என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    போக்கோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்3 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்து உள்ளது.

    புதிய போக்கோ எக்ஸ்3 மாடலில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், லிக்விட் கூலிங் பிளஸ் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

     போக்கோ எக்ஸ்3

    போக்கோ எக்ஸ்3 சிறப்பம்சங்கள்

    - 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 எல்சிடி ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 ஜிபியு
    - 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 
    - டூயல் சிம்
    - 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.89
    - 13 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5எம்எம் ஆடியோ ஜாக்
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

    போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் ஷேடோ கிரே மற்றும் கோபால்ட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும், 6 ஜிபி +128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18,499 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.   
    வி நிறுவனம் ரூ. 405 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. புதிய சலுகைகளின் விலை ரூ. 355 முதல் துவங்குகிறது. இவற்றுடன் ஒரு வருடத்திற்கான ஜீ5 பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    வழக்கமாக ஒரு வருடத்திற்கான ஜீ5 பிரீமியம் சந்தா ரூ. 699 விலையில் வழங்கப்படுகிறது. இதில் 12 மொழிகளில் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் பல்வேறு தரவுகள் வழங்கப்படுகின்றன. வி சலுகைகளில் ஜீ5 சந்தா மட்டுமின்றி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையும் வழங்கப்படுகிறது.

     வி சலுகை

    வி ரூ. 355, ரூ. 405, ரூ. 696, ரூ. 795 மற்றும் ரூ. 2595 போன்ற சலுகைகளுடன் ஒரு வருடத்திற்கான ஜீ5 பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது. இவற்றில் ரூ. 355 மற்றும் ரூ. 405 சலுகைகளில் முறையே 50 ஜிபி மற்றும் 90 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு வருடத்திற்கான ஜீ5 பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இரு சலுகைகளுக்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

    வி ரூ. 595, ரூ. 795 மற்றும் ரூ. 2595 விலை சலுகைகளில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவற்றின் வேலிடிட்டி முறையே 56 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் ஆகும். 
    ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்வதில் பிரபலமான ஹைஃபைமேன் பிராண்டு குறைந்த விலையில் வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.


    இந்திய சந்தையில் ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்வதில் பெயர்பெற்ற ஹைஃபைமேன் நிறுவனம் புதிய இன் இயர் வயர்லெஸ் ஹெட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹெட்போன் BW200 எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.

    ஹைஃபைமேன் BW200 ஹெட்போனில் மேக்னெடிக் இயர்பட், ப்ளூடூத் 4.1, க்விக் சார்ஜ் வசதி, ஐபிஎக்ஸ்4 சான்று மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மிக குறைந்த எடை கொண்டிருக்கும் BW200 ஹெட்செட் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

     ஹைஃபைமேன் BW200

    இதில் இன்-லைன் கண்ட்ரோல், பில்ட் இன் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ப்ளூடூத் 4.1 மூலம் சீரான ஆடியோ அனுபவம் பெற முடியும். இந்த ஹெட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் க்விக் சார்ஜ் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் ஹைஃபைமேன் BW200 நெக் ப்ளூடூத் ஹெட்போன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இது அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் ஹெட்சோன் , ஆடியோஸ்டோர் போன்ற வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்ட நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் நார்சோ 20ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ, 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அன்ட் வைட் லென்ஸ், 2 எம்பி ரெட்ரோ லென்ஸ், 8 எம்பி செல்ஃபி கேமரா வங்கப்பட்டு உள்ளது. 

     நார்சோ 20ஏ

    ரியல்மி நார்சோ 20ஏ சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    - அட்ரினோ 610 ஜிபியு
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்இடி ஃபிளாஷ், EIS
    - 2 எம்பி B&W சென்சார்
    - 2 எம்பி ரெட்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி 
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் குளோரி சில்வர் மற்றும் விக்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8499 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட நார்சோ 20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் நார்சோ 20 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

     நார்சோ 20

    ரியல்மி நார்சோ 20 சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
     - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
    - மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு
    - 4 ஜிபி LPPDDR4x ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி eMMC 5.1மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
    - 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.1
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி

    ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் குளோரி சில்வர் மற்றும் விக்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 65 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,499 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து உள்ளது.


    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் மற்றும் கார்பன் ஃபைபர் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி B&W சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார்வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

     நார்சோ 20 ப்ரோ

    ரியல்மி நார்சோ 20 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு
     - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
    - மாலி-ஜி76 3EEMC4 ஜிபியு
    - 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி UFS 2.1 மெமரி
    - 8 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
    - 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா
    - 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.1
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 4500 எம்ஏஹெச் பேட்டரி

    ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வைட் நைட் மற்றும் பிளாக் நின்ஜா நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.


    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஐபோன் 12 சீரிஸ் குவால்காம் 5ஜி மோடெம் மற்றும் ஆன்டெனாக்களை கொண்டிருக்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், புதிய ஐபோன் 12 விலை விவரங்கள் இணையத்தில் வெளஇயாகி இருக்கின்றன. தற்சமயம் சீனாவில் இருந்து வெளியான தகவல்களின் படி புதிய ஐபோன்கள் விலை முந்தைய ஐபோன் 11 சீரிஸ் அறிமுக விலையை விட 50 டாலர்கள் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

     ஐபோன் 12

    ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் துவக்க விலை 750 டாலர்கள் வரை இருக்கும் என தெரிகிறது. முந்தைய ஐபோன் 11 மாடல் விலை 699 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய ஐபோன்களில் OLED டிஸ்ப்ளே, ஏ14 பயோனிக் சிப், குவால்காம் 5ஜி மோடெம் மற்றும் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முந்தைய தகவல்களின் படிஆப்பிள் புதிய ஐபோன்களுடன் சார்டர்கள் மற்றும் இயர்பாட்ஸ் உள்ளிட்டவற்றை வழங்காது என கூறப்படுகிறது.
    சியோமி நிறுவனம் 108 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை குறைந்த விலையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    சியோமி நிறுவனம் 64 எம்பி மற்றும் 108 எம்பி கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக கடந்த சில மாதங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும், இதுபற்றி அதிக தகவல்கள் வெளியாகாமல் இருந்தது.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி நிறுவனம் 108 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சியோமி நிறுவனம் எம்ஐ நோட் 10 ஸ்மார்ட்போனை 108 எம்பி கேமரா சென்சாருடன் அறிமுகம் செய்தது.

     எம்ஐ நோட் 10

    108 எம்பி கேமரா கொண்ட புதிய சியோமி ஸ்மார்ட்போன்கள் கௌகின் மற்றும் கௌகின் ப்ரோ எனும் குறியீட்டு பெயர்களில் உருவாகி இருக்கிறது. இதன் ப்ரோ வேரியண்ட் 108 எம்பி கேமரா கொண்டிருக்கும் என்றும் கௌகின் வேரியண்ட் 64 எம்பி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 108 எம்பி சென்சார் கொண்ட கௌகின் ப்ரோ சியோமியின் விலை குறைந்த 108 எம்பி ஸ்மார்ட்போனாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இவைதவிர புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றி அதிக தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில் சியோமி தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8டி 5ஜி மாடல் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. இது இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் வீடியோவில், பிரபல ஹாலிவுட் நடிகரும் ஒன்பிளஸ் விளம்பர தூதருமான ராபர்ட் டவுனி ஜூனியர் தோன்றுகிறார்.

     ஒன்பிளஸ் 8டி

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 8டி மாடலில் பிளாட் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. புதிய ஒன்பிளஸ் 8டி சீரிஸ் அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விரைவில் ஒன்பிளஸ் 8டி வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம். மேலும் முந்தைய மாடல்களை போன்றே புதிய ஒன்பிளஸ் 8டி சீரிஸ் மாடல்களும் அமேசான் வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை சசெய்யப்பட இருக்கிறது. 

    புதிய ஸ்மார்ட்போன்கள் அமேசான் மட்டுமின்றி ஒன்பிளஸ் வலைதளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் கிடைக்கும்.
    அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யும் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் திடீரென தனது முடிவை மாற்றி கொண்டார்.


    சீனாவின் டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் கையெழுத்திட்டார். 

    இந்த தடை உத்தரவின் படி டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும். அதனைத் தொடர்ந்து டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் ஆகஸ்ட் 20 முதல் தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்து இருந்தது. 

     டிக்டாக்

    இதற்கான ஆணையை அமெரிக்க வர்த்தகத்துறை வெளியிட்டு இருந்தது.  அதாவது எந்தவொரு ஆப் ஸ்டோரிலும் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என அமெரிக்க வர்த்தகத்துறை  குறிப்பிட்டு இருந்தது. 

    இந்நிலையில், முக்கிய திருப்பமாக டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை ஒருவாரத்திற்கு தள்ளிவைப்பதாக அமெரிக்க வர்த்தக்த்துறை தெரிவித்துள்ளது. 

    ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் டிக்டாக் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால், தடை தள்ளிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    ஆரக்கிள் நிறுவனத்துடன் பைட்டேன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால், அமெரிக்காவில் தடையில் இருந்து டிக்டாக் தப்பிக்கும் என தெரிகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்து உள்ளது. முன்தனாக ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடல்கள் அறிமுகமானதும், ஒன்பிளஸ் 7டி ப்ரோ மாடலின் விலை ரூ. 6 ஆயிரம் குறைக்கப்பட்டது.

    இந்நிலையில், ஒன்பிளஸ் 7டி ப்ரோ மாடலின் விலை மீண்டும் குறைக்கப்பட்டு இருக்கிறது. புதிய விலை குறைப்பின் படி ஒன்பிளஸ் 7டி ப்ரோ மாடலின் விலை ரூ. 43,999 என மாறி இருக்கிறது. அந்த வகையில் இந்த மாடல் விலை ரூ. 4 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது.

     ஒன்பிளஸ் 7டி ப்ரோ

    சமீபத்திய விலை குறைப்பு ஒன்பிளஸ் 7டி ப்ரோ 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வேரியண்ட்டிற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் / கிரெடிட் கார்டு இம்ஐ-க்களுக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்த சலுகையை சேர்க்கும் பட்சத்தில் ஒன்பிளஸ் 7டி ப்ரோ மாடலை ரூ. 40,999 விலையில் வாங்கிட முடியும். இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வாங்குவோருக்கு கார்பன்/சேன்ட்ஸ்டோன் கேஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

    குறைக்கப்பட்ட புதிய விலை ஒன்பிளஸ் மற்றும் அமேசான் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.
    ஒன்பிளஸ் நிறுவனம் தனது பட்ச் இசட் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஸ் இசட் மாடல் ஒன்பிளஸ் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போனின் குறைந்த விலை எடிஷனாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் ஒன்பிளஸ் 8டி சீரிஸ் மாடல்களுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.

    இதுதவிர ஒன்பிளஸ் பட்ஸ் இசட் மாடல் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், பெயருக்கு ஏற்றார்போல் இதன் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் இசட் பிராண்டிங் கொண்ட சாதனங்கள் விலையை குறைவாக நிர்ணயம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

     ஒன்பிளஸ் பட்ஸ் இசட்

    முந்தைய ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் மாடல் விலையும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டது. இது முதல் தலைமுறை ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்களின் விலையை விட குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் மாடல் பற்றிய விவரங்கள் ஆக்சிஜன் ஒஎஸ் 11 குறியீடுகளில் லீக் ஆகி இருந்தது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் 8K 960fps தர வீடியோ ரெக்கார்டிங் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும், புதிய இயர்போன் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.
    ×