என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    இந்தியாவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுக்கான விலை திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.

    டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா கட்டணம் ரூ. 365 ஆக மாற்றப்பட்டு உள்ளது. முன்னதாக இதன் விலை ரூ, 399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    புதிய விலை குறைப்பு கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியன் பிரிமீயர் லீக் 2020 (ஐபிஎல்) தொடர் இன்று (செப்டம்பர் 19) துவங்க இருக்கிறது. இந்நிலையில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி

    2020 ஐபிஎல் கிரிகெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஸ்டிரீமிங் பார்ட்னராக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இருக்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் 2020 போட்டிகளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நேரலையில் ஸ்டிரீமிங் செய்ய இருக்கிறது.

    விசா அல்லது மாஸ்டர்கார்டு கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை ரூ. 365 எனும் விலையில் பெற முடியும். கிரெடிட் கார்டு இல்லாதவர்கள் டெபிட் கார்டு, யுபிஐ ஐடி, பேடிஎம் அல்லது நெட்பேங்கிங் போன்ற சேவைகளை பயன்படுத்தி ரூ. 399 விலையில் பெற முடியும்.
    சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் மட்டும் விற்பனைக்கு வந்தது. இதன் விலை ரூ. 77,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்திய விற்பனை துவங்கி ஒரே மாதத்திற்குள் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 20 மாடலின் விலையை தற்காலிகமாக குறைப்பதாக அறிவித்து உள்ளது. சாம்சங் டேஸ் விற்பனையில் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் ரூ. 68,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

     கேலக்ஸி நோட் 20

    அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 9 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டு பயன்படுத்துவோருக்கு ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் தொகையை சேர்க்கும் பட்சத்தில் கேலக்ஸி நோட் 20 மாடலை ரூ. 62,999 விலையில் வாங்கிடலாம்.

    புதிய தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகை செப்டம்பர் 23 ஆம் தேதி வரை வழங்கப்படும் என சாம்சங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
    அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.


    அமெரிக்காவில் சீனாவை பூர்வீகமாக கொண்டு இயங்கும் டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட செயலிகள் அந்நாட்டு பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தை முன்வைத்து இவற்றை தடை செய்ய டிரம்ப் உத்தரவிட்டார்.

    எனினும், டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவேண்டும் அல்லது டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் ஆகிய நிறுவனங்கள் பைட்-டேன்ஸ் நிறுவனத்திடம் இருந்து டிக்டாக் செயலியை வாங்குவதற்கான போட்டியில் மும்முரமாக இருந்தன. இறுதியில், ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக் செயலியுடன் கைகோர்த்தது.

     டொனால்ட் டிரம்ப்

    எனினும், இந்த ஒப்பந்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் டிக் டாக், வி சாட் ஆகிய செயலிகளை பதிவிறக்கம் செய்ய அமெரிக்காவில் தடை விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.  இரு செயலிகளும் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி டிக்டாக் செயலியின் பெரும்பாலான பங்கு பைட்-டேன்ஸ் நிறுவனத்திடமே இருப்பதாக கூறப்படுகிறது. ஆரக்கிள் நிறுவனத்திடம் குறைந்தபட்ச பங்கு மட்டுமே உள்ளதாகவும் தெரிகிறது. 
    சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன் பிரீமியம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சோனி நிறுவனம் இந்திய சந்தையில் நான்காம் தலைமுறை WH-1000XM4 வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது WH-1000XM3 மாடலில் வழங்கப்பட்ட தொழில்நுட்பங்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    மேலும் இதில் ஆன்-இயர் டிடெக்ஷன், பல்வேறு சாதனங்களுடன் இணையும் வசதி, அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல், சிறப்பான நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. டூயல் நாய்ஸ் சென்சார் மூலம் மேம்பட்ட நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படுகிறது.

     சோனி ஹெட்போன்

    இதன் ஆடியோ தரத்தை மேம்படுத்த புதிய எட்ஜ்-ஏஐ சார்ந்த டிஎஸ்இஇ எக்ஸ்ட்ரீம் வசதி மற்றும் 360 ரியாலிட்டி ஆடியோ வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    சோனி WH-1000XM4 அம்சங்கள்

    - டிஜிட்டல் நாய்ஸ் கேன்சலிங் வசதி
    - வாய்ஸ் அசிஸ்டண்ட்- அலெக்சா, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி
    - சீரான ஆடியோ அனுபவம் வழங்க அதிநவீன தொழில்நுட்பம்
    - பிராக்சிமிட்டி சென்சார், 2 அக்செல்லரேஷன் சென்சார்கள் 
    - குவிக் அட்டென்ஷன் மோட்
    - ஸ்மார்ட் லிசெனிங் வசதி
    - நீண்ட நேர பேட்டரி பேக்கப்

    சோனி WH-1000XM4 ஹெட்போன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 29,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான், சோனி சென்டர் மற்றும் சோனி பிரத்யேக ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    சவுண்ட்கோர் நிறுவனம் இந்தியாவில் புதிய நெக்பேண்ட் வயர்லெஸ் இயர்போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

    சவுண்ட்கோர் பை ஆன்கர் நிறுவனம் இந்திய சந்தையில் லைஃப் யு2 நெக்பேண்ட் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த இயர்போன் யுஎஸ்பி சி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ப்ளூடூத் 5 மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.

    மிக குறைந்த எடை கொண்டிருக்கும் புதிய வயர்லெஸ் இயர்போன் சிலிகான் நெக்பேண்ட் மற்றும் டைட்டானியம் அலாய் ஸ்டீல் கோர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் 10 என்எம் ஒவர்சைஸ் செய்யப்பட்ட டைனமிக் டிரைவர்களை கொண்டு இயங்குகிறது.

     சவுண்ட்கோர் லைஃப் யு2

    இது ஆடியோ அனுபவத்தை மேம்படுத்தி, மிக துல்லியமான கிளாரிட்டி மற்றும் பேஸ் வழங்கும் என சவுண்ட்கோர் தெரிவித்து உள்ளது. இந்த இயர்போன் ஐபிஎக்ஸ்7 சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் சிவிசி 8.0 நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    ப்ளூடூத் 5.0 வசதியுடன் வரும் இந்த இயர்போன் 20 மீட்டர் ரேன்ஜ் கொண்டிருக்கிறது. மேலும் இதில் ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களை இணைக்கும் வசதியுடன் வருகிறது. இந்த இயர்போன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

    இந்தியாவில் சவுண்ட்கோர் லைஃப் யு2 ப்ளூடூத் மாடல் விலை ரூ. 2899 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய ஆன்லைன் ஸ்டோர் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் சொந்தமாக ஆன்லைன் ஸ்டோரை செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கும் பிரீமியம் அனுபவம் புதிய ஆன்லைன் தளத்திலும் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    ஆன்லைன் ஆப்பிள் வல்லுநர்கள் பயனர்கள் எதிர்பார்க்கும் வகையில் மேக் சாதனங்களை கான்ஃபிகர் செய்ய உதவுவர். பயனர்கள் புதிய சாதனங்கள் பற்றிய சந்தேகங்கள், உதவி உள்ளிட்டவைகளை கேட்டறிந்து கொள்ள முடியும். துவக்கத்தில் இந்த சேவை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

     ஆப்பிள்

    ஆன்லைன் ஸ்டோரில் பிரத்யேக நிதி சலுகை, மாணவர்களுக்கு சிறப்பு விலை, அக்சஸரீக்கள் மற்றும் ஆப்பிள் கேர் பிளஸ் உள்ளிட்டவைகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அக்டோபர் மாத வாக்கில் ஆப்பிள் செஷன்களை நடத்த ஆப்பிள் திட்டமிட்டு இருக்கிறது. இதில் புகைப்பட கலை மற்றும் மியூசிக் பிரிவுகளில் பிரத்யேக வகுப்புகளை வல்லுநர்கள் நடத்த இருக்கின்றனர்.   

    ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆர்டர்களுக்கும் காண்டாக்ட்லெஸ் டெலிவரி செய்யப்படுகிறது. இதற்கான கட்டண முறைகள் - கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இஎம்ஐ, ரூபே, யுபிஐ, நெட் பேங்கிங் மற்றும் டெலிவரியின் போது கிரெடிட் கார்டு உள்ளிட்டவை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கும் புதிய சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ ரூ. 598 விலையில் புதிய பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சேவைக்கான ஒரு வருட சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. 

    ஐபிஎல் 2020 தொடரை முன்னிட்டு ஏற்கனவே பல சலுகைகளில் ஜியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சேவைக்கான ஒரு வருட சந்தா வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் ரூ. 598 சலுகை தற்சமயம் இணைந்துள்ளது. 

     கோப்புப்படம்

    ஜியோ ரூ. 598 சலுகை 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ அல்லாத எண்களுக்கு 2000 நிமிடங்கள் வாய்ஸ் கால், ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய சலுகை தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவை கடந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 64 கேபியாக குறைக்கப்படுகிறது. இந்த சலுகையில் ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது.
    64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஃப்41 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    தற்போதைய தகவல்களின்படி புதிய ஸ்மார்ட்போனில் FHD+ ஸ்கிரீன், எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், பின்புறம் கைரேகை சென்சார், இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

    புதிய கேலக்ஸி எஃப்41 மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, 32 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் புதிய கேமரா அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இதில் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

     கேலக்ஸி ஏ

    சாம்சங் கேலக்ஸி எஃப்41 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
    - மாலி-ஜி72எம்பி3 ஜிபியு
    - 6 ஜிபி LPDDR4x ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 64 எம்பி பிரைமரி கேமரா
    - அல்ட்ரா வைடு + டெப்த் / மேக்ரோ சென்சார்
    - 32 எம்பி செல்ஃபி கேமரா
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி எஃப்41 ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது. இதன் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
    புதுடெல்லி:

    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் இன்று அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கின்றன. இத்தகைய ஊடகங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் ஏராளம். 

    அப்படி சமூக ஊடகங்களில் ஒன்றிப்போனவர்களுக்கு, அவற்றின் முடக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடும். அப்படி ஒரு நிகழ்வு இன்று அதிகாலை நடந்துள்ளது.

    இந்நிலையில், உலகம் முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் முடங்கின. 

    இந்தியா உள்பட ஆசிய நாடுகளிலும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளில் ஒரே நேரத்தில் இந்த செயலிழப்பு நிகழ்ந்துள்ளது.  

    இந்த நேரத்தில் வலைத்தள பயனாளர்களால் தங்கள் கணக்குகளை பயன்படுத்த முடியவில்லை. இதனால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. 

    எனினும் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு இந்த முடக்கம் படிப்படியாக சீரடைந்தது. அதன்பிறகே சமூக வலைதள பயனாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் 14 மற்றும் ஐபேட் ஒஎஸ் 14 இந்தியாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐஒஎஸ் 14 மற்றும் ஐபேட் ஒஎஸ் 14 இயங்குதளங்களை வெளியிடுகிறது. முன்னதாக ஐஒஎஸ் 14 அறிமுகம் செய்யப்பட்டு, இதுவரை பீட்டா வெர்ஷன்களில் வெளியிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய அப்டேட் ஏற்கனவே டவுன்லோட் ஆகி, பயனர்களை இன்ஸ்டால் செய்ய கோருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு இன்ஸ்டால் ஆகதவர்கள் தங்களது சாதனத்தின் செட்டிங்ஸ் பகுதியில் சாப்ட்வேர் அப்டேட் பகுதிக்கு சென்று புதிய இயங்குதளத்தை டவுன்லோட் செய்யலாம்.

     ஐஒஎஸ் 14

    ஐபோன் எஸ்இ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களுக்கு புது அப்டேட் 3.36 ஜிபி அளவு கொண்டுள்ளது. ஐஒஎஸ் 14 வெர்ஷனை டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்த பின் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் பலவிதங்களில் மாற்றப்பட்டு இருப்பதை கவனிக்க முடியும்.

    புதிய ஐஒஎஸ் 14 அப்டேட் ஐபோன் 6எஸ் சீரிஸ், ஐபோன் 7 சீரிஸ், ஐபோன் 8 சீரிஸ், ஐபோன் எக்ஸ், ஐபோன் எக்ஸ்எஸ் சீரிஸ், ஐபோன் 11 சீரிஸ், ஐபோன் எஸ்இ (1&2 மாடல்கள்) உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்படுகிறது. 

    இதேபோன்று ஐபேட் ஒஎஸ் 14 ஐபேட் ஏர் 2 மற்றும் புதிய ஐபேட் ஏர், ஐபேட் மினி 4, ஐபேட் மினி 5, ஐபேட் 5th ஜென், ஐபேட் ப்ரோ மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.
    போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    போக்கோ பிராண்டு தனது போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மாடலில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், பன்ச்-ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், லிக்விட் கூலிங் 1.0பிளஸ் மற்றும் காப்பர் ஹீட் பைப், டூயல் கிராஃபைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     போக்கோ எக்ஸ்3

    ஆண்ட்ராய்டு 10 சார்ந்த எம்ஐயுஐ 12 கொண்டிருக்கும் போக்கோ எக்ஸ்3 மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் கேமரா மற்றும் 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் போக்கோ எக்ஸ்3 இந்திய வேரியண்ட் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
    டொஷிபா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.


    ஜப்பானை சேர்ந்த பிரபல பிராண்டான டொஷிபா இந்திய சந்தையில் ஏழு புதிய டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடலில் துவங்கி 65 இன்ச் 4கே யுஹெச்டி ஸ்மார்ட் டிவிக்கள் அடங்கும்.

    இவை பிரீமியம் யுஹெச்டி யு79 சீரிஸ், யுஹெச்டி யு50 சீரிஸ் மற்றும் ஸ்மார்ட் எல்50 சீரிஸ் என மூன்றுவித சீரிஸ்களில் கிடைக்கின்றன. இதன் யுஹெச்டி டிவிக்களில் டொஷிபாவின் செவோ 4கே ஹெச்டிஆர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை டால்பி விஷன் மற்றும் இதர ஹெச்டிஆர் ஃபார்மேட்களை சப்போர்ட் செய்கின்றன.

     டொஷிபா ஸ்மார்ட் டிவி

    மேலும் இவற்றில் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம், அல்ட்ரா டிம்மிங் தொழில்நுட்பம் மற்றும் ஏஎம்ஆர் பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவிக்கள் விடா ஒஎஸ் கொண்டு இயங்குகின்றன. இத்துடன் இவற்றில் பில்ட் இன் அலெக்சா வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    யு79 சீரிஸ் மாடலில் ஃபுல் அரே லோக்கர் டிம்மிங் டிவி தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. எல்50 சீரிஸ் மாடலில் ஏடிஎஸ் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி சிவோ என்ஜின் பிரீமியம், விடா ஒஎஸ் மற்றும் ஏஎம்ஆர் பிளஸ் தொழில்நுட்பம் உள்ளிட்டவை கொண்டுிருக்கிறது.

    இந்தியாவில் 65யு7980 யுஹெச்டி டிவி விலை ரூ. 66,990 என்றும் 55யு7980 யுஹெச்டி டிவி விலை ரூ. 46990 என்றும் 55யு5050 டிவி விலை ரூ. 36,990 என்பும் 50யு5050 டிவி விலை ரூ. 32,990 என்றும் 43யு5050 டிவி விலை ரூ. 27,990 என்றும் 43எல்5050 டிவி விலை ரூ. 22,490 மற்றும் 32எல்5050 மாடல் விலை ரூ. 12,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    அனைத்து டிவி மாடல்களும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அமேசான், ப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் டாடா க்ளிக் உள்ளிட்டவைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. 
    ×