என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    வி நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி வரை இலவச டேட்டா வழங்குகிறது.


    வி (வோடபோன் ஐடியா ) நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. எனினும், இது தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தெரிகிறது.

    இலவச டேட்டாவுக்கு தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு வி குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கிறது. பின் வி செயலியை கொண்டு கூடுதல் டேட்டா பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.

     கோப்புப்படம்

    இலவச டேட்டா விளம்பர ரீதியில் வழங்கப்படுவதால், ஏழு நாட்களுக்கு பின் இது கிடைக்காது. ஏற்கனவே பயன்படுத்தப்படும் சலுகை தீர்ந்ததும், புதிய சலுகையை தேர்வு செய்ய இலவச டேட்டா பயன்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வி நிறுவனம் ஜீ5 சந்தா உள்ளடக்கிய சலுகைகளை அறிவித்து இருந்தது.

    ஜீ5 சந்தா உள்ளடக்கிய வி சலுகைகள் விலை ரூ. 355 முதல் துவங்குகிறது. இத்துடன் புதிதாக ரூ. 351 சலுகையையும் வி அறிவித்தது. இதில் வொர்க் பிரம் ஹோம் சலுகை ஆகும். இதில் பயனர்களுக்கு 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    ஐந்து கேமரா கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஐந்து கேமரா சென்சாருடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ72 எனும் பெயரில் உருவாகி வருகிறது. இது ஐந்து கேமரா சென்சார் கொண்ட முதல் சாம்சங் ஸ்மார்ட்போன் ஆகும்.

    சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் பிரிவில் நிலைநிறுத்தப்படுகிறது. இது சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ71 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

     கேலக்ஸி ஸ்மார்ட்போன்

    தற்போதைய தகவல்களின் படி கேலக்ஸி ஏ72 மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

    இதுதவிர அடுத்த ஆண்டு முதல் ஸ்மார்ட்போன்களின் கேமரா மாட்யூல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த சாம்சங் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி கொண்ட முதல் மாடலாக கேலக்ஸி ஏ72 இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இத்துடன் உயர்-ரக கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் OIS தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ72 மாடலுடன் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி ஸ்மார்ட் டிவி 55 இன்ச் மாடலை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. இது உலகின் முதல் SLED 4கே ஸ்மார்ட் டிவி என ரியல்மி தெரிவித்து உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ரியல்மி மற்றும் ஜான் ரூமேன்ஸ் இணைந்து உருவாக்கி இருக்கின்றன.

    SLED டிஸ்ப்ளே தொழில்நுட்பம் கொண்ட ரியல்மி ஸ்மார்ட் டிவி 4கே 55 இன்ச் மாடல் டியுவி ரெயின்லேண்ட் லோ புளூ லைட் சான்று பெற்று இறுக்கிறது. OLED டிவிக்கள் தவிர இந்த சான்று பெற்ற ஒரே டிவி இது ஆகும்.

     ரியல்மி ஸ்மார்ட் டிவி

    புதிய ரியல்மி டிவி மாடல் மற்ற ரக டிவிக்களை விட சிறப்பான அனுபவத்தை வழங்குவதோடு, கண்களுக்கும் பாதுகாப்பானது ஆகும். புதிய டிவியுடன் ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் நிற்கும் புகைப்படத்தை அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். 

    அந்த வகையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல் அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வீடியோ கால் செயலியான ஜூம் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் வசதியை தனது ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கி வருகிறது.

    ஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் புது அப்டேட் வெளியிடப்படுகிறது. இணைய வழி சேவையில் அதிக கவனம் செலுத்தி வந்த ஜூம், தற்சமயம் மொபைல் செயலியிலும் மாற்றங்களை செய்ய துவங்கி உள்ளது.

    அந்த வரிசையில் ஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் ஜூம் ஆண்ட்ராய்டு செயலி வெர்ஷன் 5.3 இல் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் தவிர இந்த அப்டேட் சில பிழை திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறது.

     ஜூம்

    இத்துடன் அழைப்புகளின் போது, வீடியோக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் இணைய வழி பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. வீட்டில் இருந்து பணியாற்றுவோர், அழைப்புகளின் போது, தனக்கு பின் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்ள இந்த அம்சம் உதவுகிறது.

    இணைய பதிப்பை தொடர்ந்து இந்த அம்சம் ஆண்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் ஆண்ட்ராய்டு செயலியில் பேக்கிரவுண்ட்களை மாற்ற படங்களை தேர்வு செய்ய முடியும். வீடியோக்களை பேக்கிரவுண்டாக செட் செய்து கொள்ளும் வசதி இணைய பதிப்பில் வழங்கப்பட்டு உள்ளது.
    சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் ரூ. 14 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    சோனி நிறுவனத்தின் WF-H800 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இயர்பட்ஸ் சோனியின் டிரை-ஹோல்டு ஸ்டிரக்சர், சோனி டிஜிட்டல் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் என்ஜின், நீண்ட பேட்டரி லைஃப், ஆட்டோமேடிக் பிளே/பாஸ் மற்றும் பல்வேறு அம்சங்கள் கொண்டிருக்கிறது.

    புதிய இயர்பட்ஸ் 6 எம்எம் டோம்-டைப் டிரைவர்களை கொண்டு இயங்குகிறது. இத்துடன் ப்ளூடூத் 5 மற்றும் புதிய ப்ளூடூத் சிப் கொண்டுள்ளது. இவை சீரான ஆடியோ அனுபவத்தை குறைந்த லேடென்சியில் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 16 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.

     சோனி WF-H800

    மேலும் இதில் க்விக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 70 நிமிடங்களுக்கு பயன்படுத்த முடியும். இதில் இயர் டிடெக்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இயர்போனை அணிந்து கொண்டால் தானாக ஆன் ஆகும். பின் காதில் இருந்து கழற்றினால் தானாக ஆப் ஆகிவிடும்.

    இத்துடன் சோனி WF-H800 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட், அலெக்சா மற்றும் சிரி போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகளை கொண்டுள்ளது. இது பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விமானங்களில் டெலிகாம் சேவையை வழங்க இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விமானங்களினுள் இணையம் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற சேவையை வழங்குவதற்கான பிரத்யேக ரீசார்ஜ் சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் கட்டணம் ரூ. 499 முதல் துவங்குகிறது.

    ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட 22 விமான நிறுவன விமானங்களில் பயணம் செய்யும் போது, புதிய இன்-பிளைட் கனெக்டிவிட்டி சலுகைகளை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

    புதிய சலுகைகள் பற்றிய அறிவிப்புடன், ரூ. 1101 மற்றும் ரூ. 1201 சர்வதேச ரோமிங் சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த வகையில் இரு சர்வதேச ரோமிங் சலுகைகளிலும் வைபை காலிங் வசதி வழங்கப்படுகிறது. 

     கோப்புப்படம்

    ஜியோவின் இன்-பிளைட் கனெக்டிவிட்டி சலுகைகள் ரூ. 499, ரூ. 699 மற்றும் ரூ. 999 விலையில் கிடைக்கின்றன. இவை ஒரு நாள் வேலிடிட்டி கொண்டுள்ளன. ரூ. 499 சலுகையில் 250 எம்பி டேட்டா, 100 நிமிடங்களுக்கு அவுட்கோயிங் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 

    ரூ. 699 சலுகையில் 500 எம்பி டேட்டாவும், ரூ. 999 சலுகையில் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் 100 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 

    புதிய சலுகைகளில் இன்கமிங் அழைப்புகள் வழங்கப்படவில்லை. எனினும், இன்கமிங் எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
    இனி இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை இப்படியும் வாங்கலாம் என சத்தமில்லாமல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. ஓபன் சேல் அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில்ல் நடைபெறுகிறது. 

    தற்சமயம் ஒன்பிளஸ் நார்டு 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் டாப் எண்ட் 12 ஜிபி ரேம் வேரியண்ட் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் ஆன 6 ஜிபி ரேம் விற்பனை செப்டம்பர் 28 ஆம் தேதி பிளாஷ் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

     ஒன்பிளஸ் நார்டு

    இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு பேஸ் வேரியண்ட் விலை ரூ. 24,999 முதல் துவங்குகிறது. இதன் 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ. 27,999 விலையிலும், டாப் எண்ட் 12 ஜிபி ரேம் மாடல் ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இரு வேரியண்ட்களும் ஓபன் சேல் விற்பனை செய்யப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் எஃப்ஹெச்டி பிளஸ் ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்பி இன்-ஸ்கிரீன் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்களை சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது. எனினும், நோக்கியா 7 சீரிஸ் அல்லது 9 சீரிஸ் பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

    இந்நிலையில், நோக்கியா 7.3 ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இவை சிஏடி வரைபடங்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அளவில் இது 165.8x76.3x8.2எம்எம் அளவில் இருக்கிறது. இதன் பின்புறம் பிளாஸ்டிக் பேக் வழங்கப்படுகிறது.

     நோக்கியா 7.3

    மேலும் புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ஸ்கிரீன், நான்கு கேமரா சென்சார்கள், பின்புறம் கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டிருக்கிறது. இத்துடன் 6.5 இன்ச் FHD+HDR பியூர் டிஸ்ப்ளே, 48 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு, மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    முன்புறம் 24 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 690 5ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் அதிரடி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ரியல்மி நிறுவனம் அன்டர்-டிஸ்ப்ளே கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரியல்மி துணை தலைவர் சூ கி சேஸ் அறியப்படாத ஸ்மார்ட்போன் ஒன்றின் புகைப்படத்தை சீன சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

    இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் நாட்ச், பன்ச் ஹோல் என முன்புற கேமரா இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. அந்த வகையில், புகைப்படத்தில் இருப்பது அன்டர்-டிஸ்ப்ளே கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் தான் என கூறப்படுகிறது.

     ரியல்மி

    ரியல்மி தவிர பல்வேறு இதர நிறுவனங்களும் அன்டர்-டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில், ரியல்மி இணைந்திருக்கும் தகவல் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

    சூ கி சேஸ், ரியல்மி துணை தலைவர் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை வெளியிட்டதோடு, இந்த ஸ்மார்ட்போனில் பாப் அப் ரக கேமரா வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி, 5ஜி மாட்யூல் தடிமனாக இருப்பதால் பாப்-அப் கேமரா வழங்க முடியாது என தெரிவித்து இருந்தார்.

    ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை மட்டும் பதிவிட்ட ரியல்மி அதிகாரி, அதன் அம்சங்கள் பற்றி எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், இந்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 
    ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 20 சாதனங்களை உற்பத்தி செய்ய உள்நாட்டு உற்பத்தியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்தியாவில் சியோமி போன்ற சீன நிறுவனங்களை எதிர்கொள்ள குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

     கோப்புப்படம்

    இதற்கென லாவா இன்டர்நேஷனல், கார்பன் மொபைல்ஸ் மற்றும் டிக்சான் டெக்னாலஜீஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

    புதிய ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் ஜியோ டேட்டா சலுகைகளுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 4 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    ஜியோ ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, ஏர்டெல் நிறுவனமும் லாக்டு ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதற்கென ஏர்டெல் நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
    ட்விட்டர் டைரக்ட் மெசேஜ் சேவையில் வாய்ஸ் மெசேஜ் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ட்விட்டர் சேவையில் வாய்ஸ் ட்வீட்ஸ் எனும் புதிய அம்சம் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் பயனர்கள் ஆடியோ மெசேஜ் மூலம் தங்களது கருத்துக்களை பதிவிட முடியும். 

    தற்சமயம் இந்த அம்சத்தை நீட்டித்து ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ் சேவையில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வழி செய்கிறது. இதற்கான இன்டர்பேஸ் வாய்ஸ் ட்வீட்ஸ் அம்சத்திற்கு வழங்கப்பட்டதை போன்றே காட்சியளிக்கிறது. 

     ட்விட்டர்

    ட்விட்டரில் ஒருவருக்கு டிஎம் செய்யும் போது, வலது புறத்தில் டெக்ஸ்ட் பாக்ஸ் காணப்படும். அதனை க்ளிக் செய்ததும் வாய்ஸ் மெசேஜை உருவாக்க முடியும். இவ்வாறு செய்யும் போது, ஆடியோ ரெக்கார்டிங் நிறுத்துவதற்கான ஆப்ஷன் வழங்கப்படுகிறது. 

    மேலும் வாய்ஸ் மெசேஜை அனுப்பும் முன், அதனை சரிபார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனால் ரெக்கார்ட் செய்த ஆடியோவை ஒருமுறை முழுமையாக கேட்டு, பின் அதனை அனுப்ப முடியும். மறுபுறம் ஆடியோ மெசேஜை பெறுபவர், அதனை பிளே / பாஸ் செய்து கேட்கலாம்.

    முதற்கட்டமாக இந்த அம்சம் பிரேசில் நாட்டில் சோதனை செய்யப்படுகிறது. சோதனை வெற்றிகரமாக நிறைவுற்றால், சர்வதேச அளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் தங்களின் டிஎம் சேவையில் வாய்ஸ் மெசேஜ் வசதியை ஏற்கனவே வழங்கி வருகின்றன.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. 

    சர்வதேச சந்தையை தொடர்ந்து தற்சமயம் இரு மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்கள் நோக்கியா இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. 

     நோக்கியா 2.4

    அந்த வகையில் இவற்றின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவற்றின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறியப்படவில்லை.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் பன்ச் ஹோல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.

    நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4500 எம்ஏஹெச் பேட்டரி, டூயல் பிரைமரி கேமராக்கள், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 
    ×