடியாது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது சாம்சங்கின் முதல் கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். இது அக்டோபர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் இன்பினிட்டி யு டிசைன், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. இது கேலக்ஸி எம்31 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் சாம்சங்கின் சிங்கிள் டேக் அம்சம் வழங்கப்படுகிறது.

இதுதவிர 6000 எம்ஏஹெச் பேட்டரி, சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வு விர்ச்சுவல் முறையில் இருக்குமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
முந்தைய தகவல்களின் படி கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 6ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 உள்ளிட்டவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதன் விலை ரூ. 15 ஆயிரத்தில் துவங்கி ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ப்ளிப்கார்ட் நிறுவனம் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ப்ளிக்கார்ட் நிறுவனம் பிக் பில்லியன் டேஸ் சேல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த விற்பனை விரைவில் துவங்கும் என ப்ளிப்கார்ட் தெரிவித்து உள்ளது.
முதற்கட்டமாக பிக் பில்லியன் டேஸ் சேல் ப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு விற்பனைக்காக ப்ளிப்கார்ட் எஸ்பிஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதன்படி எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதுதவிர மொபைல் போன் மற்றும் இதர அக்சஸரீக்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் விசேஷ விலை குறைப்பு வழங்கப்படும் என ப்ளிப்கார்ட் தெரிவித்து இருக்கிறது. பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கென பிரத்யேக வலைப்பக்கத்தை ப்ளிப்கார்ட் வெளியிட்டு உள்ளது.
இத்துடன் சிறப்பு விற்பனையில் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தொலைகாட்சி மற்றும் பெரிய சாதனங்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் எக்சேன்ஜ் சலுகை மற்றும் கூடுதல் வாரண்டி உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
நோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 5ஜி மற்றும் நோக்கியா 6.3 ஸ்மார்ட்போன்கள் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 5ஜி மற்றும் நோக்கியா 6.3 ஸ்மார்ட்போன்களை நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவற்றில் நோக்கியா 9.3 பியூர்வியூ பிளாக்ஷிப் மாடல் ஆகும். இந்த மாடல் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
நோக்கியா 7.3 5ஜி மற்றும் நோக்கியா 6.3 மாடல் பற்றிய விவரங்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. நோக்கிாயா 9.3 மாடலில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரைமரி கேமரா, 8கே வீடியோ ரெக்கார்டிங் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று நோக்கியா 7.3 5ஜி மாடலில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா, 24 எம்பி செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
நோக்கியா 6.3 மாடலில் 6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, பியூர் டிஸ்ப்ளே பிராண்டிங், 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி மெமரி, குவாட் கேமரா சென்சார்கள், 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை CNY999 இந்திய மதிப்பில் ரூ. 10,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
தற்சமயம் புதிய மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. ஏற்கனவே ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி, 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
புதிய ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் எல்சிடி டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன், 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

ரெட்மி 9ஏ சிறப்பம்சங்கள்:
- 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன்
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
- ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
- 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- ஸ்பிலாஷ் ப்ரூஃப்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
கூகுள் நிறுவனம் தனது மீட் வீடியோ காலிங் சேவையில் திடீர் மாற்றத்தை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கூகுள் நிறுவனம் தனது மீட் வீடியோ காலிங் சேவையின் இலவச பதிப்புகளில் மீட்டிங்களுக்கான கால அளவு 60 நிமிடங்களாக குறைக்கப்படும் என அறிவித்து இருக்கிறது. மீட்டிங்களில் புதிய காலக்கெடு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது.
ப்ரோமோ மாற்றங்கள் மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்கள் காலாவதியாவது பற்றி நாங்கள் எந்த கருத்தும் கூறவில்லை. இவற்றில் மாற்றம் ஏற்பட்டால், நிச்சயம் தகவல் வழங்குவோம் என கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பதில் அளித்து இருக்கிறார்.

எக்ஸ்டென்ஷன் மூலம் கூகுள் அக்கவுண்ட் வைத்திருப்போர் அனைவரும் இலவச மீட்டிங்களை அதிகபட்சம் 100 பேருடன் எந்த கால அவகாசமும் இன்றி கலந்து கொள்ள முடியும். செப்டம்பர் 30 கால அவகாசம் ஜி சூட் மற்றும் ஜி சூட் பார் எட்யூகேஷன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
இரு சேவைகளிலும் மீட்டிங்கின் போது அதிகபட்சம் 250 பேர் கலந்து கொள்ளும் வசதி மற்றும் ஒற்றை டொமைனில் ஒரு லட்சம் பேருடன் நேரலை செய்யும் வசதி, மீட்டிங் ரெக்கார்டிங்களை கூகுள் டிரைவில் சேவ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
வழக்கமாக இந்த அம்சங்கள் ஜி சூட் என்டர்பிரைஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கான மாத கட்டணம் 25 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1800 வசூலிக்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி யுஐ 2.0 கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமாகும் என ரியல்மி துணை தலைவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் கியூ சீரிஸ் பிராண்டிங் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ரியல்மி கியூ சீரிஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி ரியல்மி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

முன்னதாக RMX2173 மற்றும் RMX2117 எனும் மாடல் நம்பர்கள் கொண்ட இரு ரியல்மி ஸ்மார்ட்போன் TENAA வலைதளத்தில் சான்று பெற்று இருந்தன. இதில் RMX2176 சிறப்பம்சங்கள் ரியல்மி எக்ஸ்7 மாடலில் இருந்ததை போன்றே கொண்டிருக்கிறது.
இதனால் RMX2176 மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ்7 லைட் எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இரு மாடல்களிலும் கேமரா மட்டும் வேறுபடும் என தெரிகிறது. RMX2173 மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் ரியல்மி கியூ சீரிசில் வெளியாகும் என கூறப்படுகிறது.
முன்னதாக 2019 ஆண்டில் ரியல்மி கியூ மாடல் அறிமுகம் செய்யப்பட்டு, பின் அது ரியல்மி 5 ப்ரோ என ரி-பிராண்டு செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய கியூ சீரிஸ் மாடல் ரியல்மி கியூ2 எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது. எனினும், இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு அதிபர் டிரம்ப் விதித்த தடை உத்தரவுக்கு நீதிபதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் அதிபர் டிரம்ப்பின் உத்தரவிற்கு அந்நாட்டு நீதிபதி இடைக்கால தடை விதித்து இருக்கிறார். புதிய உத்தரவு காரணமாக நவம்பர் மாதம் தேர்தல் முடிந்த பின் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
டிக்டாக் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டு அமெரிக்க மாவட்ட நீதிபதி கார்ல் நிகோல்ஸ் அதிபர் டிரம்ப்பின் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

டிக்டாக் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் அதிபரின் தடை உத்தரவு முதல் சட்டத்திருத்த உரிமைகளை மீறுவதோடு வர்த்தகத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுவதாக கூறினர்.
முன்னதாக அமெரிக்காவில் சீனாவை பூர்வீகமாக கொண்டு இயங்கும் டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட செயலிகள் அந்நாட்டு பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தை முன்வைத்து இவற்றை தடை செய்ய டிரம்ப் உத்தரவிட்டார்.






