என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சியோமியின் ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் டிராப் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆரா 360 டிசைன் கொண்டிருக்கும் ரெட்மி 9ஐ 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

     ரெட்மி 9ஐ

    ரெட்மி 9ஐ சிறப்பம்சங்கள்

    - 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 ஐபிஎஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன்
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
    - IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
    - 4 ஜிபி LPDDR4x ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - ஸ்பிலாஷ் ப்ரூஃப்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி 
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், சீ புளூ மற்றும் நேச்சர் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8299 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9299 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    போக்கோ பிராண்டின் புதிய எம்2 ஸ்மார்ட்போன் முதல் விற்பனையில் லட்சக்கணக்கான யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
     

    போக்கோ பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் முதல் விற்பனை நேற்று ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 1,30,000 யூனிட்கள் விற்பனையானதாக போக்கோ தெரிவித்து இருக்கிறது. 

    இந்தியாவில் போக்கோ எம்2 துவக்க விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய போக்கோ எம்2 அடுத்த விற்பனை செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

     போக்கோ எம்2

    போக்கோ எம்2 சிறப்பம்சங்கள்

    - 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
    - ARM மாலி-G52 2EEMC2 ஜிபியு
    - 6 ஜிபி LPPDDR4x ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2 
    - 8 எம்பி 118.2° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    போக்கோ எம்2 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 12,499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிட்ச் பிளாக், ஸ்லேட் புளூ மற்றும் ப்ரிக் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.
    டிரான்சிஷன் நிறுவனம் இந்திய சந்தையில் இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.

    டிரான்சிஷன் நிறுவனம் இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம்  செய்தது. புதிய ஸ்மார்ட்போனில்  6.95 இன்ச் ஹெச்டி பிளஸ் பின்ஹோல் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், லோ-லைட் வீடியோ கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் சக்தியூட்டப்படுகிறது.

     இன்பினிக்ஸ் நோட் 7

    இன்பினிக்ஸ் நோட் 7 சிறப்பம்சங்கள்

    - 6.95 இன்ச் 1640x720 பிக்சல் ஹெச்டி+ 20.5:9 பின்ஹோல் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
    - ஏஆர்எம் மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - எக்ஸ்ஒஎஸ் 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 2 எம்பி டெப்த் கேமரா, f/1.8
    - லோ லைட் வீடியோ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
    - 16 எம்பி செல்பி கேமரா
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் பாரஸ்ட் கிரீன், பொலிவியா புளூ மற்றும் ஏத்தர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சுழலும் திரை கொண்ட எல்ஜி விங் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    எல்ஜி நிறுவனம் இரட்டை ஸ்கிரீன் கொண்ட விங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் P-OLED ஃபுல்விஷன் ஸ்கிரீன், 3.9 இன்ச் FHD+ இரண்டாவது ஸ்கிரீன் சுழலும் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதனால் இரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்களையும் பயன்படுத்த முடியும்.

    இரண்டு ஸ்கிரீன் கொண்ட விங் ஸ்மார்ட்போன் உறுதித்தன்மையை எல்ஜி சுமார் 2 லட்சம் முறை சோதனை செய்ததாக தெரிவித்து இருக்கிறது. இதன் மல்டி ஆப் மோட் கொண்டு இரு செயலிகளை ஒவ்வொரு திரையில் ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியும்.

     எல்ஜி விங்

    எல்ஜி விங் சிறப்பம்சங்கள்

    - 6.8 இன்ச் 2440×1080 பிக்சல் FHD+ 20.5: 9 P-OLED டிஸ்ப்ளே
    - 3.9 இன்ச் 1240x1080 பிக்சல் 1.15:1 G-OLED இரண்டாவது ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
    - அட்ரினோ 620 ஜிபியு
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10
    - 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, OIS
    - 13 எம்பி 117° அல்ட்ரா வைடு லென்ஸ், f/1.9
    - 12 எம்பி 120° அல்ட்ரா வைடு கிம்பல் மோட் கேமரா, f/2.2
    - 32 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா, f/1.9
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ 
    - 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப்-சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி
    - குவிக் சார்ஜ் 4.0
    - 25 ஃபாஸ்ட் சார்ஜிங்

    எல்ஜி விங் ஸ்மார்ட்போன் அரோரா கிரே மற்றும் இல்யூஷன் ஸ்கை நிறங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக இதன் விற்பனை தென் கொரியாவில் துவங்கி அதன் பின் அக்டோபர் மாத வாக்கில் வட கொரியா மற்றும் ஐரோப்பாவில் வெளியாகிறது.
    வி நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை ரூ. 351 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    வோடபோன் ஐடியாவின் ஒருங்கிணைந்த பிராண்டு வி புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 351 விலையில் கிடைக்கும் புதிய சலுகை வொர்க் ஃபிரம் ஹோம் பிரிவில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இத்துடன் ரூ. 29 சலுகையை மேலும் சில வட்டாரங்களில் வழங்குகிறது.

    பலன்களை பொருத்தவரை புதிய ரூ. 351 பிரீபெயிட் சலுகையில் 100 ஜிபி அதிவேக டேட்டா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதைவிட குறைந்த விலையில் கிடைக்கும் ரூ. 251 சலுகையில் 50 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    புதிய சலுகை வொர்க் ஃபிரம் ஹோம் பிரிவில் கிடைப்பதால், இதில் வாய்ஸ் கால் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்த சலுகை ஆட்-ஆன் பேக் போன்று வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த சலுகை ஆந்திர பிரதேசம், டெல்லி, குஜராத், கேரளா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற வட்டாரங்களில் வழங்கப்படுகிறது.

    இதே சலுகை விரைவில் மற்ற வட்டாரங்களிலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வி ரூ. 29 விலை சலுகையில் 100 எம்பி டேட்டா, ரூ.15 டாக்டைம் உள்ளிட்டவை 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வாய்ஸ் கால் கட்டணம் நொடிக்கு ரூ. 2.5 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    டிக்டாக் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட புது தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    டிக்டாக் அமெரிக்க உரிமத்தை பெறுவதில் ஆரக்கிள் நிறுவனம் முன்னேற்றம் கண்டுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக டிக்டாக் உள்லிட்ட சீன செயலிகள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தங்களை உளவு பார்ப்பதாகவும் கூறி பைட்-டேன்ஸ் நிறுவனம் தங்கள் அமெரிக்க செயல்பாடுகளை 90 நாட்களுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என டிரம்ப் காலக்கெடு விதித்து இருந்தார்.

     டிக்டாக்

    இரு நிறுவனங்கள் இடைய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் கிடைத்து இருக்கிறது. விரைவில் இதுபற்றிய முடிவு எட்டப்படும் என டிரம்ப் தெரிவித்தார். ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் டிக்டாக்கின் நம்பத்தகுந்த கூட்டு நிறுவனமாக ஆரக்கிள் மாறும். 

    இதுபற்றிய ஒப்ந்த விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், டிக்டாக்கின் சர்வதேச வியாபார பிரிவு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் ஆரக்கிள் நிறுவனம் மட்டுமின்றி பல்வேறு அமெரிக்க முதலீட்டாளர்களும் முதலீடு செய்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் செப்டம்பர் 22 ஆம் தேதி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. இந்த அறிமுக நிகழ்வு ஆன்லைனில் நடைபெற இருப்பதாக ஹெச்எம்டி குளோபல் தெரிவித்து உள்ளது. அந்த வகையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் யூடியூப் தளத்தில் நேரலை செய்யப்பட இருக்கிறது.

    இந்த நிகழ்வில் நோக்கியா 8.3 5ஜி மாடலின் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மார்ச் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

     ஹெச்எம்டி குளோபல்

    இத்துடன் புதிய நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன் 'நோ டைம் டு டை' ஹாலிவுட் திரைப்படத்தில் காணப்பட்டது. இந்த மாடலும் இதே நிகழ்வில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. நோக்கியா 7.3 பற்றிய விவரங்கள் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

    இவைதவிர நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்குகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் டைம் ஃபிளைஸ் நிகழ்வில் வெளியான அசத்தல் அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் டைம் ஃபிளைஸ் நிகழ்வு பெயருக்கு ஏற்றார்போல் வேகமாக நடந்துமுடிந்தது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஐபேட் 8th ஜென், மேம்பட்ட ஐபேட் ஏர், ஆப்பிள் ஒன் மற்றும் ஃபிட்னஸ் பிளஸ் என பல்வேறு சாதனங்கள் மற்றும் சேவைகள் பற்றி அறிவித்தது. 

     ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 முக்கிய அம்சங்கள்

    - எஸ்6 பிராசஸர்
    - இரத்த காற்றோட்ட அளவை டிராக் செய்யும் வசதி
    - சீரிஸ் 3 மாடலை இருமடங்கு வேகம்
    - ஸ்விம் ப்ரூஃப் வசதி
    - சோலோ லூப், பிரெயிடட் சோலோ லூப் மற்றும் லெதர் லின்க் ஸ்டிராப்
    - புதிய வாட்ச் ஃபேஸ்கள்
    - ஃபேமிலி செட்டப்
    - கோல்டு, கிராஃபைட், புளூ மற்றும் பிராடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது 
    - இந்திய விலை ரூ. 40,990 முதல் துவங்குகிறது

     ஆப்பிள் வாட்ச் எஸ்இ

    ஆப்பிள் வாட்ச் எஸ்இ முக்கிய அம்சங்கள்

    - எஸ்5 பிராசஸர்
    - ஃபால் டிடெக்ஷன்
    - ஃபேமிலி செட்டப்
    - புதிய வாட்ச் ஃபேஸ்கள்
    - ஸ்விம் ப்ரூஃப்
    - வாட்ச் சீரிஸ் 3 மாடலை விட இருமடங்கு வேகம்
    - புதிய பேண்ட்கள்
    - இந்திய விலை ரூ. 29,990 முதல் துவங்குகிறது

     ஐபேட்

    ஐபேட் 8th ஜென் முக்கிய அம்சங்கள்

    - 10.2 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே
    - ஆப்பிள் ஏ12 பயோனிக் பிராசஸர்
    - 40 சதவீதம் வேகமான சிபியு
    - இருமடங்கு வேகமான கிராஃபிக்ஸ்
    - ஐஒஎஸ்14
    - ஆப்பிள் பென்சில் வசதி
    - இந்தியாவில் இதன் விலை ரூ. 29,990 முதல் துவங்குகிறது

     ஐபேட் ஏர்

    ஐபேட் ஏர் முக்கிய அம்சங்கள்:

    - 10.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
    - ஆப்பிள் ஏ14 பிராசஸர்
    - 40 சதவீதம் வேகமான சிபியு
    - யுஎஸ்பி டைப் சி (20 வாட் சார்ஜர்)
    - வைபை 6
    - 12 எம்பி பிரைமரி கேமரா
    - 7 எம்பி ஃபேஸ்டைம் கேமரா
    - லேண்ட்ஸ்கேப் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
    - டச் ஐடி 
    - 10 மணி நேர பேட்டரி
    - இந்தியாவில் இதன் விலை ரூ. 54,990 முதல் துவங்குகிறது

    புதிய சாதனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஒன் சந்தா முறை மற்றும் ஃபிட்னஸ் பிளஸ் செயலியை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை தவிர மிகமுக்கிய ஒஎஸ் அப்டேட்களை வெளியிட இருப்பதாகவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அந்த வகையில் பல்வேறு புது அம்சங்கள் கொண்ட ஆப்பிள் ஒஎஸ் வெளியாக இருக்கிறது. 

    ஆப்பிள் நிகழ்வு பற்றிய தமிழ் வீடியோவை கீழே காணலாம்..,


    ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 6 மாடலுடன் புதிதாக ஃபிட்னஸ் பிளஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் டைம் ஃபிளைஸ் நிகழ்வில் புதிய வாட்ச் சீரிஸ் 6 மாடலுடன் ஃபிட்னஸ் பிளஸ் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஃபிட்னஸ் பிளஸ் ஆப்பிள் வாட்ச் மாடல்களுடன் இணைந்து இயங்குகிறது.

    இது ஆப்பிள் பயனர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் நோக்கில் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இது உடற்பயிற்சி சார்ந்த அம்சங்கள், பரிந்துரைகள், பயனர் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய விவரங்களை துல்லியமாக வழங்குகிறது.

     ஆப்பிள் ஃபிட்னஸ் பிளஸ்

    ஃபிட்னஸ் பிளஸ் சேவை பயனர்கள் தங்களது வாட்ச், ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் டிவி போன்ற சாதனங்களில் உடற்பயிற்சிகளை தேர்வு செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. இது உடற்பயிற்சியின் போது பயனர் உடலில் ஏற்படும் மாற்றங்களை கணக்கிட்டு தெரிவிக்கிறது.

    ஆப்பிள் புதிய ஃபிட்னஸ் பிளஸ் சேவைக்கான கட்டணம் மாதம் 9.99 டாலர்கள் என்றும் வருடாந்திர கட்டணம் 79.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ஆப்பிள் வாட்ச் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஆப்பிள் ஒன் சந்தா முறையை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் தனது டைம் ஃபிளைஸ் நிகழ்வில் புதிய வாட்ச் சீரிஸ் 6 மற்றும் புதிய ஐபேட் மாடல்களுடன் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஒன் சந்தா முறையை அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஆப்பிள் சேவைகளை ஒன்றிணைத்து ஒரே சந்தா விலையில் வழங்குகிறது.

    அதன்படி ஆப்பிள் ஒன் சேவை ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ், 50ஜிபி ஐகிளவுட் மற்றும் ஆப்பிள் ஆர்கேட் போன்ற சேவைகளை ஒரே கட்டணத்தில் வழங்குகிறது. இதற்கான மாத சந்தா இந்திய மதிப்பில் ரூ. 195 ஆகும்.

    ஆப்பிள் ஒன்

    இதே போன்று குடும்பத்தினருக்கான சேவையில் ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ், 200ஜிபி ஐகிளவுட் மற்றும் ஆப்பிள் ஆர்கேட் போன்ற சேவைகளை மாதம் ரூ. 365 கட்டணத்தில் வழங்குகிறது. இந்த சந்தாவை அதிகபட்சம் குடும்பத்தினரில் ஆறு பேர் பயன்படுத்தலாம்.

    இத்துடன் பிரீமியர் சந்தாவில் ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ், 2டிபி ஐகிளவுட் ஸ்டோரேஜ், ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் நியூஸ் பிளஸ், ஆப்பிள் ஃபிட்னஸ் பிளஸ் போன்ற சேவைகளை பெற முடியும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் மேம்பட்ட ஐபேட் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் புதிய ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்ட ஐபேட் ஏர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. ஏ14 பயோனிக் பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள நியூரல் என்ஜின் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை சீராக இயக்கும் திறன் கொண்டது.

    இதன் முன்புறம் 7 எம்பி ஃபேஸ்டைம் ஹெச்டி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் புதிய ஐபேட் ஏர் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை மிக துல்லியமாக எடுக்க முடியும். இதன் டாப் பட்டனில் டச் ஐடி வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ஐபேட் ஏர்

    புதிய ஐபேட் ஏர் 10.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, ஆல் ஸ்கிரீன் டிசைன், யுஎஸ்பி டைப் சி வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் பென்சில், மேஜிக் கீபோர்டு சாதனங்களுடன் இயக்கும் வசதி கொண்டுள்ளது. இது ஐபேட் ஒஎஸ்14 இயங்குதளம் கொண்டுள்ளது.

    ஆப்பிள் புதிய ஐபேட் ஏர் மாடல் இதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபேட் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இது ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஐபேட் ஏர் விலை 599 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 44088 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் 8th ஜென் மாடலை அறிமுகம் செய்தது. இதில் மேம்பட்ட பிராசஸர், அதிரடி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் டைம் ஃபிளைஸ் நிகழ்வில் ஐபேட் 8th ஜென் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2019 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் ஓவர்கிளாக் செய்யப்பட்ட ஆப்பிள் ஏ12 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது  முந்தைய பிராசஸரை விட 40 சதவீதம் சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     ஐபேட்

    இத்துடன் இது முன்பை விட அதிகளவு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இவைதவிர மேம்பட்ட கேமரா, ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. ஆப்பிள் பென்சில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ஐபேட் ஐபேட்எஸ் 14 தளத்துடன் கிடைக்கிறது.

    புதிய ஐபேட் 10.2 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதன் விலை வாடிக்கையாளர்களுக்கு 399 டாலர்கள் என்றும் மாணவர்களுக்கு 299 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    ×