என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச் சீரிஸ் 6 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் தனது டைம் ஃபிளைஸ் நிகழ்வில் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வாட்ச் மாடலில் இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை கணக்கிடும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 15 நொடிகளில் இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை கணக்கிட்டு தெரிவிக்கும் திறன் கொண்டுள்ளது.
இதற்கென வாட்ச் மாடலில் உள்ள சென்சார்கள் மற்றும் சிவப்பு நிற மின்விளக்குகள் பயன்படுத்தப்படுவதாக ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை காண்பிக்க பிரத்யேக செயலியை ஆப்பிள் வாட்ச் கொண்டுள்ளது.
புதிய வாட்ச் மாடலில் உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை மிகத்துல்லியமாக வழங்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு மருத்துவ குழுமங்களுடன் இணைந்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலில் எஸ்6 ரக பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இது முந்தைய பிராசஸரை விட வேகமாக இருப்பதுடன் பல்வேறு அதிநவீன அம்சங்களை வழங்குகிறது. இத்துடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் முன்பைவிட மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய வாட்ச் முன்பை விட அதிக வாட்ச் ஃபேஸ்களை கொண்டுள்ளது.
புதிய சீரிஸ் 6 மாடலுடன் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் எஸ்இ மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் எஸ்இ மாடலில் எஸ்5 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
சர்வதேச சந்தையில் புதிய ஆப்பிள் வாட்ச் புளூ அலுமினியம், நியூ கிராஃபைட் மற்றும் பிராடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கென பல்வேறு பிரத்யேக பேண்ட் மற்றும் ஸ்டிராப்களில் கிடைக்கிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலின் விலை 399 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 29367 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல் துவக்க விலை 279 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 20535 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
டிக்டாக் நிறுவனத்துக்கான அமெரிக்க உரிமத்தை பெற ஆரக்கிள் நிறுவனம் அரசுக்கு விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிக்டாக் உள்லிட்ட சீன செயலிகள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தங்களை உளவு பார்ப்பதாகவும் கூற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பைட்-டேன்ஸ் நிறுவனம் தங்கள் அமெரிக்க செயல்பாடுகளை 90 நாட்களுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்ற காலக்கெடு விதித்து இருந்தார்.
செப்டம்பர் 15-ந் தேதிக்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும். அல்லது டிக்-டாக் செயலிக்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் உத்தரவிட்டார்.
இதையடுத்து டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டை வாங்க பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் நிறுவனங்கள் போட்டி போட்டன.

இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முயற்சி தோல்வி அடைந்தது. அந்த நிறுவனத்தை பைட்டேன்ஸ் நிறுவனம் நிராகரித்தது. இதையடுத்து டிக்டாக் செயலியை வாங்குவதற்கான முயற்சியில் ஆரக்கிள் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. மேலும் டிக்டாக் செயலியை அந்த நிறுவனம் வாங்கி விட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில் டிக்டாக் செயலியை வாங்க ஆரக்கிள் நிறுவனம், அமெரிக்க அரசுக்கு விண்ணப்பத்தை அனுப்பி உள்ளது. இதை அமெரிக்க அரசும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி நிறுவனம் நார்சோ 20 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. ரியல்மி நார்சோ 20, நார்சோ 20 ப்ரோ மற்றும் நார்சோ 20ஏ என மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது. அறிமுக நிகழ்வு செப்டம்பர் 21 மதியம் 12.30 மணிக்கு துவங்குகிறது. நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் வழங்கப்பட இருக்கிறது.

புதிய டீசர்களின் படி மூன்று மாடல்களில் ஒன்று மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது, மற்ற இரு மாடல்களில் மாடல்களில் நான்கு கேமரா சென்சார்கள் செங்குத்தாகவும், சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யூல் கொண்டிருக்கிறது. இத்துடன் இரு மாடல்களின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
இதன் ப்ரோ மாடலில் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய போன்களில் மீடியாடெக் சிப்செட்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தின் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையில் விரைவில் அமிதாப் பச்சன் குரல் அறிமுகமாகிறது.
இந்தியாவில் முன்னணி இ காமர்ஸ் நிறுவனமாக விளங்கும் அமேசான் இந்தியா, அமிதாப் பச்சனுடன் இணைந்து அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது.
அதன்படி அலெக்சா சேவையில் அமிதாப் பச்சன் குரல் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்கென அமிதாப் பச்சன் அமேசான் நிறுவனத்துடன் பணியாற்றுகிறார். அமிதாப் பச்சன் குரல் மட்டுமின்றி அவரது ஜோக்குகள், அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை மற்றும் பேச்சு மொழி உள்ளிட்டவை அலெக்சாவில் வழங்கப்பட இருக்கிறது.

பயனர்கள் அலெக்சாவிடம் ஏதேனும் கேள்வி கேட்டு அமிதாப் பச்சன் குரலில் அதற்கான பதிலை பெற்றுக் கொள்ளலாம். இந்த அம்சம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்பட இருக்கிறது. இது அமேசான் எக்கோ, ஃபயர் டிவி ஸ்டிக், அலெக்சா செயலி மற்றும் இதர மூன்றாம் தரப்பு சாதனங்களிலும் வழங்கப்பட இருக்கிறது.
டெக்னோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் 7 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ மற்றும் ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் சிறப்பம்சங்கள்
- 7 இன்ச் 1640x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20.5:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
- ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ கிளாஸ் ஜிபியு
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைஒஎஸ் 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம்
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ சென்சார்
- ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
- பின்புற கைரேகை சென்சார், ஏஐ ஃபேஸ் அன்லாக்
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் ஜடைட் மற்றும் காஸ்மிக் ஷைன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவோ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை விவோ வாட்ச் எனும் பெயரில் சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகமாகிறது.
இதற்கான டீசர்களின்படி புதிய விவோ வாட்ச் வட்ட வடிவ டையல், இரண்டு பட்டன்கள் மற்றும் ஆடியோ பிளேபேக் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

இந்த வாட்ச் 42 எம்எம் / 46 எம்எம் என இருவித மாடல்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் வட்ட வடிவ AMOLED டையல், ஸ்டீல் பாடி ரப்பர் மற்றும் லெதர் ஸ்டிராப் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இத்துடன் 5 ஏடிஎம் தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.
இவைதவிர தொடர்ச்சியான இதய துடிப்பு சென்சார், ஜோவி வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் மைக்ரோபோன், என்எஃப்சி, பில்ட் இன் மெமரி அதிகபட்சம் 18 நாட்களுக்கான பேட்டரி லைஃப் கொண்டிருக்கும் என தெரிகிறது. விவோ வா்ச் மாடலில் விவோ ஒஎஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்20 புது எடிஷன் ஸ்மார்ட்போனினை செப்டம்பர் நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் ‘Galaxy Unpacked for Every Fan’ நிகழ்வினை செப்டம்பர் 23 ஆம் தேதி நடத்துகிறது. இந்த விழாவில் கேலக்ஸி எஸ்20 ஃபேன் எடிஷன் மாடல் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஃபேன் எடிஷன் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அந்த வரிசையில், புதிய ஸ்மார்ட்போன் இவ்விழாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்20 ஃபேன் எடிஷன் மாடலில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஐபி68 தர சான்று, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடல் விலை சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
நிறங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி எஸ்20 ஃபேன் எடிஷன் மாடல் கிரீன், ஆரஞ்சு, ரெட் மற்றும் வைட் நிறங்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதே நிறங்கள் அனைத்து சந்தையிலும் விற்பனைக்கு வருமா அல்லது வேறுபடுமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாக இருக்கிறது.
டிக்டாக் அமெரிக்க உரிமத்தை எந்த நிறுவனம் கைப்பற்ற இருக்கிறது என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க உரிமத்தை வழங்க பைட்-டேன்ஸ் நிறுவனம் நிராகரித்து இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக் அமெரிக்க உரிமத்தை பெறுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவில் மட்டும் டிக்டாக் செயலியை சுமார் பத்து கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் டிக்டாக்கை வாங்க மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தி வந்தன. இந்நிலையில், டிக்டாக் அமெரிக்க உரிமம் ஆரக்கிள் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் இந்த தகவல் குறித்து டிக்டாக், வெள்ளை மாளிகை மற்றும் ஆரக்கிள் என எந்த தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வழங்கப்படவில்லை.
முன்னதாக சீன செயலிகள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தங்களை உளவு பார்ப்பதாகவும் கூற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பைட்-டேன்ஸ் நிறுவனம் தங்கள் அமெரிக்க செயல்பாடுகளை 90 நாட்களுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்ற காலக்கெடு விதித்து இருந்தார்.
இதன்படி அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாட்டை நிறுத்துவது அல்லது டிக்டாக் செயலியை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்பதற்கான காலவரையறை செப்டம்பர் 15ம் தேதியுடன் முடிகிறது.
உலகின் முதல் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர் மெரினா பே சாண்ட்ஸ் எனும் பெயரில் சிங்கப்பூரில் திறக்கப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோரை சிங்கப்பூரில் திறந்துள்ளது. இது மெரினா பே சாண்ட்ஸ் என அழைக்கப்படுகிறது. தண்ணீரில் மிதக்கும் இந்த ஆப்பிள் ஸ்டோர் அழகிய உருளை வடிவம் கொண்டு கண்ணாடி குவிமாடத்தால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சிங்கப்பூரில் இது ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாவது விற்பனையகம் ஆகும். முற்றிலும் தண்ணீரின் மேல் மிதக்கும் இந்த விற்பனையகம் நகரின் அழகை முற்றிலும் வேறொரு கோணத்தில் பார்த்து ரசிக்க வழி செய்கிறது.

உருளை வடிவம் கொண்ட மிதக்கும் விற்பனையகத்தில் மொத்தம் 114 கண்ணாடி துண்டுகளும், செங்குத்தாக நிற்கும் பத்து தூண்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் உள்புறம் ரம்மியமான லைட்னிங் பெறும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் மெரினா பே சாண்ட்ஸ் விற்பனையகத்தில் 23 மொழிகளில் பேசும் திறன் கொண்ட சுமார் 150 ஊழியர்கள் வாடிக்கையாளற்களை வரவேற்கின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வழியில் புதிய வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் செப்டம்பர் மாத நிகழ்வில் முந்தைய ஆண்டுகளை போன்று இல்லாமல் ஐபோன் மாடல்கள் அறிமுமகம் ஆகாது. ஐபோன்களுக்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனம் புதிய வாட்ச் மற்றும் ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிசுடன் புதிய ஐபேட் ஏர் மாடலும் அறிமுகமாக இருக்கிறது. இதில் மெல்லிய பெசல்கள் மற்றும் அதிக சக்திவாய்ந்த பிராசஸர் வழங்கப்படலம். இதேபோன்று வாட்ச் மாடல்களுக்கும் அதிக மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது. இம்முறை ஆப்பிள் நிறுவனம் இரண்டு வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

ஐபோன் மாடல்களை போன்றே, ஆப்பிள் வாட்ச் இம்முறை ப்ரோ வேரியண்ட் கொண்டிருக்கும் என தெரிகிறது. ப்ரோ வேரியண்ட் என்பதால், இதன் அம்சங்கள் மற்றும் விலை கூடுதலாக இருக்கும். ப்ரோ மாடலில் 44எம்எம் டையல் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இது வழக்கமான ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் என இரு மாடல்களில் கிடைக்கும் என்றும் இரண்டிலும் அதிநவீன வாட்ச்ஒஎஸ் வழங்கப்பட இருக்கிறது. புதிய வாட்ச் ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, இசிஜி அம்சங்கள் வழங்கப்படாது. இந்த அம்சங்கள் ப்ரோ வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.
புதிய ஆப்பிள் வாட்ச் ஸ்டான்டர்டு மாடலில் எம்9 சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. புதிய ஆப்பிள் வாட்ச் பற்றி அந்நிறுவனம் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
ரெட்மி பிராண்டின் ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனின் நிறம் மற்றும் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் நிறங்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் ரக நாட்ச், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வசதி வழங்கப்படுகிறது. புது ஸ்மார்ட்போன் ரெட்மி 9, ரெட்மி 9ஏ மற்றும் ரெட்மி 9 பிரைம் உள்ளிட்ட மாடல்களை தொடர்ந்து அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் எம்ஐ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனில் டாட் டிராப் ஸ்கிரீன், 4 ஜிபி ரேம், பெரிய பேட்டரி, எம்ஐயுஐ 12 உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 9ஏ மாடலின் மற்றொரு வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 7999 முதல் துவங்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி இந்திய விலை மற்றும் முன்பதிவு விவரங்கள் அறிவிக்கப்பட்டது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போனினை இந்த மாத துவக்கத்தில் நடைபெற்ற அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய முன்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி மாடல் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது.
இத்துடன் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் சாம்சங் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியில் வழங்கப்படுகிறது. இத்துடன் 4 மாதங்களுக்கு யூடியூப் பிரிமியம், மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் 365 வாங்குவோருக்கு 22 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 மாடலில் 7.6 இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே, 6.2 இன்ச் இன்ஃபினிட்டி ஒ கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கவர் டிஸ்ப்ளேவில் பன்ச் ஹோல் கேமராவும், வெளிப்புறம் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களும் வழங்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி சிறப்பம்சங்கள்:
- 7.3 இன்ச் 2208x1768 பிக்சல் QXGA+ 22.5:18 இன்ஃபினிட்டி ஒ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே
- 6.2 இன்ச் 2260x816 பிக்சல் 25:9 HD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் கவர் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ பிராசஸர்
- அட்ரினோ 650 ஜிபியு
- 12 ஜிபி LPDDR5 ரேம்
- 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.5
- டூயல் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, OIS
- 12 எம்பி டெல்போட்டோ லென்ஸ், f/2.4, PDAF, OIS
- 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 10 எம்பி கவர் மற்றும் 10 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் வையர்டு மற்றும் 11 வாட் வயர்லெஸ் சார்ஜிங்






