என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய ஐபோன்களின் முன்பதிவு அக்டோபர் 16 ஆம் தேதி துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
புதிய ஐபோன்களின் வெளியீடு பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களிலும் புதிய ஐபோன் 12 சீரிஸ் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருந்தது.

இதுவரை வெளியாகி உள்ள தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் 5.4 இன்ச் ஐபோன் 12 மினி, 6.1 இன்ச் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்யும் என கூறப்பட்டுள்ளது. இதில் ப்ரோ மாடல்களில் ஆப்பிள் LiDAR சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் துவக்க விலை 750 டாலர்கள் வரை இருக்கும் என தெரிகிறது. முந்தைய ஐபோன் 11 மாடல் விலை 699 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய ஐபோன்களில் OLED டிஸ்ப்ளே, ஏ14 பயோனிக் சிப், குவால்காம் 5ஜி மோடெம் மற்றும் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதி செய்துள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் அக்டோபர் 8 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகிறது.
புதிய கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போனில் சூப்பர் AMOLED இன்பினிட்டு யு ஸ்கிரீன், பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எப்41 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
- மாலி-ஜி72எம்பி3 ஜிபியு
- 6 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
- டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- டெப்த் / மேக்ரோ லென்ஸ்
- 32 எம்பி செல்பி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- எப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
அமேசான் இந்தியா தளத்தை தமிழ் உள்பட நான்கு புதிய மொழிகளில் இயக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அமேசான் தளத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா போன்ற மொழிகளில் இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு மேலும் அதிக வாடிக்கையாளர்கள் ஈர்க்க அமேசான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இரு ஆண்டுகளுக்கு முன் அமேசான் சேவையை இந்தி மொழியில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் புதிய மொழிகள் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய மொழி சேவை மொபைல் செயலி மட்டுமின்றி டெஸ்க்டாப் தளத்திற்கும் பொருந்தும்.

புதிய மொழிகளை சேர்த்து அமேசான் தளம் தற்சமயம் ஆறு மொழிகளில் இயக்கும் வசதி கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் தளங்களில் அமேசான் செயலி அல்லது டெஸ்க்டாப் தளங்களில் பயனர் விரும்பும் மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.
பண்டிகை காலக்கட்டத்திற்கு முன் புதிய மொழிகள் சேர்க்கப்பட்டு இருப்பது அமேசானில் பண்டிகை கால விற்பனை மேலும் அதிகப்படுத்தும் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 / எக்சைனோஸ் 990 பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் இன்-டிஸ்ப்ளே ஆப்டிக்கல் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ, பிக்ஸ்பி, சாம்சங் ஹெல்த் மற்றும் சாம்சங் பே போன்ற சேவைகளை கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 ஜிபியு
அல்லது
- ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர், ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு
- 6 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி மெமரி
- 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
- சிங்கிள் சிம் / ஹைப்ரிட் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8, PDAF, 79˚ FOV, OIS
- 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32° FoV, f/2.4, PDAF, OIS
- 12 எம்பி 123° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- யுஎஸ்பி டைப் சி ஆடியோ
- ஆப்டிக்கல் கைரேகை சென்சார்
- 5ஜி SA/NSA Sub6 / எம்எம்வேவ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி 3.1
- 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்
-கியூஐ வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர்
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மின்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 599 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 56,250 முதல் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 819 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 70,350 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் புதிதாக அசத்தல் அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.20.201.1 வெளியாகி இருக்கிறது. புதிய பீட்டா பதிப்பில் எக்ஸ்பைரிங் மீடியா எனும் புதிய அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இது ஸ்னாப்சாட் மற்றும் டெரிகிராம் செயலிகளில் உள்ள டிஸ்-அபியரிங் மீடியா அம்சம் போன்றே செயல்படுகிறது.
இதில் உள்ள மீடியா பிரிவில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஜிஃப் உள்ளிட்டவை அடங்கும். இந்த அம்சம் வாட்ஸ்அப் ஏற்கனவே சோதனை செய்து வரும் எக்ஸ்பைரிங் மெசேஜஸ் போன்றே இயங்கும்.

இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ததும், ஆட் மீடியா பட்டன் அருகில் புதிய ஐகான் தெரியும். அதனை க்ளிக் செய்ததும், குறிப்பிட்ட மீடியா எக்ஸ்பைரிங் மீடியாவாக அனுப்பப்படும். இதனை பெறுபவர் பார்த்தால், அதன் பின் சாட் பாக்சில் இருந்து காணாமல் போய்விடும்.
தற்சமயம் காணால் போகும் மீடியாவை குறிக்கும் தகவல் இடம்பெறவில்லை. மேலும் பயனர் பெற்ற மீடியாவை ஸ்கிரீன்ஷாட் எடுத்தாரா என்பதை குறிக்கும் தகவல் இடம்பெறவில்லை. தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதனால் இது ஸ்டேபில் அப்டேட்டில் கிடைக்க சில காலம் ஆகும் என தெரிகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் விலை முந்தைய மாடலை விட குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
புதிய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் ஸ்கிரீன் கொண்ட 120 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விலை அமேசானில் தவறுதலாக பட்டியலிடப்பட்டு பின் உடனடியாக நீக்கப்பட்டது.

அதன்படி ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் 599 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 51,559 என நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. இது ஒன்பிளஸ் 8 ஐரோப்பிய வெர்ஷனை விட 50 யூரோக்கள் வரை குறைவு ஆகும்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஒன்பிளஸ் 8டி மாடலில் 6.5 இன்ச் 120Hz FHD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி சென்சார், 5 எம்பி சென்சார் மற்றும் 2 எம்பி சென்சார் மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பேக், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

மோட்டோ இ7 பிளஸ் சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் எல்சிடி ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
- அட்ரினோ 610 ஜிபியு
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 5000எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் மிஸ்டி புளூ மற்றும் ட்விலைட் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆப்பிள் சாதனங்களை வாங்கிட முடியும். இத்துடன் தள்ளுபடி மற்றும் இதர நிதி சலுகைகளை வழங்கப்படுகிறது.
இதுவரை ஆப்பிள் நிறுவன சாதனங்கள் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் இருந்தபடி வாங்கிட முடியும்.

ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் 24 முதல் 72 மணி நேரங்களுக்கு டெலிவரி செய்யப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. எனினும், மேக் போன்ற சாதனங்கள் டெலிவரி ஆக ஒரு மாதம் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் மாணவர்களுக்கு பிரத்யேக நிதி சலுகைகள் மற்றும் தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்ப்படுகின்றன. ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வாடிக்கையாளர் சேவை மைய வசதியும் வழங்கப்படுகிறது. இதில் சேவை மைய அதிகாரி சாட் அல்லது அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர் சந்தேகங்களை பூர்த்தி செய்கின்றனர்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒடிடி பலன்களை வழங்கும் ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புது ஜியோ ஃபைபர் சலுகைகளை தொடர்ந்து தற்சமயம் ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகளில் பல்வேறு ஒடிடி சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகள் மூலம் தலைசிறந்த கனெக்டிவிட்டி, பொழுதுபோக்கு மற்றும் அனுபவத்தை வழங்க இருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து உள்ளது.

ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகள் ரூ. 399 மாத கட்டணத்தில் துவங்குகிறது. இதில் 75 ஜிபி டேட்டா மற்றும் 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் வழங்கப்படுகிறது. ரூ. 599 சலுகையில் 100 ஜிபி டேட்டா, 200 ஜிபி டேட்டா ரோல் ஓவர், கூடுதலாக ஒரு சிம் கார்டு மற்றும் ஃபேமிலி பிளான் வழங்கப்படுகிறது.
ரூ. 799 சலுகையில் 150 ஜிபி டேட்டா, 200 ஜிபி டேட்டா ரோல் ஓவர், கூடுதலாக இரு சிம் கார்டுகள், ஃபேமிலி சலுகைகள் வழங்கப்படுகின்றன. ரூ. 999 சலுகையில் 200 ஜிபி டேட்டா, மூன்று சிம் கார்டுகள், ரூ. 1499 சலுகையில் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
அனைத்து சலுகைகளுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் குறைந்த விலையில் இரண்டு பவர் பேங்க் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் எம்ஐ பவர் பேங்க் 3ஐ 10000 எம்ஏஹெச் மற்றும் 20000 எம்ஏஹெச் பவர் பேங்க் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.
இவற்றில் 12 அடுக்கு சிப் பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட் பவர் மேனேஜ்மென்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் குறைந்த மின்திறன் கொண்ட சாதனங்களை குறைந்த வேகத்தில் சார்ஜ் செய்யும் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது.

20000 எம்ஏஹெச் பவர் பேங்க் மாடலில் மூன்று போர்ட் அவுட்புட் வழங்கப்பட்டு உள்ளது. 10000 எம்ஏஹெச் மாடலில் இரட்டை பவர் அவுட்புட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் டூயல் போர்ட் இன்புட் மற்றும் 18 வாட் இருவழி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இதன் 20000 எம்ஏஹெச் பவர் பேங்க் மாடல் யுஎஸ்பி பவர் டெலிவரி வசதி கொண்டுள்ளது. புதிய 10000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3ஐ மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் மெட்டாலிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
20000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3ஐ மாடல் சேன்ட்ஸ்டோன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களும் அமேசான் மற்றும் எம்ஐ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
2020 ஆண்டின் நிகழ்வுகளை கச்சிதமாக எடுத்துரைக்கும் ஐந்து புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
2020 ஆண்டு பற்றி யாரிடம் கேட்டாலும், இது மிகவும் மோசமான ஆண்டு என்றே கூறுவர். சமூக வலைதள டிரெண்டுகளும் 2020 பாதிப்புகளை குறிக்கும் வகையிலேயே இருக்கின்றன.
இந்த ஆண்டு துவங்கியது முதல் உலகில் நடைபெறும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் இந்த ஆண்டு தான் மிகவும் மோசமானது என அனைவரையும் சொல்ல வைக்கிறது.
அந்த வகையில், 2020 ஆண்டில் அனைவரின் பொதுவான மன ஓட்டத்தை எடுத்துரைக்கும் ஐந்து புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள. எனினும், புதிய எமோஜிக்களை பெற 2021 வரை காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மொபைல் போன்களில் எமோஜிக்களை அனுமதிக்கும் யுனிகோட் கன்சார்டியம், ஐந்து புதிய எமோஜிக்களை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

புதிய எமோஜிக்கள்: ஃபேஸ் இன் கிளவுட் - முகம் மேகத்தில் இருப்பதை குறிக்கும், ஃபேஸ் எக்சேலிங் - பெருமூச்சு விடுதல், அமைதி போன்றவற்றை குறிக்கும், ஃபேஸ் வித் ஸ்பைரல் ஐஸ் - குழப்பம், பிரச்சினை, ஐயோ போன்றவற்றை குறிக்கும், ஹார்ட் ஆன் ஃபையர் - 2020 ஆண்டில் ஒருவர் நினைத்தது, நிறைவேறாததை குறிக்கும், மென்டிங் ஹார்ட்- சூழல்களில் முன்னேற்றம் ஏற்படுவதை குறிக்கின்றன.
இந்த எமோஜிக்கள் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப எந்த சூழலிலும் பயன்படுத்த முடியும். இவை 2020 ஆண்டிற்காக உருவாக்கப்படவில்லை. எனினும், இவை இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்வுகளை நினைவில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் தனது நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த மாடல் சர்வதேச வெளியீடு துவங்கி உள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை இதில் 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.
இத்துடன் 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் வசதி கொண்டிருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

நோக்கியா 8.3 5ஜி சிறப்பம்சங்கள்
- 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர்
- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
- 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- டூயல் 5ஜி, வைபை, ப்ளூடூத் 5.0
- யுஎஸ்பி டைப்-சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு 10
நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் போலார் நைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை 599 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 51,995 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை 649 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 55,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






